Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 49)

உலக செய்திகள்

இம்ரான்கான் சொத்துக்கள் பறிமுதல்: பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு

பிரதமர் நவாஸ்செரீப்புக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை சம்பவங்களை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் சொத்துக்களை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ்செரீப் பதவி விலக வலியுறுத்தி கடந்த 2014-ம் ஆண்டு எதிர்க்கட்சிகளான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் கட்சியும், மத போதகர் தஹிருல் காத்ரியின் பாகிஸ்தான் அவாமி தெக்ரீக் கட்சியும் போராட்டம் நடத்தினர். பல நாட்களாக தொடர்ந்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் அதிகாரி …

Read More »

பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி வழங்க புதிய நிபந்தனைகளை விதித்தது அமெரிக்க பாராளுமன்றம்

பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி வழங்குவதற்கு புதிய நிபந்தனைகளை அமெரிக்க பாராளுமன்றம் விதித்துள்ளது. இதுதொடர்பாக சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தீவிரவாத தடுப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கூட்டணி நாடுகள் மேற்கொண்ட செலவுகளை அந்த நாடுகளுக்கு அமெரிக்கா திருப்பி அளித்து வருகிறது. இதற்காக பட்ஜெட்டில் தனியாக நிதியும் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியுதவியை குறைக்க டிரம்ப் தலைமையிலான புதிய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்க ராணுவ அதிகாரச் சட்டத்தில் …

Read More »

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம்

அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அதிபர் டிரம்ப் மீது செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அதிபர் டிரம்ப் மீது செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை …

Read More »

தேர்தல் தோல்வியை அறிந்ததும் கண்ணீர் விட்டு அழுத இங்கிலாந்து பெண் பிரதமர்

தேர்தல் முடிவு எதிர் மறையாக வந்தபோது அதை தாங்கி கொள்ள முடியாமல் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கண்ணீர் விட்டு கதறி அழுதார். இங்கிலாந்தில் கடந்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 2 ஆண்டுகள் இருக்கும் போதே பிரதமர் தெரசா மே முன்கூட்டியே தேர்தல் நடத்தினார். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் கூடுதல் மெஜாரிட்டியுடன் தெரசா மே ஆட்சியை பிடிப்பார் என்று முடிவு வெளியானது. ஆனால் எதிர்பார்த்தது போன்று …

Read More »

மனித உரிமை ஆர்வலர் இறுதி சடங்கில் பங்கேற்க நோபல் பரிசு கமிட்டி தலைவருக்கு சீனா அனுமதி மறுப்பு

சீனாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு புற்றுநோயால் மரணமடைந்த மனித உரிமை ஆர்வலர் இறுதி சடங்கில் பங்கேற்க நோபல் பரிசு கமிட்டி தலைவருக்கு சீனா தூதரகம் அனுமதி மறுத்துள்ளது. மனித உரிமை ஆர்வலர் இறுதி சடங்கில் பங்கேற்க நோபல் பரிசு கமிட்டி தலைவருக்கு சீனா அனுமதி மறுப்பு ஆம்ஸ்டர்டாம்: சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு …

Read More »

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை இல்லை

பப்புவா நியூ கினியாவின் ரபாயுல் நகரத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவின் ரபாயுல் நகரத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக …

Read More »

பாண்டா வடிவத்தில் ராட்சத சோலார் பண்ணை அமைக்கும் சீனா

சீனாவின் மிகப்பெரிய சோலார் நிறுவனம், வேடிக்கையாக ராட்சத பாண்டா வடிவத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின்சக்தி பண்ணையை அமைத்துள்ளது. புவி வெப்பமாயதலை தடுக்க அனைத்து நாடுகளும் அனல்மின் நிலையும், அணுமின் நிலையத்தில் இருந்து சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையாக சோலார் மின்திட்டத்திற்கு மாறி வருகின்றன. அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பயன்படுத்துவதால் அதில் இதிருந்து வெளிப்படும் கார்பன் வாயு புவியை வெப்பமடையச் செய்கிறது. அதேபோல்தான் அணுமின் நிலையத்தில் …

Read More »

வீழ்ந்தது ஐ.எஸ் சாம்ராஜ்யம்: அல்-பக்தாதி மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவிப்பு

சிரியா மற்றும் ஈராக் நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி ராணுவத்தினரின் வான் ஏவுகணை தாக்குதலில் மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (சிரியா மற்றும் ஈராக்கில் நாடு கடந்த இஸ்லாமிய …

Read More »

ஐ.எஸ். அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட மொசூல் நகரில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டதை அந்த நகர மக்கள் நடனம் ஆடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சிரியாவிலும், ஈராக்கின் சில பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் 2-வது மிகப்பெரிய நகரான மொசூலை கைப்பற்றிக் கொண்டனர். அதை, சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தங்களுடைய நாடாகவும் அறிவித்தனர். இதையடுத்து மொசூல் நகரை மீட்பதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் உதவியுடன் …

Read More »

அமெரிக்க தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுக்க ரஷியா திட்டம்

அதிபர் தேர்தலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அமெரிக்க தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் 35 ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா சமீபத்தில் வெளியேற்றியது. மேலும் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க தூதரக வளாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் …

Read More »