அமெரிக்காவில் ஹவாய் தீவுகளில் 24 மணி நேரத்தில் தொடர்ந்து 250 நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தற்போது எரிமலை வெடித்து அவசர அவசரமாக மக்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென எரிமலை வெடித்து சாலை வரை எரிமலை குழம்பு பீறிடத்துவங்கியுள்ளது. சாலைகளில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ள நிலையில், எந்நேரமும் எரிமலை குழம்பு வெளியேறலாம் என்ற காரணத்தால், …
Read More »டிரம்ப் நிர்வாண சிலையை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்த ஆராய்ச்சியாளர்
டிரம்ப்பின் நிர்வாண சிலையை ஆராய்ச்சியாளர் ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவரது நிர்வாண சிலை ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த சிற்பி ஒருவர் அவரது கை வண்ணத்தால் உருவாக்கினார். இந்த சிற்பம் அவர் அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு உருவாக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காக நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் 2016-ஆம் ஆண்டு வைக்கப்பட்டிருந்து. இந்த சிலையை ஜுலீயன் நிறுவனம் ஏலம் …
Read More »உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று சத்திர சிகிச்சை பெரு வெற்றி
அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் அடி வயிறு பகுதியில் ஆணுறுப்பு உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அதற்காக அவர் மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை மேற்கொண்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி செயல்பட செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து அவருக்கு மரணம் அடைந்த ஒரு நபரின் உறுப்பை தானமாக …
Read More »விமானத்திற்குள் புழுக்கமாக இருந்ததால் காற்று வாங்க அவசர கால கதவை திறந்த பயணி கைது
சீனாவின் சென்ஜென் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் சென் (25) என்ற நபர் விமானத்தின் அவசர கதவுகளை திறந்து இருக்கிறார். அவசர வழியில் வெளியே செல்ல முயற்சி செய்து இருக்கிறார். இதை பார்த்த விமான பணிப்பெண்கள் உடனடியாக, விமான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். பின் விமானிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் மூன்றுக்கும் …
Read More »அர்மேனியா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார் எதிர்கட்சி தலைவர் நிக்கோல் பாஷின்யான்
ஆசியா-ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள அர்மேனியா நாட்டில் சுமார் 30 லட்சம் வாழ்ந்து வருகின்றனர். முன்னர் ரஷியா தலைமையிலான சோவியத் யூனியனில் அர்மேனியா நாடும் ஒரு அங்கமாக இருந்தபோது ரஷிய ராணுவத்தில் பணியாற்றியவர் செர்ஸ் சர்கிசியான். முன்னாள் அதிபர் அர்மேன் காலத்தில் இருமுறை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2013-ம் தேர்தலிலும் போட்டியிட்டு அதிபராக வெற்றிபெற்ற இவரது …
Read More »நைஜீரியா போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். இதனிடையே, நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரை ஒட்டியுள்ள ஆடமாவா மாநிலத்திற்கு உட்பட்ட …
Read More »பாலியல் வழக்கு விசாரணை: வாடிகன் மூத்த அதிகாரி கோர்ட்டில் ஆஜர்
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான வாடிகனின் 3-வது உயர்ந்த அதிகார மையம், கார்டினல் பெல் (வயது 76) ஆவார். இவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் மூத்த உதவியாளர்களில் ஒருவர். இவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றியபோது, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இந்த குற்றச்சாட்டுகளை கார்டினல் பெல் தொடர்ந்து மறுத்து வருகிறார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அவர் சட்டப்படி சந்திப்பதற்கு வசதியாக விடுமுறையில் செல்வதற்கு கடந்த ஆண்டு போப் ஆண்டவர் …
Read More »பாகிஸ்தானில் ராணுவத்துடனான துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாத இயக்க தலைவர் பலி
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தினர் ஸ்பிளிங்லி, காபு மலைப்பகுதிகளில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினரும், போலீஸ் படையினரும் அந்தப் பகுதிகளை கூட்டாக சென்று சுற்றி வளைத்தனர். எல்லை பாதுகாப்பு படையினரின் வாகனத்தை பார்த்ததுமே பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் பலத்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த …
Read More »அணு ஆயுதங்கள் குறித்து இரான் பொய் கூறுகிறது – இஸ்ரேல்!
அணு ஆயுத திட்டத்தை இரான் ரகசியமாக தொடர்ந்து வந்துள்ளதை நிரூபிக்கும் “ரகசிய அணு கோப்புகள்” என்ற சில கோப்புகளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வெளியிட்டுள்ளார். அணு ஆயுதங்களை சோதனை செய்யவில்லை என்று கூறி இரான் உலக நாடுகளை ஏமாற்றி வந்துள்ளதை காட்டும் ஆயிரக்கணக்கான பக்கங்களுடைய ஆவணங்கள் இஸ்ரேலுக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தன் மீதான தடைகளை நீக்குவதற்கு பிரதிபலனாக அணுத் திட்டத்தை 2015ஆம் ஆண்டு கைவிட இரான் ஒப்புக்கொண்டது. அணு …
Read More »ஆப்கானிஸ்தானில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்: 21 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனம் அருகே நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனத்தின் அருகில் தற்கொலைப்படையினரால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மற்றோரு குண்டும் வெடித்தது. அப்போது அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், பத்திரிக்கையாளர்கள் இருந்தனர். இதனால் பலர் …
Read More »