சஜித்கு விசேட அழைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு பல்வேறு காரணங்களுக்காக விலகியிருப்பவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், முரண்பட்ட கருத்துக்கள் காரணமாக கட்சியிலிருந்து விலகியிருக்கும் பலர், நாட்டிற்கு சாதகமான முயற்சிகளில் ஈடுபட தயாராக இருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டினார். கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் உரையாடலின் மூலம் …
Read More »ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்!
ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்! முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்த கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி நேற்றையதினம் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டது. அதுமாத்திரமல்லாமல் அங்கிருந்த சட்டத்தரணிகள் மீதும் மக்கள் மீதும் பிக்குகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோாியும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஞானசார தேராின் படங்களை போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு மக்கள் தீயிட்டு எாித்துள்ளனா். முல்லைத்தீவில் …
Read More »பரபரப்படையும் முல்லைத்தீவு! நீதிமன்றில் ஞானசாரசார தேரர்!
பரபரப்படையும் முல்லைத்தீவு! நீதிமன்றில் ஞானசாரசார தேரர்! உயிரிழந்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்த மேதாலங்க தேரரின் உடல் தொடர்பான வழக்கு தற்போது முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரசார தேரர் உள்ளிட்ட பெரும்பாலான பௌத்த பிக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைதந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் உயிரிழந்த தேரரின் உடலை புதைப்பது தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. உயிரிழந்த நீராவியடி பிள்ளையார் …
Read More »புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கோட்டாவுடன் இணைவு!
புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கோட்டாவுடன் இணைவு! விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சே.ஜெயானந்தமூர்த்தி நேற்று பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளதாக பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். பாசிக்குடாவில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சே.ஜெயானந்தமூர்த்தி உட்பட இன்னும் அவரின் ஆதரவாளர்கள் சிலரும் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர். கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் …
Read More »பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு
பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு ஜாதிக ஹெல உரிமை தலைவர் பாட்டளி சம்பிக ரணவக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பிக ரணவக்கவின் கொள்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறந்த இடம் என்றும் பெரமுன் கூறியுள்ளது. அத்துடன் சம்பிக ரணவக்க தற்போது வகிக்கும் மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பதவியை …
Read More »ஜனாதிபதி தேர்தல் குறித்து முறைப்பாடு செய்ய பொலிஸ் பிரிவுகள்
ஜனாதிபதி தேர்தல் குறித்து முறைப்பாடு செய்ய பொலிஸ் பிரிவுகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சகல பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தப் பிரிவு நடவடிக்கை எடுக்கும் என அவர் …
Read More »ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ரணில் திடீர் முடிவு?
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ரணில் திடீர் முடிவு? ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்வாங்கியிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக தானும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் பிரதமர் இருந்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து போட்டியிட எதிர்பார்க்கின்றனர். எனினும் வரும் 24 அல்லது 25ம் திகதி வேட்பாளரது பெயரையும் ஐக்கிய …
Read More »பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம்
பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சிறிய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது. இந்தநிலையிலேயே அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நாடாளுமன்றத்தினை பிரிதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி …
Read More »வவுனியாவிலிருந்து புறப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்தி
வவுனியாவிலிருந்து புறப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்தி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தியாக தீபம் திலீபனின் ஊர்தியுடனான நடைபயணம் இன்று ஆரம்பித்துள்ளது. குறித்த நடைபஅணம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இன அழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து …
Read More »அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி!
அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி! ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது பல முயற்சிகளை மேற்கொள்கின்றதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சட்டத்தை தனது தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று குறிப்பிடும் சட்டமா அதிபர் திணைக்கள சொலிஸ்டர் ஜனரால் தில்ருக்ஷி டயஸ் விக்ரமரத்ன பதவி விலக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் …
Read More »