Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 27)

உலக செய்திகள்

பாலம் இடிந்து விழுந்ததில் 9 கட்டுமான தொழிலாளர்கள் பலி

கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில், பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்க மாகாணம் கொலம்பியாவில் சிரஜாரா என்ற இடத்தில் தலைநகர் பகோட்டாவையும், வில்லாவிசென்சியோ நகரையும் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பாலம் இடிந்து விழுந்தது …

Read More »

உலகின் மிக குளிரான இடம் என்ற சாதனை படத்தை சைபீரியா கிராமம்

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் குளிர்காலம் இருந்து வரும் நிலையில் சைபீரியாவில் உலகிலேயே அதிக குளிர் உள்ள நாடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு வரலாறு காணாத வகையில் மைனஸ் 63 டிகிரி வெப்பநிலை ஏற்பட்டுள்ளதால் இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது அதிகபட்ச குளிர் இருக்கும் என்று கூறப்படும் அண்டார்டிகாவை விட சைபீரியாவில் அதிக குளிர் தற்போது நிலவி வருகிறது. குறிப்பாக சைபீரியாவில் …

Read More »

தமிழர்களால் பெருமை படுகிறோம்

தமிழர்களால் தாங்கள் பெருமை படுகிறோம் என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது டுவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர்கள் பொங்கல் திருநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழில் வணக்கம் கூறி …

Read More »

11 வருடங்கள் செக்ஸ் உறவை தவிர்த்த தம்பதி!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திடீரென அதிகப்படியாக உடல் எடை கூடியதால் அவர்கள் செக்ஸ் உறவை 11 வருடங்களாக தவிர்த்து வந்துள்ளனர். தற்போது அவர்களுடைய எடை கிட்டத்தட்ட பாதி குறைந்துவிட்டதால் மீண்டும் செக்ஸ் உறவை தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த லீ மற்றும் ரென ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென இருவரது உடலும் கன்னாபின்னா என்று எடை அதிகரித்து. ஒரு கட்டத்தில் …

Read More »

எச்சரிக்கும் டிரம்ப்; அசராத ஈரான்

வல்லரசு நாடுகளுடன் செய்துக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுள்ளதாக வல்லரசு நாடுகள் குற்றம்சாட்டின. ஈரான் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இதனால் பொருளாதார தடை படிப்படியாக விலக்கிக்கொள்ள இந்த …

Read More »

அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமான வார்த்தையால் திட்டிய டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது தனது தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெளியிட்ட முக்கிய கோஷம், “அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே வேலைகளில் அமர்த்துவோம்” என்பதாகும். இதற்கான நடவடிக்கையிலும் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் விவகாரத்திலும் முன்னுரிமை கொடுத்துதான் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் டொனால்டு …

Read More »

எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் மாற்றமில்லை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையால் 5 முதல் 7.5 லட்சம் இந்தியர்கள் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சட்டம் தளர்வடைந்ததால் அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே பல திடுக்கிடும் சட்டங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அந்நாட்டவரிடம் அமெரிக்க பொருட்களை வாங்குங்கள் என்றும் அமெரிக்கர்களை மட்டுமே பணி அமர்த்துங்கள் என்ற …

Read More »

மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற கணவன்!!

ஜிம்பாப்வேவில் தகாத தொழிலில் ஈடுபடுவதாக மனைவியை சந்தேகப்பட்ட கணவர், கோபத்தில் மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் உள்ள குபிமா என்ற கிராமத்தில் பாஸ்மோர் ஜம்ஹரோ – தொரோதி தஸ்போரா தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கணவருக்கு தன் மனைவி விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக சந்தேகம் வந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சணடை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொருமையை இழந்த மனைவி கணவரை பிரிந்து …

Read More »

சொந்த நாட்டின் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்திய வடகொரியா!

அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அணுகுண்டு சோதனை மூலம் மிரட்டி வரும் வடகொரியா, மூன்றாம் உலகப்போர் வந்தால் அதற்கு காரணமாக இருக்கும் நாடு என்று கூறப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஐநாவின் எச்சரிக்கையை மீறி அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா சமீபத்தில் Hwasong-12 என்ற ஏவுகணையின் சோதனையை நடத்தியபோது அந்த ஏவுகணை வடகொரிய நகரமான டோக்சோன் என்ற நகரத்தில் விழுந்து பெரும் சேதத்தை உண்டாக்கியுள்ளதாக …

Read More »

இனி உரிக்காமலே சாப்பிடலாம்…. இது ஜப்பான் விளைச்சல்!!

ஜப்பான் விவசாயிகள் வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். மோங்கே என பெயரிடப்பட்டுள்ள இந்த வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை விட சுவையானதாம். அதோடு இதன் தோலையும் சாப்பிட முடியுமாம். சாதாரண வாழைப்பழங்களில் தோல் தடிமனாகவும் கசப்பு சுவை அதிகமாக கொண்டதாகவும் இருக்கும். ஆனால் மோங்கே வாழையின் தோல் மிக மெல்லியதாகவும் மிக குறைவான கசப்பு தன்மை கொண்டுள்ளதாம். இந்த வாழைபழத்தை உறைய வைத்து வளர்த்தல் என்ற முறையில் உருவாக்கியுள்ளனர். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு …

Read More »