Monday , August 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 303)

இலங்கை செய்திகள்

இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – திருமாவளவன்

இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சை

இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – திருமாவளவன் “இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்” என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதுடன், இந்திய ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், லைக்கா …

Read More »

காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி விரைந்து செயற்பட வேண்டும்

காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி விரைந்து செயற்பட வேண்டும்

காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி விரைந்து செயற்பட வேண்டும் போர்க்குற்ற விசாரணை மற்றும் போருக்குப் பின்னரான நல்லிணக்கம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை பேரவையின் பரிந்துரைகள் தொடர்பில், காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி அரசு உடனடியாக அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடி விவேகானந்தா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா …

Read More »

வில்பத்துக்கு வடக்கே உள்ள காணிகள் பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம் : ஜனாதிபதி கையொப்பம்

வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள 04 பாதுகாக்கப்பட்ட வனங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டார். வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய அனைத்து வனப்பகுதிகளும் இணைக்கப்பட்டு தனியான பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ‘3அ’ பிரிவின் …

Read More »

ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துக! – அரசை வலியுறுத்துகின்றது கூட்டமைப்பு

“ஐ.நா. தீர்மானங்களின் உள்ளடக்கங்களை அவற்றில் உள்ளவாறே இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. “தமிழ் மக்கள் தமது பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள். எனவே, அவர்களது இடர்களுக்கும், வேதனைகளுக்கும் கூடிய விரைவிலே ஒரு முடிவு காணப்படவேண்டும்” என்றும் கூட்டமைப்பு கோரியுள்ளது. 2015ஆம் ஆண்டின் ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி – ஏகமனதாக வியாழக்கிழமை …

Read More »

எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஐ.நாவும் அரசும் பதில் கூற நேரிடும்! – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எச்சரிக்கை

“காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஐ.நாவும் இலங்கை அரசுமே முழுப் பொறுப்பு.” – இவ்வாறு தமிழர் தாயகத்தில் அறவழியில் தொடர்ந்து போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்தனர். கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும், அவர்களுடைய உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் பரவலாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் …

Read More »

போர்க்குற்றச்சாட்டுக்குள்ளான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு விசா மறுத்தது ஆஸி.!

போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு நுழைவு விசா வழங்க ஆஸ்திரேலியா மறுத்துள்ளது. ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றுள்ள தனது சகோதரரைப் பார்ப்பதற்காக, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே ஒரு மாத கால ஆஸ்திரேலிய நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இறுதிப் போரின்போது, 2009 மே 7ஆம் திகதி தொடக்கம், 2009 ஜூலை 20ஆம் திகதி வரை 59 …

Read More »

இலங்கைக்குச் செல்லாதீர்; உலகத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகாதீர்! – ரஜினியிடம் திருமாவளவன் வேண்டுகோள்

லைக்கா நிறுவனம் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்நிகழ்வில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்போது நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கைக்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …

Read More »

சந்திரிகா நாளை யாழ்ப்பாணம் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்குச் செல்கின்றார். தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தால் வடமராட்சிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தொடக்கி வைப்பதற்கும், பார்வையிடுவதற்குமே அவர் யாழ்ப்பாணம் செல்கின்றார். நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்குச் செல்லும் அவர் மூன்று நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

Read More »

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து கடும் வேதனையில் இந்தியா! – சுஷ்மா அதிரடி

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு கடும் வேதனையும் துயரமும் அடைந்தது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வழமைக்கு மாறானது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா இதுவரை வெளியிட்ட கருத்துக்களில் இதுவே கடுமையானது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் …

Read More »

கால அவகாசம்; ஸ்ரீலங்காவை பாதுகாப்பதற்காகவே- சுரேஸ்

ஐக்கிய நாடுகள் சபை 2 வருட கால அவகாசத்தைக் கொடுத்திருப்பது, ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கமாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசத்தை வழங்குவதன் ஊடாக தமிழரசுக் கட்சி எதனைச் சாதிக்கப் போகின்றது என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஜெனீவா அமர்வு குறித்த …

Read More »