Thursday , November 21 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 37)

இலங்கை செய்திகள்

காத்தான்குடி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

காத்தான்குடி கடற்கரை

காத்தான்குடி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில், ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சியிலுள்ள கடற்பகுதியில் மிதந்து வந்த சடலமொன்றை, நேற்று பொலிஸார், பொதுமக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர். குறித்த சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. 45 அல்லது 50 வயது மதிக்கத்த இந்த ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், …

Read More »

அடுத்த ஜனாதிபதியை மஹிந்த அறிவிப்பு

ஜனாதிபதியை மஹிந்த அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதியை மஹிந்த அறிவிப்பு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்பார் என்ற நம்பிக்கை எல்பிட்டிய தேர்தல் ஊடாக ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எல்பிட்டிய தேர்தலில் மாபெறும் வெற்றியை பொதுஜன பெரமுன தற்போது பெற்றுள்ளது. அதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என மஹிந்த ராஜபக்ஷ …

Read More »

நவம்பர் 18 பிரதமர் யார் ?

நவம்பர் 18 பிரதமர்

நவம்பர் 18 பிரதமர் யார் ? ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் தானும் அமைச்சராகுவேன் என்று எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார். இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும், தற்போதுள்ள அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கருத்துக்களும் பொதுமக்கள் மத்தியில் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன, மேலும் சிலர் அந்த கருத்துக்களை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அதன் காரணமாக இது தொடர்பான சட்ட நிலையை …

Read More »

கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஜே.வி.பிக்கு ஆதரவு

கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஜே.வி.பிக்கு

கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஜே.வி.பிக்கு ஆதரவு தேசிய மக்கள் சக்தியின் கொள்கை விளக்கம் எதிர்வரும் 26ம் திகதி வெளியிட்டு வைக்கப்படும். பத்தரமுல்ல வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் வெளியீட்டு நிகழ்வு நடக்கும். ஜேவிபியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். சிறுபான்மையினரின் ஆதரவை பெற முயற்சிப்பதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது வேட்பாளர் அநுரகுமாரவுடன் உத்தியோகப்பற்றற்ற முறையில் பேசியதாகவும் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் தமது …

Read More »

இலங்கை வரலாற்றில் முதலிடம் பிடித்த நேற்றைய நாள்!

இலங்கை வரலாற்றில் முதலிடம்

இலங்கை வரலாற்றில் முதலிடம் பிடித்த நேற்றைய நாள்! காலிமுகத்திடல் மக்கள் கூட்டம் இலங்கை வரலாற்றில் முதலிடம் சஜித்தின் வெற்றி நிச்சயம் என்கிறார் அமைச்சர் மனோ ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து கொழும்பு, காலிமுகத்திடலில் நேற்று கூடிய மக்கள் கூட்டம் இலங்கை வரலாற்றில் முதலிடம் பெற்றுள்ளது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். இதனூடாக சஜித்தின் வெற்றி உறுதியாகிவிட்டது எனவும் …

Read More »

கொழும்பில் அதிரடி நடவடிக்கை! வெளியேற்றப்பட்டார் மைத்திரி

கொழும்பில் அதிரடி மைத்திரி

கொழும்பில் அதிரடி நடவடிக்கை! வெளியேற்றப்பட்டார் மைத்திரி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலகியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான கருத்து முரண்பாட்டில் ஜனாதிபதி மைத்ரி சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் முடியும் வரை பேராசிரியர் ரோஹண லக்‌ஷமன் பியதாச தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தேர்தல் பிரச்சார பணிகளில் ஜனாதிபதி மைத்ரி …

Read More »

தீவிரமாக பரவிவரும் டெங்கு

தீவிரமாக பரவிவரும் டெங்கு

தீவிரமாக பரவிவரும் டெங்கு மினுவாங்கொடை தொகுதிக்குட்பட்ட பல பிரதேசங்களில், டெங்குக் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மினுவாங்கொடையின் , நில்பனாகொடை, கோப்பிவத்தை, பொல்வத்தை, கல்லொழுவை போன்ற பகுதிகளில் இது வரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த நோயாளிகள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கம்பஹா, நீர்கொழும்பு, ராகம வைத்தியசாலைகளில் தற்போது இட …

Read More »

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கையானது தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளது. அந்தவகையில் கட்டுப் பணம் செலுத்தப்பட்ட 41 வேட்பாளர்களில் 35 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதேவேளை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு 11.10 முதல் 11.45 வரையான காலப் பகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுவரை இரண்டு எதிர்ப்புகள் மட்டுமே …

Read More »

தேர்தல் செயலகத்தில் மஹிந்த

தேர்தல் செயலகத்தில் மஹிந்த

தேர்தல் செயலகத்தில் மஹிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுஜக பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுஜக பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் மஹிந்த வருகை தந்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     …

Read More »

சிவாஜிலிங்கத்திற்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல்

சிவாஜிலிங்கத்திற்கு

சிவாஜிலிங்கத்திற்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொலை அச்சுறுத்தல் காரணமாக தான் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும் தாம் இருக்கும் இடத்தை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் …

Read More »