சமாதான பேச்சுவார்த்தையின் பக்கம் அமெரிக்கா நெருங்கிவரும் நிலையில் கூடுதலாக ராக்கெட்கள் மற்றும் வெடிகுண்டுகளை தயாரிக்குமாறு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார் குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை அழித்து விடுவோம் என்று மிரட்டிவரும் வடகொரியாவுக்கு பதில் அளிக்கும் வகையில் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார். எனினும், பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படும் என …
Read More »ஆப்கானிஸ்தான்: தலிபான்களின் தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டு தெற்கு பகுதியில் இன்று தலிபான் இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர் அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து, அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கின. நீண்ட காலமாக நடந்து வரும் இந்த போரில் பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை அந்நாட்டு அரசு …
Read More »ஹாங்காங் நகரை சூறையாடிய ஹாட்டோ புயல் – தெற்கு சீனா வெள்ளக் காடானது
ஹாங்காங் நகரை இன்று சுழற்றியடித்த ஹாட்டோ புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ராட்சத அலைகளின் எழுச்சியால் தெற்கு சீனா வெள்ளக்காடானது. ஆசியாவின் பொருளாதார மையம் என அழைக்கப்படும் ஹாங்காங் நகரை இன்று பத்தாம் எச்சரிக்கை எண் கொண்ட ஹாட்டோ புயல் தாக்கியது. மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த பெரும்புயலால் கடல் அலைகள் சீற்றத்துடன் நகர வீதிகளுக்குள் பாய்ந்து மோதின. புயலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் …
Read More »ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகள்
வாஷிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் உரையாற்றிய அவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய போர் உத்திகள் குறித்து விவரித்தார். இந்த உரை தொலைக்காட்சி மூலமாக நேரலையாக ஒளிபரப்பானது. அப்போது பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் இருக்கக்கூடாது என்பதற்காகவே புதிய அணுகுமுறையை வரையறுத்திருக்கிறோம். யுத்தம் நடத்தி வெற்றி பெறுவதே தமது நோக்கம்’எனத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர் குறித்து, முந்தைய அதிபர்களைத் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்த ட்ரம்ப், தற்போது அவர்களின் நடவடிக்கையைத் …
Read More »தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் முதலிடம்: சீனா சர்டிபிகேட்
தீவிரவாதிகளை வளர்த்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக சீனா வக்காலத்து வாங்கியுள்ளது. தெற்காசிய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் புதிய கொள்கைகள் குறித்து அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ‘பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் அமெரிக்கா நிதியுதவியாக அளிக்கிறது. அதேநேரம், நாம் எதிர்த்துப் போரிட்டுவரும் தீவிரவாதிகளின் புகலிடமாக அந்நாடு விளங்குகிறது. தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் …
Read More »ஆசிய-பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளால் ஆபத்து அதிகரிப்பு: சீனா விமர்சனம்
சிங்கப்பூர் கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அமெரிக்க கடற்படை ஆபத்தானது என சீன ஊடகம் விமர்சனம் செய்துள்ளது. சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவு அருகே சென்று கொண்டிருந்த ஜான் மெக்கெயின் அமெரிக்க போர்க்கப்பல், லிபியாவை சேர்ந்த அல்னிக் என்ற சரக்கு கப்பலுடன் நேற்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இது இந்த ஆண்டு பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கப்பல் ஏற்படுத்திய நான்காவது விபத்தாகும். இந்த …
Read More »அமெரிக்கா, தென்கொரியா இன்று கூட்டு போர் பயிற்சி: வடகொரியா எச்சரிக்கை
கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இன்று நடத்தும் கூட்டு போர்ப்பயிற்சிக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தன்மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடை விதிக்க காரணமான அமெரிக்காவின் குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “அந்த நாட்டின் மீதான பிரச்சினையில் …
Read More »பாக்டீரியாவை அனுப்பி செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன்: நாசா புதிய திட்டம்
உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு பாசி இனங்கள் அல்லது பாக்டீரியாவை அனுப்ப முடிவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலம் மூலம் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில் அங்கு காலனி அமைத்து மனிதர்களை குடியமர்த்த போவதாக தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கனடா வாழ் அமெரிக்கரான வர்த்தகர் எல்கான் முஸ்க் செவ்வாய் …
Read More »அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை விசாரணைக்கு சீனா அதிருப்தி
அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறியவகையில் அமெரிக்கா நடத்திவரும் முறைகேடான வர்த்தக நடைமுறைகள் தொடர்பான விசாரணைக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பலத்தை வைத்து அமெரிக்காவை மிரட்டிவரும் வட கொரியாவை கண்டிக்க தவறிய சீனா, வட கொரியாவின் போக்குக்கு ஆதரவு தெரிவித்து வருவது அமெரிக்க அரசுக்கு அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் சீனாவை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளும் ராஜதந்திர முயற்சிகள் பயனற்றுப் …
Read More »பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து
இந்தியாவின் சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடங்கியிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தார். இந்தியாவின் எரிபொருள் தேவையை அமெரிக்கா நீண்ட கால அடிப்படையில் பூர்த்தி செய்யும் என்றும் டிரம்ப் உறுதியளித்ததாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றுதிரட்டியதற்காக அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி …
Read More »