சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளையும் இந்நாடு பரிசோதித்துள்ளது. அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய விலை …
Read More »வடகொரியாவின் அணு குண்டு பரிசோதனை கவலை அளிப்பதாக உள்ளது
சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் இந்நாடு பரிசோதித்துள்ளது. இந்நிலையில், வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) இன்று பகல் 12.36 மணியளவில் சக்திவாய்ந்த அணு குண்டினை வடகொரியா பரிசோதித்ததாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. வட கொரியா இன்று …
Read More »பிராங்க்பர்ட் நகரில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம்
பிராங்க்பர்ட் நகரில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நகரில் இருந்து சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர். ஜெர்மனி நாட்டின் வர்த்தக மையமாக பிராங்க்பர்ட் நகரம் திகழ்கிறது. உலக அளவில் முக்கிய போக்குவரத்துகளுக்கான சந்திப்பு பகுதியாகவும் இந்த நகரம் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியை எதிர்த்த நாடுகள் ஏராளமான குண்டுகளை வீசின. அப்படி வீசப்பட்ட பல வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. அவை ஜெர்மனி நாட்டின் முக்கிய …
Read More »அமெரிக்காவில் வரலாறு காணாத மழை: 1½ கோடி பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு – 37 பேர் பலி
அமெரிக்காவில் வரலாறு காணாத மழையால் ஹூஸ்டன் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் 1½ கோடி பேர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் தென் பகுதியில் மையம் கொண்டு இருந்த ஹார்வி புயல் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. இதனால் அங்குள்ள ஹூஸ்டன் நகரம், ஆஸ்டின் நகரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடற்கரை நகரமான ஹூஸ்டனில் வரலாறு காணாத அளவுக்கு …
Read More »எகிப்து: பஸ்சுடன் லாரி மோதிய விபத்தில் 14 பேர் பலி
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவை மத்திய பகுதியான பெனி சூயெப் நகருடன் இணைக்கும் பிரதான சாலையில் இன்று பஸ்சுடன் லாரி மோதிய கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எகிப்து நாட்டின் மத்தியப் பகுதியான பெனி சூயெப் நகரை அந்நாட்டின் தலைநகரான கெய்ரோவுடன் இணைக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு சுற்றுலா பஸ் இன்று சென்று கொண்டிருந்தது. சாலையின் எதிர்திசையில் வேகமாக வந்த லாரி 62 பேருடன் வந்த …
Read More »ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல்: ரஷியா கவலை
ஜப்பான் நாட்டின் வான்வெளியில் ஏவுகணையை செலுத்தியுள்ள வடகொரியாவின் போக்கு கொரியா தீபகற்பப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக ரஷியா கவலை தெரிவித்துள்ளது. ஜப்பான் கடல்பகுதியை குறிவைத்து கண்டம்விட்டு கண்டம்பாயும் ஏவுகணையை வடகொரியா இன்று செலுத்தியது. ஜப்பானின் வடபகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவின் மேற்பரப்பில் பறந்த இந்த சக்திவாய்ந்த ஏவுகணை 550 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து, 2700 கிலோமீட்டர் தூரத்தை கடந்துவந்து ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தது. இந்த ஏவுகணை விழுந்த பகுதிக்கு …
Read More »டிரம்ப் கருத்தால் அமெரிக்காவுடனான உறவை தற்காலிகமாக துண்டிக்க பாகிஸ்தான் முடிவு
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்த கருத்தால் அந்நாட்டுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெற்காசியாவுக்கான புதிய கொள்கையை சமீபத்தில் வெளியிட்டார். அதில், ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்திவரும் தாலிபான், ஹக்காணி உள்ளிட்ட பெருவாரியான தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் துணை போவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாகவும் டிரம்ப் காரசாரமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். மேலும், தேவைப்பட்டால் பாகிஸ்தானில் …
Read More »ஹார்வே புயலில் சிக்கிய டெக்சாஸ் பேரழிவு மாகாணமாக டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை பேரழிவு மாகாணம் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து பிரகடனம் செய்துள்ளார். அடுத்த சில நாட்களில் டிரம்ப் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுகிறார். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தை கடந்த சில தினங்களாக ‘ஹார்வே’ புயல் அச்சுறுத்தி வந்தது. இது 4-வது வகை புயலாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு டெக்சாஸ் மாகாணத்தில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. மிகவும் வலிமையான ‘ஹார்வே’ புயல் 12 ஆண்டுகளில் …
Read More »தாய்லாந்து முன்னாள் பெண் பிரதமர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைகிறார்
துபாய்க்கு தப்பி ஓடிய தாய்லாந்து முன்னாள் பெண் பிரதமர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைய திட்டமிட்டுள்ளார். இத்தகவலை தாய்லாந்தின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். தாய்லாந்து முன்னாள் பெண் பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா (50). விவசாயிகளுக்கு அரிசி வழங்கியதில் ஊழல் செய்ததாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே யிங்லக் ஷினாவத்ரா மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக …
Read More »டிரம்ப் தாக்குதல் மிரட்டல்: அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் வெனிசுலா பொது மக்கள்
அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் வெனிசுலா பொது மக்களுக்கு அந்நாட்டு ராணுவம் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்து வருகிறது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி வகிக்கிறார். ஹியூகோ சாவேஸ் மறைவுக்கு பின் 2013-ம் ஆண்டு முதல் இப்பதவியை அவர் வகிக்கிறார். வெனிசுலா எண்ணை வளமிக்க நாடு. சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை சரிவால் இதன் பொருளதார நிலை சீர் குலைந்தது. உணவு பொருட்கள் தட்டுப்பாடு, …
Read More »