மனித உரிமை ஆணைக்குழுவினர் கேப்பாபிலவு விஜயம் கேப்பாப்பிலவு பிளக்குடியிருப்பில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டுள்ளனர். மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி நேற்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராடடத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றைய தினம் …
Read More »பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மனோ கணேசன்
பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மனோ கணேசன் புதிய தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரவேசம் பாதிக்கப்படுகின்றதென தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான அறிக்கை கடந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், சிறுபான்மை கட்சிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இதுகுறித்து நேற்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தின. இச் சந்திப்பின்போது …
Read More »திகளின் வாக்குகள் பொய்த்த நிலையில் தொடரும் பரவிப்பாஞ்சான் போராட்டம்
திகளின் வாக்குகள் பொய்த்த நிலையில் தொடரும் பரவிப்பாஞ்சான் போராட்டம் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை நேற்றைய தினம் இராணுவத்தினர் புகைப்படம் எடுத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக நேற்றுக் காலை முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். …
Read More »வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது
வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது நாளைய தினம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண சபையின் 85ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30இற்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த அமர்வின்போது, வடக்கின் நீர்வழங்கல் மற்றும் …
Read More »இராணுவத்தின் பாலியல் முகாம்களில் தமிழ் பெண்கள்
இராணுவத்தின் பாலியல் முகாம்களில் தமிழ் பெண்கள் ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக தடுத்து வைத்திருந்ததுடன், பாலியல் முகாம்களையும் வைத்திருந்ததாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களை நடத்தியது மற்றும் ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பாலியல் வன்கொடுமைகளுடன் தொடர்புடையதாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உட்பட ஆறு பேரின் விபரங்களையும் இரகசிய அறிக்கையொன்றின் ஊடாக ஐ.ரி.ஜே.பி என்ற சர்வதேச உண்மைக்கும் …
Read More »அரசியலமைப்பு பணிகள் மீள ஆரம்பம் – பிரதமர் ரணில்
அரசியலமைப்பு பணிகள் மீள ஆரம்பம் – பிரதமர் ரணில் இடைநிறுத்தப்பட்டிருந்த புதிய அரசியல் யாப்பு பணிகள் இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி அரசியலமைப்பிற்கான பிரதான வழிநடத்தல் குழு பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இன்று கூடவுள்ளது. புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கும் நோக்கில் முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு நிர்ணயச் சபையாக மாற்றப்பட்டது. இதன்பிரகாரம் அரசியலமைப்பை தயாரிப்பதற்காக பிரதான வழிநடத்தல் குழு நிறுவப்பட்டதோடு அதன் கீழ் 6 உப …
Read More »ஐ.நா.ஆணையாளரின் அறிக்கை மிகக் காட்டமாகவே வெளிவரும்?
ஐ.நா.ஆணையாளரின் அறிக்கை மிகக் காட்டமாகவே வெளிவரும்? ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் இம்முறை நடைபெறும் கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா தொடர்பான அறிக்கை மிகக் காட்டமானதாகவும், எச்சரிக்கை மிகுந்ததாகவும் அமையும் என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34ஆவது அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. அமர்வின் முதல் நாளில் 27ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் …
Read More »பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் உள்ளிட்ட நால்வரை, எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் எம்.கணேசராஜா இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். கொலைச் சந்தேகநபர்களான …
Read More »எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது – பா.டெனிஸ்வரன்
எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது – பா.டெனிஸ்வரன் எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது. எனவே வறுமையை காரணமாக காட்டி கல்வியை இழந்துவிடக்கூடாது என்று வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் …
Read More »போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் மக்கள் வேண்டுகோள்
போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் மக்கள் வேண்டுகோள் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. தீர்வின்றிய நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் தமக்கு அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்குமாறும், …
Read More »