இன்று பிற்பகல் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெற உள்ளது. குறித்த கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற உள்ளது. இந் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ இதன்போது நாடாளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டத்தில் அடுத்துவரும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக மேலும் …
Read More »ஜனாதிபதி யார்? கருஜெயசூரியவின் அறிவிப்பு வெளியானது…
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, சிறுவயதில் தான் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவை சென்று பார்ப்பதுண்டு என்றும், அவர் பதவி ஆசைகளிற்கு அடிபணியாமல் நாட்டிற்கு அவசியமான விடயங்களை நிறைவேற்றுவதற்கு தனக்கு பயிற்சியளித்ததாகவும் கூறியுள்ளார். சுத்தமான கரங்களுடனேயே தான் தனது அரசியலை ஆரம்பித்ததாகவும், அதேபோன்று கறைபடியாத கரங்களுடனேயே அரசியலில் இருந்து …
Read More »இசைக்கச்சேரியில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளையராஜா- வைரல் வீடியோ
இளையராஜா என்றாலே இசை தான். அவரின் இசையை மக்களால் மறக்கவே முடியாது, அவ்வளவு நல்ல பாடல்களை கொடுத்தவர். பாடல்கள் ஒருபக்கம் இருந்தாலும் அவரின் சில விஷயங்கள் சர்ச்சையாகிறது. அப்படி தான் நேற்று நடந்த இளையராஜா இசைக் கச்சேரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாடல்கள் பாடிக் கொண்டிருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி இடையில் நுழைந்துள்ளார். அதைப்பார்த்த இளையராஜா என்னவென்று கேட்க, அவர் தாகமாக இருக்கிறது என்றார்கள் அதான் வந்தேன் என கூறினார், …
Read More »இன்னும் 40 நிமிடமே அரசாங்த்திற்குள்ளது! எச்சரிக்கிறார் ஞானசார தேரர்
வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத்திற்குள்ளன என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன் பதவி நீக்கி குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இல்லையேல் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் …
Read More »சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் ?
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியார் தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்றுவருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அனைத்து முஸ்லிம் தலைவர்களுக்கிடையிலேயே குறித்த கலந்துரையாடல் தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க …
Read More »சிங்கங்கள் சீறிப் பாய்ந்தால், ஒட்டகங்களுக்கு ஓடி ஒளிய வேண்டிய நிலையே ஏற்படும்
சிங்கங்கள் சீறிப் பாய்ந்தால் ஒட்டகங்களுக்கு ஓடி ஒளிய வேண்டிய நிலையே ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அத்துரலிய ரதன தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும் கூறுகையில், 21/4 தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எனினும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளை இந்த அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. …
Read More »வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு
வவுனியா அட்டமஸ்கட பகுதியிலிருந்து வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக மாமடு பொலிஸார் இன்று காலை தெரிவித்தனர். நேற்று மாலை வவுனியா அட்டமஸ்கட பகுதியிலுள்ள குளத்திற்கு அருகிலுள்ள மரப் பொந்தில் பொதி ஒன்று காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் அங்கு காணப்பட்ட பொதியை சோதனையிட்ட போது, குறித்த பொதியில் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன. எஸ்.எல்.ஆர் மகசீன் 2, எஸ்.எல்.எல் தோட்டாக்கள் 08, ரி. 56 ரக தோட்டாக்கள் 02, என்பன மீட்கப்பட்டுள்ளன. …
Read More »நல்லூர் வீதியில் தோன்றியுள்ள ஆபத்து
யாழ்.மாநகர சபைக்கு முன்பாக வீதியில் வாகனங்களில் செல்வோர் மிக அவதானமாக செல்லவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.மாநகர சபையிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு பீப்பாயில் நிரப்பிய ஓயில் டிராக்டர் மூலம் எடுத்து சென்றபோது அதில் இருந்து சரிந்து வீதியில் சிந்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகர சபை ஊழியர்கள் வீதியில் மணல் நிரப்பியிருந்தனர். ஆனாலும் மணல் போட்டும் ஓயில் வழுக்கியமையால் நேற்றும் அவ்வீதியில் உந்துருளி ஈருருளி போன்றவற்றில் பயணத்தவர்கள் வழுக்கி விழுந்துள்ளனர். …
Read More »ஜனாதிபதி தேர்தல் டிசம்பர் 7 இல்!
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, புதுடில்லியில் வைத்து நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் ,டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கையின் …
Read More »மோடியை பார்த்து விட்டு நாடு திரும்பினார் மைத்திரி…
இந்திய பிரதமராக மீண்டும் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.20 மணிக்கு புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.196 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஹைதராபாத் ஹவுசில் நேற்று காலை 10.50 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி …
Read More »