Sunday , November 17 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 42)

உலக செய்திகள்

ட்ரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு

வெள்ளை இனவாத அமைப்புகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவிக்கவில்லை எனக் கூறி அமெரிக்காவின் வர்த்தகக் குழுக்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகி இருக்கிறார்கள். இதனால், அவர் அமைத்திருந்த இரு முக்கிய தொழில் கூட்டமைப்புகளைக் கலைக்க வேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை சார்லட்ஸ்வில் நகரில் நடந்த வன்முறைகளுக்கு வெள்ளை இனவாத அமைப்புகள், அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்க‌ள் ஆகிய இரு தரப்புமே காரணம் என ட்ரம்ப் …

Read More »

இனவாத விவகாரத்தில் மவுனம் கூடாது: அமெரிக்க அமைச்சர்

அமெரிக்காவில் வெள்ளை இனவாதத்தை ஆதரிப்போருக்கும், நாஜி கருத்துகளைக் கடைப்பிடிப்போருக்கும் அந்நாட்டு முன்னாள் போர் வீரர்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் டேவிட் சுக்லின் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் அதிபர் ட்ரம்ப் தொடர்பாக அவர் எந்த கருத்தையும் கூறவில்லை. தாம் கூறியிருப்பது தமது சொந்தக் கருத்து என்றும் அவர் தெரிவித்தார். வரலாற்றைப் புரிந்து கொண்டிருக்கும் நாம் அமைதியாக இருப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வெள்ளை இனவாத எதிர்ப்புப் பேரணியில் ஒரு பெண் …

Read More »

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த கடைசி நகரமும் மீட்பு

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த தல் அபர் என்ற கடைசி நகரமும் நேற்று ராணுவத்தால் மீட்கப்பட்டது. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்த போது மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தன் நாடு ஆக அறிவித்து ஆட்சிசெய்து வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா கை கொடுத்தது. அதன் உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த …

Read More »

தென் கொரியா: கப்பல் கட்டும் தளத்தில் வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி

தென் கொரியா நாட்டில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்தில் டேங்கர் வெடித்த விபத்தில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வர்த்தகப் பகுதியான ஜின்ஹானே என்ற நகரில் எஸ்.டி.எக்ஸ். ஆஃப்ஷோர் என்ற கப்பல் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கிரீஸ் நாட்டில் இருந்து கிடைத்த ஆர்டருக்காக 74 ஆயிரம் டன் கொள்ளளவு கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் …

Read More »

கொரிய தீபகற்பத்தில் போர் கிடையாது: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் திட்டவட்டம்

கொரிய தீபகற்பத்தில் போருக்கு இடம் இல்லை என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் திட்டவட்டமாக கூறினார். வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் புதிய பொருளாதார தடை ஒன்றை விதித்தது. இதற்கு அமெரிக்கா தான் வழிவகுத்தது. இதன்படி வடகொரியா நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, ஈயம், மீன், கடல் உணவுகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது. இதன் காரணமாக, வடகொரிய நாட்டுக்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி …

Read More »

பிரெக்சிட் எதிரொலி: ஐரோப்பிய யூனியன் மக்கள் பிரிட்டனுக்குள் நுழைய விசா தேவை இல்லை

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டனுக்குள் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள பிறநாட்டினர் நுழைய விசா தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது. இனி வரும்காலங்களில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த மக்கள் பிரிட்டனுக்குள் …

Read More »

இந்திய – சீன வீரர்கள் மோதல் குறித்து தகவல் தெரியாது – சீன வெளியுறவு அமைச்சகம்

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் மோதியதாக வெளியான செய்தி குறித்து தகவல்கள் தெரியாது என சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் மோதியதாக வெளியான செய்தி குறித்து தகவல்கள் தெரியாது என சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள பான்காங் ஏரிக்கரையையொட்டி நேற்று காலை 6 மணிக்கு …

Read More »

ஹஜ் யாத்ரீகர்களுக்காக கத்தார் எல்லையை திறக்க சவூதி அரேபிய மன்னர் முடிவு

கத்தாரைச் சேர்ந்த ஹஜ் புனித யாத்ரீகர்களுக்காக அந்நாட்டுடனான எல்லையை மீண்டும் திறக்க சவூதி அரேபிய மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்தாரைச் சேர்ந்த ஹஜ் புனித யாத்ரீகர்களுக்காக அந்நாட்டுடனான எல்லையை மீண்டும் திறக்க சவூதி அரேபிய மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிரவாத இயங்களுக்கு உதவி செய்வதாக கூறி கத்தார் உடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம், எகிப்து, பஹ்ரைன், …

Read More »

தாக்குதல் திட்டத்தை கைவிட்டதால் வடகொரியா அதிபருக்கு டிரம்ப் பாராட்டு

குவாம் தீவை தாக்குவதற்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த 4 ஏவுகணைகளையும் வாபஸ் பெறும்படி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதற்கு டொனால்டு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். வடகொரியாவும் அதையொட்டி உள்ள தென்கொரியாவும் பகை நாடுகளாக உள்ளன. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதால் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால் வடகொரியா மீது அமெரிக்கா பல்வேறு …

Read More »

பிரச்சினைகள் தீர இந்தியா-சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

‘பிரச்சினைகள் தீர இந்தியாவும், சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனராணுவம் ரோடுபோட முயன்றது. அதை இந்தியா தடுத்து நிறுத்தியது. அதை தொடர்ந்து இருநாடுகளும் அங்கு தங்களது ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அங்கு கடந்த 50 நாட்களாக பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் லடாக் பகுதியில் புகழ் பெற்ற …

Read More »