குளிப்பதற்கு மொபைல் போனை எடுத்துகொண்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… இந்த உலகம் முழுவதும் பலரும் பல்வேறு விதமாக பரிதாபமாக தங்களின் உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் கைப்பேசியின் ஆதிக்கத்தால் பலர் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைப்பேசியின் மூலமாக மின்சாரம் தாக்கி, ரஷிய இளம்பெண் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவில் உள்ள கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சார்ந்த இளம் பெண்ணின் பெயர் எவ்ஜீனியா சுல்யாதியேவா(26). இவர் அங்குள்ள …
Read More »கனடாவில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞர்.!
கனடாவில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞர்.! ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வெள்ளிக்கிழமை டொராண்டோவில் உள்ள ஊடகம் வாயிலாக உறுதிப்படுத்துள்ளனர். மிடில்ஃபீல்ட் சாலை மற்றும் மெக்னிகால் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை பிளாசாவில் …
Read More »காஷ்மீர் நிலவரம் குறித்து மலாலா உருக்கமான பதிவு
காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து பாகிஸ்தான் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்ற வருமான மலாலா நேற்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து வருகின்ற நிலையில், இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா உருக்கமான பதிவு ஒன்றை …
Read More »உலகளாவிய தலைமைப் பண்பு விருதுக்கு சுந்தர் பிச்சை தெரிவு!
உலகளாவிய தலைமைப் பண்பு விருதுக்குச் சுந்தர் பிச்சை மற்றும் அடினா பிரீட்மெனி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தவர். அடினா பிரீட்மேனி அமெரிக்க பங்குச் சந்தை தலைவர் ஆவார் . இவர்கள் இருவருக்கும் அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள, ‘இந்தியா ஐடியா’ மாநாட்டில் , இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »தடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு!!
தைவான் நாட்டின் இலான் பகுதியில் கடுகதித் தொடருந்து தடம்புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 170-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தைவான் நாடின் வடகிழக்கு பகுதியில் உள்ள இலான் கவுன்ட்டியில் கடலோரத்தை ஒட்டிச் செல்லும் விரைவுத் தொடருந்துப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரான தைபெயில் இருந்து டைட்டுங் நகரை நோக்கிச் செல்லும் தொடருந்துகள் இந்த பாதை வழியாக செல்கின்றன. இந்நிலையில் தைபெய் நகரில் இருந்து இந்த பாதை வழியாக நேற்றுச் சென்ற …
Read More »தாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்
கலிபோர்னியாவில் டேவிஸ் நகரை சேர்ந்த பள்ளி சிறுவனின் தாத்தா சமீபத்தில் இறந்து போனார். அவரது உடல் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் அந்த சிறுவன் எரியூட்டப்பட்ட தனது தாத்தாவின் சாம்பலை எடுத்து அதை வைத்து பிஸ்கட்டை தயாரித்துள்ளான். அத்தோடு நிறுத்தாமல், அந்த பிஸ்கட்டை தனது நண்பர்களுக்கும் கொடுத்துள்ளான். பிஸ்கட்டை சாப்பிட்ட பல மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, …
Read More »புவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்கள் காரணமில்லை: டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு புவியின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்ற வாதம் ஒரு புரளி என்று பேசி வந்த டிரம்ப் தற்போது புவியின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்பது புரளி அல்ல என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். “வெப்பநிலை அதிகரிக்கிறது என்பது புரளி என்று நான் நினைக்கவில்லை. வெப்பநிலை வேறுபாடு இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் இது மனிதர்களால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பல்லாயிரம் கோடி டாலர்களை இதற்காக செலவிடவோ, பல பத்து லட்சம் வேலை …
Read More »உலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு
உலக வெப்ப உயர்வு காரணமாக மனிதர்களுக்குத் தேவையான உணவில் பற்றாக்குறை உருவாகக்கூடும். வழக்கத்துக்கு மாறாகப் பூச்சிகள் தானியங்களை அதிகமாக உண்பதால் அந்த நிலை ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உணவுச் சங்கிலியில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. தானியங்கள், மலர்கள், பயிர்கள் ஆகியவற்றின் விளைச்சலுக்கு தேனீக்கள் பெரும்பங்காற்றுகின்றன. தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், மற்ற பூச்சிகள் கட்டுக்கடங்காத பசிக்குள்ளாகுமெனக் கவலைப்படுகின்றனர் ஆய்வாளர்கள். உலக வெப்பம் அதிகரிக்கும்போது அது பூச்சிகளின் வளர்ச்சியை …
Read More »இந்தியா மீது பொருளாதார தடை: மோடியின் கோரிக்கையை ஏற்பாரா டிரம்ப்?
இந்திய அரசு அண்டை நாட்டு தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து போர் ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் செயல்பட்டுவந்தது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா – ரஷ்யா கையெழுத்திட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே, ஈரான் விவகாரத்தில் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்த அமெரிக்கா, ரஷ்யா விவகாரத்திலும் மிரட்டல் விடுத்தது. இந்த மிரட்டல்களை மீறியே இந்தியா ரஷ்யாவுடன் ஒப்பந்தம் வைத்துள்ளது. இந்தனால், இந்தியா …
Read More »1000 பேரை கொன்று குவித்த இந்தோனேஷிய சுனாமி
இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை …
Read More »