கென்யாவில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான உஹூரு கென்யாட்டா (55), மீண்டும் ஜனாதிபதி ஆகும் பொருட்டு களமிறங்கியுள்ளார். ஜூப்ளி கட்சியின் தலைவரான அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரைலா …
Read More »ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக ரூ.3 லட்சம் கோடி நஷ்டஈடு தர தயார்: இங்கிலாந்து அறிவிப்பு
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு நஷ்ட ஈடாக ரூ.3 லட்சம் கோடி தர தயாராக இருப்பதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக இங்கிலாந்து மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் விருப்பம் தெரிவித்தனர். அதை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அறிவித்தார். அதற்கான காலகெடு முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே, அது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் …
Read More »ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொருளாதார தடைகள்: வடகொரியா கடும் கண்டனம்
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்த பொருளாதார தடைக்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகள் மற்றும் ஐ.நா சபையின் கட்டுப்பாடுகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக கடந்த மாதத்தில் மட்டும் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இரண்டு முறை பரிசோதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரியா …
Read More »சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் ஏரியில் மீன் பிடித்த ரஷிய அதிபர் புதின்
சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஏரியில் மீன் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (64). இவர் பன்திறமை கொண்டவர். பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதிவரை கடும் குளிர் நிறைந்த சைபீரியாவில் 3 நாள் விடுமுறையை கழித்தார். அப்போது தைவர் பகுதியில் உள்ள மலை ஏரியில் …
Read More »ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட துக்கதினம்: ஜப்பானில் இன்று அனுசரிக்கப்பட்டது
இரண்டாம் உலகப் போரின்போது 1945-ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்ட 72-ம் ஆண்டு துக்கதினம் இன்று ஜப்பானில் அனுசரிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, உலகின் முதல் அணுகுண்டாக கருதப்படும் ‘லிட்டில் பாய்’ குண்டை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா 6-8-1945 அன்று வீசியது. இரும்பைக் கூட உருக வைக்கும் 4000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தின் அருகிலிருந்த அத்தனையும் பஸ்பமாகின. சுமார், …
Read More »2050-ம் ஆண்டில் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை 11½ கோடியாக உயரும்: ஆய்வில் தகவல்
2050-ம் ஆண்டு சர்வதேச அளவில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் தற்போது 3 கோடியே 60 லட்சம் கண் பார்வையற்றோர் உள்ளனர். இந்த நிலையில் 2050-ம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக உயரும் அபாயம் உள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச அளவில் …
Read More »விசா விதிகள் தளர்வு: புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் படித்த இந்தியர்களுக்கு டிரம்ப் சலுகை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ‘எச் 1-பி’ விசா மீதான கட்டுப்பாடுகளை மாற்றி அமைத்ததால், புதிய குடியுரிமை சட்டத்தின் மூலம் படித்த இந்தியர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு ‘எச்1பி’ விசாவில் அதிரடியாக மாற்றம் கொண்டுவந்தார். அதன் மூலம் அமெரிக்காவுக்கு பணிக்கு செல்வோர் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் ‘ரெய்ஸ்’ என்ற பெயரில் சீரமைக்கப்பட்ட அமெரிக்க புதிய குடியுரிமை சட்டம் …
Read More »ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம்
ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக சேவ் த சில்ரன் சமூக அமைப்பு தெரிவித்து உள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், புரட்சி படையினர் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும் இருக்கின்றன. இரு தரப்பினரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் …
Read More »பொருளாதார தடை: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை
வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க முடிவு செய்ததை அடுத்து அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக ரஷியா செயல்படுவதாகவும், சர்வதேச விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. இதனால் ரஷியாவுக்கும் இதே போல் தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்தது. இது தொடர்பான மசோதா அமெரிக்க …
Read More »வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்: டிரம்ப், ஜப்பான் பிரதமருடன் பேச்சு
வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். வடகொரியா கடந்த வெள்ளிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணையால் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்க நகரங்களையும் தாக்க முடியும். ஏற்கனவே இதேபோன்ற ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி இருந்ததால் 2-வது சோதனையால் அமெரிக்கா கடும் …
Read More »