அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் வழங்கவில்லை. அரசியலமைப்பு சபைக்கு இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு, கடந்த 5ஆம் நாள் நடந்த அரசியலமைப்பு சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூரியவினால், இரா சம்பந்தனுக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த நியமனத்துக்கு, சிறிலங்கா அதிபரின் அங்கீகாரம் இன்னமும் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நியமனம் …
Read More »பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மேலதிகமாக 65 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையினால் மேலதிகமாக 1500 பஸ்களும் தனியார் பஸ்கள் 2200 இலிருந்து 2600 வரையான பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக …
Read More »யாழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு
அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.குறித்த நபர்கள் இன்று (புதன்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். கைவிரல் அடையாள பதிவு இயந்திர சுற்று நிருப அமுலாக்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாகவும் அதன் விளைவுகள் குறித்தும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடி சுமுக நிலை ஏற்படுத்துவதற்கே இவர்கள் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். பாதுகாப்பு …
Read More »யாழில் பொலிஸ் மீது தாக்குதல்
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு குறித்து, மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாட்டாளரான பெண்ணின் வீட்டுக்குச் …
Read More »மைத்திரி – மகிந்த இணைவார்களா ? பிரிவார்களா?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான மூன்றாம் கட்ட கலந்துரையாடல் சற்று முன்னர் ஆர்மபமாகியுள்ளது. அத்துடன் இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தொடர்பிலும் கலந்துரையடப்படவுள்ளது.
Read More »பெற்றோரை சோகத்தில் ஆழ்த்திய 16 வயதுடைய மாணவி
மஸ்கெலிய – குலெனுஜி தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இம் முறை கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ள மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாயாரின் சேலையினால் இவ்வாறு தூக்கிட்டு …
Read More »பலாலி விமான நிலையத்தில் தரையிரங்கினார் சந்திரிக்கா!!
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்.
Read More »வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு ஆலோசனை
அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெப்பநிலை 32 பாகை முதல் 41 பாகை செல்சியஸ் வரையிலான எல்லைக்குள் இருக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. இதன் காரணமாக தசைப்பிடிப்புடன் அலர்ச்சி ஏற்படலாம். வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கம்பஹா, அம்பாறை மாவட்டங்களிலும் இத்தகைய நிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் …
Read More »ரூபாவின் மதிப்பு 4.5 சதவீதத்தினால் அதிகரிப்பு
சர்வதேச வர்த்தகத்தின் மூலம் இலங்கைக்கு நன்மையுள்ள இறக்குமதி செலவுகள் மேற்கொள்ளப்படும் பாரிய நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு குறைவடைந்திருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். வெளிநாட்டு நாணயம் பெருந்தொகையில் ஈர்க்கப்பட்ட வாகனத்திற்கான கொடுப்பனவு தங்கம் மற்றும் எரிப்பொருள் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கான செலவை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் காரணமாக தற்பொழுது இந்த இறக்குமதி செலவு குறைந்திருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். இலங்கை மத்திய வங்கியின் …
Read More »முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை!!
பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருடைய கவனைத் தேடிப் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவத்தில் வெட்டிக் கொல்லப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் கழுத்தில் வெட்டிக்கொன்றார் என்று விசாரணைனளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
Read More »