ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் மே தினம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
Read More »மன்னாரில் அமைதி வழியில் பேரணி
மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் சிவராத்திரி வளைவு உடைக்கப்பட்டதையும், நந்திக்கொடியை காலால் மிதித்ததையும் கண்டித்து நேற்று மன்னாரில் அமைதி வழியில் பேரணி, கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இன்று காலை 8.30 மணியளவில் ஆலடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்று கூடியவர்கள், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு அமைதிப் பேரணியாக சென்றனர். மாவட்ட செயலகத்திற்கு எதிராக, வீதியின் இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் பதாதைகளையும் ஏந்தியபடி, அமைதி வழியில் எதிர்ப்பை தெரிவித்தனர். மன்னார் மாவட்ட இந்து குருமார் …
Read More »ரணிலுக்கு ஆபத்தா ?
நேற்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பின்போது இரண்டு அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் தோல்வியடைந்தன. வஜிர அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்நாட்டு விவகார, மகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகளே தோல்வியடைந்தன. நேற்று இந்த அமைச்சுக்கள் மீதான விவாதம் நடைபெற்றது. மாலையில் ஆளுந்தரப்பில் உறுப்பினர்கள் குறைவாக இருந்த சமயத்தை பயன்படுத்தி, எதிரணியின் ரஞ்சித் சொய்சா எம்.பி, வாக்கெடுப்பை கோரினார். …
Read More »மகிந்தவின் முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த சந்திரிக்கா
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாட்டில் நிலவும் மின்சாரப் பிரச்சினை தொடர்பில் திடீர் கருத்துத் வெளியிட்டுள்ளனர். மேற்படி 2015, 2017 ஆம் ஆண்டுகளில் சம்பூரில் அமைக்கப்படவிருந்த மின் உற்பத்தி நிலையங்களை தற்போதைய அரசாங்கம் அமைக்காததன் பிரதிபலனையே இன்று எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் தமது காலத்தில் மாத்திரமே சிக்கல் இன்றி மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த …
Read More »இலங்கையின் செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உறுப்பு நாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை …
Read More »நடு வீதியில் திடீரென பற்றி யெரிந்த முச்சக்கர வண்டி
முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு 7 தாமரைத்தடாகத்திற்கு அருகிலுள்ள வீதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »ஐ.தே.க. – கூட்டமைப்பு விவகாரம்: நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணத்தை வெளியிட்டமை தொடர்பான வழக்கில், முறைப்பாட்டாளரும் பிரதிவாதியும் மனுவை மீளப்பெற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, விக்கும் களுவாரச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2015ஆம் …
Read More »காங்கேசன்துறை பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க முயற்சி
காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ராஜபக்ஷ் அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு …
Read More »இலங்கை திரும்பும் அகதிகள்! யாழ் உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்ற நடவடிக்கை
தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் ஈழத் தமிழர்களின் 24 குடும்பங்கள் இலங்கைத் திரும்பவுள்ளனர்.நாளையும், எதிர்வரும் 28ம் திகதியும் குறித்த அகதிகள் இலங்கைத் திரும்பவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் உதவியுடன் அவர்கள் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விசேட விமான சேவைகளின் ஊடாக குறித்த இரண்டு தினங்களிலும், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்பவுள்ளனர். தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் …
Read More »பலாலியில் விரைவில் தரையிறங்கும் இந்திய விமானம்!
யாழ்ப்பாணம் – பலாலி விமானத் தளத்தில் வெகு விரைவில் தமது விமான சேவைகளை இந்தியா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பலாலி விமான நிலையத்தில் அடுத்த மாதத்தில் விமான சேவைகளை …
Read More »