கேட்டலோனியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மக்களில் பெரும்பாலானோர் ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாக ஆக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கேட்டலோனியா மாநில அரசு விடுதலை அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ள அதேநேரத்தில் ஸ்பெயின் அரசு கேட்டலோனிய ஆட்சியைக் கலைத்துவிட்டுப் புதிதாகத் தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ளது. நெருக்கடியான காலக்கட்டத்தில் இதுபற்றி விவாதிப்பதற்காக மாட்ரிட்டில் ஸ்பெயின் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைப் பிரதமர் மரியானோ ரஜோய் கூட்டியுள்ளார். கேட்டலோனியா ஆட்சியைக் கலைக்கும் அரசின் முடிவுக்கு …
Read More »ஜேர்மனியில் மர்ம நபர் கத்தித் தாக்குதல்
ஜேர்மனியின் தென் பிராந்திய நகரான முனிச்சில், நபரொருவர் கத்தியால் தாக்கியதில் ஐந்து பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். எனினும், தாக்குதல்தாரியை பொலிஸார் கைது செய்தனர். திடீரென நடத்தப்பட்ட இத்தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், சைக்கிளில் தப்பியோடிய தாக்குதல்தாரியைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். எனினும், தாக்குதல்கள் வேறு எவராலும் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தினால், அப்பகுதி மக்கள் வீடுகளையும், கட்டடங்களையும் விட்டு …
Read More »இலங்கையில் கடித்த நாய்; பிரான்ஸில் உயிரிழந்த சிறுவன்!
இலங்கையில் குட்டி நாய் ஒன்றிடம் கடிவாங்கிய சிறுவன் பிரான்சில் உயிரிழந்தான். கிழக்கு பிரான்ஸ் நகரான ரோனில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பத்து வயதுச் சிறுவன் தன் குடும்ப சகிதம் விடுமுறையைக் கழிக்கவென இலங்கை வந்தான். திக்வெல்லையில் சஞ்சரித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு குட்டி நாய் அவனது காலைப் பதம் பார்த்தது. குட்டி நாய் என்பதால் அது குறித்து அவனது குடும்பத்தினர் பெரிதும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. நாடு திரும்பிய அவன், கடந்த …
Read More »தாய்வான் வங்கி மோசடி: அரசசார்பற்ற நிறுவனமொன்றும் விசாரணைப்பொறிக்குள்!
தாய்வானில் பிரபல வங்கியொன்றில் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒருதொகை இலங்கையிலுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ள இணைய மோசடி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. இந்த மோசடியுடன் தொடர்புட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இதனுடன் அரச சார்பற்ற நிறுவனமொன்றும் தொடர்புபட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த அரச சார்பற்ற நிறுவனம் கொள்ளையிடப்பட்ட பணத்தின் ஒருபகுதியை தனது கணக்கில் வைப்பிலிட்டுக் கொண்டுள்ளதாகவும், குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இனிவரும் …
Read More »போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம்
போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. ‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற முடியும். இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில் காத்திருப்பு பகுதி, கண்காட்சி பகுதி, …
Read More »அமெரிக்காவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் மேற்கு கடற்கரையோர பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்ந்தது. வீடுகள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்ட வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர். அங்கு 6.6 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானது. புல்டிர் தீவில் 111.8 கி.மீட்டர் (69 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு அலைகள் …
Read More »இலங்கைப் படைகளுடனான பயிற்சி தொடரும்- அமெரிக்கா
அமெரிக்கா: இலங்கைப் படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி போன்ற வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. திருகோணமலையில் கடந்த 2ஆம் திகதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த, அமெரிக்கா – இலங்கைக் கடற்படைகளுக்கு இடையிலான முதலாவது ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இலங்கைக்கான அமெரிக்கத் துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், இலங்கை அரசு நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றில் தொடர்ந்து …
Read More »இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம்
அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது உலகில் உள்ள 101 நாடுகளை சேர்ந்த 468 அமைப்புகள் இணைந்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ‘ஐகேன்’ அமைப்புடன் உலக நாடுகளில் அணு ஆயுதங்களை ஒழிக்கவும், அணு ஆயுதங்களால் ஏற்படும் மிகப்பெரிய பேரழிவை சுட்டிக்காட்டியும் …
Read More »ஜப்பானில் அரசு டெலிவிஷனில் பணிபுரிந்த பெண் திடீரென மரணம் அடைந்தார். இவர் அதிக நேரம் ஓவர் டைம் பணிபுரிந்ததால் மரணம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த பெண் மிவா சடோ (31). இவர் அங்கு அரசு டெலிவிஷனில் பணிபுரிந்து வந்தார். இவர் மாதத்தில் 2 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்தார். 159 மணி நேரம் ஓவர் டைம் (கூடுதல் நேரம்) பணிபுரிந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்தார். இவர் அதிக நேரம் ஓவர் டைம் பணிபுரிந்ததால் மரணம் அடைந்து விட்டதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் எற்கனவே …
Read More »சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் மீண்டும் ரோடு போடும் பணியை சீனா மீண்டும் தொடக்கம்
இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லையில் சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பீடபூமி உள்ளது. இதற்கு சீனாவும், பூடானும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதற்கு பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில் டோக்லாம் பகுதியில் சீனா கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி சாலை அமைக்க முயன்றது. அதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து சீனாவும், இந்தியாவும் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் …
Read More »