அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, அவர் இதனை கூறியுள்ளார். நாடு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சில தூதரகங்கள், பாடசாலைகள் விடுத்த கோரிக்கைக்கமையவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »பொலித்தீன் அற்ற நகரமாக மாறும் யாழ் சாவகச்சேரி!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், நகர சபையினரும், அந்தந்த வட்டார பொதுமக்களும் இணைந்து வீதியோரங்களில் காணப்படும் பொலித்தீன் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
Read More »முஸ்லிம் அமைச்சர்களுக்கு மஹிந்த அழைப்பு
முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது கட்சியில் இணைந்துக்கொள்ள முடியுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கும் செயற்பாட்டை தங்களது கட்சி முன்னெடுத்துள்ளது. ஆகையால் தற்போதுள்ள முஸ்லிம் தலைமைகளும் இதில் இணைந்துக்கொள்ள முடியுமென மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவதற்காக தமது கட்சியை …
Read More »கல்முனை பகுதி மாபெரும் கலவர பூமியாக மாறும் அபாய நிலை!
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாமெனக் கோரி இன்றையதினம் முஸ்லிம் மக்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தமிழர்கள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பில் அமைதியாக இருந்த முஸ்லிம் மக்களை ஹரீஸ் எம்.பி தூண்டிவிட்டு இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட வைத்துள்ளார். நேற்றைய தினம் தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு …
Read More »அடைக்கலநாதனின் பகற்கனவு ஒருபோதும் பலிக்காது
போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் சைவர்களையும் பௌத்தர்களையும் மோத விடும் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். இந்த சூழ்ச்சியில் கத்தோலிக்கர் காலம் காலமாக இலங்கையில் செயற்பட்டு வந்தனர் என்பதைச் செல்வம் அடைக்கலநாதன் இந்தத் தலைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அறிக்கை ஒன்றின் ஊடாகவே அவர் இதனை கூறியுள்ளார். கன்னியா மற்றும் செம்மலை நீராவியடி புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய இரத்தின தேரர் …
Read More »விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!
கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் பின்னர் மாவட்டச் செயலகம் வரை சென்று மாவட்ட அரச அதிபருக்கான மகஜர் மேலதிக மாவட்ட அரச அதிபரிடம் …
Read More »செவ்வாய்கிழமை என்பதில் ரணிலுக்கு குழப்பம்
கல்முனை பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தும் அமைச்சரவை பத்திரத்தை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிப்பதாக பிரதமர் சொல்லியுள்ளார். ஆனால், எந்த செவ்வாய்கிழமை என்பதில் அவருக்கும் குழப்பம் உள்ளது. வாக்குறுதி வழங்குவதில் ரணில் விக்கிரமசிங்க வல்லவர் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி, பா.அரியநேந்திரன். கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த கோரி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை தமிழ் …
Read More »நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும்
கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் குறித்து உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிடின், நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்குமென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தார். இந்த கோரியை முன்னெடுத்து வரும் மதகுருமார்களினால் மேற்கொள்ளப்பட்டும் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்குச் நேற்று சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த பிரச்சினை …
Read More »தற்கொலை தாக்குதல் தொடர்பில் ரஸ்யா வெளியிட்ட புதிய தகவல்
சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் செயற்பட்ட ஐ.எஸ். உறுப்பினர்களே இலங்கையில் குண்டுவெடிப்புக்களை திட்டமிட்டார்கள் என ரஸ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரிகொகோவ் தெரிவித்துள்ளார். சர்வதேச கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள ஐ.எஸ் கட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டு இலங்கையில் உள்ள சர்வதேச ஜிகாத்தின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதல்களை திட்டமிட்டுள்ளனர் என நிபுணர்கள் கருதுகின்றனர் என அவர் …
Read More »அமைச்சர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் பிரதமர் ரணில்
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றுவருகின்றது. அலரிமாளிகையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய நிலை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் குறித்தும் கலந்துரையாடப்படுகின்றன. இந்த சந்திப்பிற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் …
Read More »