புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கால்வாய் ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகளும், ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. தனியார் பாதுகாப்பு அதிகாரியொருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. குப்பைகள் அகற்ற பாவிக்கும் கறுப்பு நிற பொலித்தீன் பையால் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.
Read More »கொடூர தாக்குதலை நடத்திய மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம்!
புல்வாமா உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா அறிவித்தது. சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டதையடுத்து, அசாருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடையையும் விதித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டது. மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கைகளை உரிய …
Read More »சபாநாயகருக்கு மஹிந்த கடிதம்
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. எனவே இது குறித்து அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. இம்மாதம் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்த விடயம் குறித்த ஒத்தி வைப்பு வேளை பிரேரணையை சமர்பிக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் பிற்பகல்1 – 7.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துகொள்ளுமாறு கோருவதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் கருஜய சூரியவுக்கு …
Read More »நேரத்தை அதிகரிக்க கோரும் மஹிந்த
எதிர்வரும் 07ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு நேரத்தை அதிகரிக்கும்படி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அன்றைய தினம் மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை இடம்பெறுவுள்ள சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதத்தை 01.00 மணி முதல் 07.30 மணி வரை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கையை …
Read More »மாணவர் விடுதிக்குள் இராணுவம் தேடுதல்
வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தின் மாணவர் விடுதி மற்றும் கற்கை நிலையங்கள் இராணுவம் மற்றும் பொலிசாரால் இன்று கடும் சோதனை நடவடிக்கைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் மட்டகளப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு அமைய, வவுனியாவிலும் பல்வேறு பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிசாரால் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இன்றயதினம் காலை 7.30 மணியிலிருந்து …
Read More »மன்னாரில் இராணுவத்தினர் குவிப்பு
மன்னார் நகரின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் முப்படையினரும் இணைந்து கடும் சோதனைகளையும்,தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். உப்புக்குளம், நளவன் வாடி, பள்ளிமுனை, மூர்வீதி ஆகிய கிராமங்களில் பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர் இணைந்து வீதிகளை மறித்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் படையினர் வீட்டில் உள்ள உடமைகளை முழுமையாகச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளதோடு, வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பரிசீலினை செய்து வருகின்றனர்.
Read More »பாதுகாப்புக்கு மத்தியிலும் வாள் வெட்டு குழு யாழில் அட்டகாசம்
தொடர் குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் நாடு முழுவதிலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும், யாழில் இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து இளைஞனொருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, தம்புத்தோட்டம் படை முகாமுக்கு அருகில் குறித்த வாள் வெட்டு சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மிருசுவில் கெற்போலி மேற்கை சேர்ந்த கனகரத்தினம் நிரோசன் (வயது 21) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை …
Read More »உயர் பதவிகளில் இன்று அதிரடி நியமனங்கள்!
சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேலும், சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராகவும், மேலதிக கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன கணக்காய்வாளர் நாயகமாகவும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராகவும், முன்னாள் பொலிஸ்மா …
Read More »தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளின் திட்டம் வெளியாகியது
பௌத்த பெண்கள் விகாரை செல்லும் ஆடைகளை அணிந்து சிங்கள பெண்கள் போன்று தற்கொலை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளின் திட்டம் வெளியாகியது!!! சிங்கள பெண்கள் பௌத்த விகாரைகள் செல்லும் போது வெள்ளை நிற மேல்சட்டை மற்றும் நீளமான சட்டை அணிந்து செல்வது வழமை , இவர்களை போன்று இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பெண்கள் இதில் பெரும்பாலும் மதம்மாற்றப்பட்ட தமிழ் ,சிங்கள பெண்களை பயன்படுத்தி புத்தவிகாரைகளை தாக்கி இன்னும் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி …
Read More »தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்?
நாட்டிலுள்ள பல மத ஸ்தலங்களைில் பெண்களை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது. பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்காக பயன்படுத்துவதற்காக தயார் நிலையிலிருந்து ஆடைகள், சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடித்த வீட்டில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி கிரிஉல்ல பிரதேசத்தில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் முஸ்லிம் பெண்களின் 9 வெள்ளை …
Read More »