பெல்ஜியம் ஆண்டு விழாவில் மக்கள் 10000 முட்டைகளை கொண்டு ராட்சத ஆம்லேட் செய்து பகிர்ந்து உண்டது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் ஆண்டு விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் மக்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டாடுவர். இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராமத்தில் உள்ள மக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ராட்சத அளவில் ஆம்லெட் செய்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க …
Read More »சீனாவின் அடாவடி வர்த்தகம் தொடர்பாக விசாரணை நடத்த டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு
அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் சீனா நடத்திவரும் ’டூப்ளிகேட்’ மற்றும் ’கோல்மால்’ வர்த்தக நடைமுறைகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பலத்தை வைத்து அமெரிக்காவை மிரட்டிவரும் வட கொரியாவை கண்டிக்க தவறிய சீனா, வட கொரியாவின் போக்குக்கு ஆதரவு தெரிவித்து வருவது அமெரிக்க அரசுக்கு அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் சீனாவை தனது கைப்பிடிக்குள் …
Read More »வெள்ளத்தால் சீர்குலைந்த நேபாளத்துக்கு 10 லட்சம் டாலர் நிதியுதவி செய்வதாக சீனா அறிவிப்பு
மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சீர்குலைந்துள்ள நேபாள நாட்டுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்ய சீனா முன்வந்துள்ளது. நேபாள நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் 27 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. ரப்தி மற்றும் புதிரப்தி ஆறுகளில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. கரை கடந்து வெளியேறிய வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் …
Read More »வடகொரியாவுடன் இறக்குமதியை நிறுத்திக் கொள்ளும் சீனா
வடகொரியாவுடன் இறக்குமதி செய்த பொருட்களை செப்டம்பர் 5-ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள இருப்பதாக சீனா கூறியுள்ளது. வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த புதிய பொருளாதாரத் தடைக்கும் ஐ. நா பாதுகாப்பு சபையிலுள்ள 15 நாடுகள் ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து வடகொரியாவுடனான இறக்குமதியை நிறுத்திக் கொள்ள இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா தரப்பில், “ஐக்கிய நாடுகளின் தடையை மீறி அணுஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொண்ட வடகொரியாவுடனான இறக்குமதியை …
Read More »கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் வடகொரியா இந்த மாதமும் சோதனை நடத்தினால் வியப்பதற்கில்லை என்று அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வின் இயக்குநர் மைக் போம்போ கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் போருக்கு தயாராக இருப்பதாக கூறியதால், வடகொரியா ஆகஸ்ட் மத்தியில் குவாம் …
Read More »ஆல்கஹாலை உற்பத்தி செய்யும் கோல்டன் பிஷ்
லிவர்பூல், ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வில் தங்க மீன்கள் மற்றும் க்ருஷியன் கார்ப் என்ற மீன்களின் 100 மில்லி லிட்டர் இரத்தத்தில் 50 மில்லி கிராம் அளவுக்கு ஆல்கஹாலை உற்பத்தி செய்வதைக் கண்டறிந்துள்ளனர். பொதுவாக மீன்கள் நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை சுவாசித்து உயிர் வாழ்கின்றன. ஆக்ஸிஜன் இல்லையென்றால் இறந்துவிடும். ஆனால் ஆக்ஸிஜன் இல்லாத சூழலிலும் மீன்கள் உயிர் வாழும் திறன் உடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே …
Read More »பர்கினா பாசோ நாட்டின் உணவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பர்கினா பாசோ நாட்டின் உணவு விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்காவில் கானாவிற்கு அருகில் உள்ள நாடு பர்கினா பாசோ. பர்கினாவின் தலைநகர் ஔகடோவுகோவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும், 8 பேர் காயம் அடைந்ததாகவும் அந்நாட்டின் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் …
Read More »ஆப்கானிஸ்தானில் நடந்த வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் உயிரிழந்தனர். இந்த தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர். ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் சமீப காலமாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வந்த அபு சயீத், கடந்த மாதம் குணார் மாகாணத்தில் நடந்த வான்தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த நிலையில், அந்த இயக்கத்தின் …
Read More »பாகிஸ்தான் சுதந்திர தின விழா: எல்லைப்பகுதியில் மிகப்பெரிய கொடியை ஏற்றி கோலாகல கொண்டாட்டம்
பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர விழாவை அந்நாட்டு மக்கள் மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தெற்காசியாவில் மிகப்பெரிய தேசியக் கொடியை இன்று லாகூர்-அட்டாரி எல்லைப் பகுதியில் ஏற்றப்பட்டது. வெள்ளையரின் ஆட்சியின்கீழ் ஒன்றுபட்ட பாரத தேசமாக அடிமைப்பட்டு கிடந்த நமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தீர்மானித்தபோது, இங்குள்ள இந்துக்களோடு முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியப்படாது. எனவே, முஸ்லிம்களுக்கு என ஒரு தனிநாடு பிரித்து தரப்பட வேண்டும் என …
Read More »பாலின பாகுபாடு காட்டப்படுவதாக புகார் கூறிய பொறியாளர் பதவி நீக்கம்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் பொறியாளராக பணிபுரிபவர் ஜேம்ஸ் டோமோர். இவர் கடந்த வாரம் அந்நிறுவனத்தில் நடக்கும் பாலின பாகுபாடு குறித்து அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அதில், நிறுவனத்தில் ஆண்-பெண் பாகுபாடு அதிகம் பார்க்கப்படுகிறது என்றும், பெண்களுக்கு தொழில்நுட்பத்துறை மற்றும் தலைமை பொறுப்பு போன்ற பதவிகளை கொடுக்க மறுக்கின்றனர் என எழுதியிருந்தார். ஜேம்ஸ் டோமோரின் இந்த அறிக்கை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி …
Read More »