Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 300)

இலங்கை செய்திகள்

நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்தாது அனைவரும் ஒன்றிணைவோம்

உறவுகளை இழந்து தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்தாது, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுடனான சந்திப்பின்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் கவனயீர்ப்பு பேராட்டம் இன்று …

Read More »

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் : ஜனாதிபதி திறந்து வைப்பு

அனைத்து பிரதேசங்களிலும் லங்கா சதொச விற்பனை நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்தரத்திலான உணவுப் பொருட்களை குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும். இதற்கமைய, முதலாவது விற்பனை நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கொஹவல நகரில் திறந்து வைக்கப்பட்டது. இதற்கிணைவாக இன்று நாடு பூராகவும் 52 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்பொது நாடு பூராகவும் 380 லங்கா சதொச நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்தவருடத்தில் …

Read More »

தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஆதரவளித்த சந்தேகநபருக்கு 20 வருட சிறைத்தண்டனை

2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஆதரவளித்த சந்தேகநபருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுத்தாக்குதலினால் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் பேஸ் போல் அணியின் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ஆதரவளித்த நாதன் எனப்படும் கனகசபை தேவதாசன் என்பவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு …

Read More »

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மோல்டா விஜயம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மோல்டா நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். உலகளாவிய தலைமைத்துவ அமைப்பின் (Global Leadership Foundation) மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் மோல்டா சென்றுள்ளார். இம்மாநாட்டில் ‘பன்முகத்தன்மையை நிர்வகித்தல் தீவிரவாதத்தை எதிர்த்தலும்’ எனும் குழு விவாதத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் அரசியல் யாப்பை மீறும் செயல்

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மூலமாக நாட்டின் அரசியல் யாப்பை மீறும் நடவடிக்கைகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார். நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்யும் இந்த செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வு பிரிவு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் நாட்டின் இதுவொரு மிகப்பெரிய பகற்கொள்ளை எனவும் …

Read More »

போரின் போது ஆங்காங்கே குற்றங்கள் இடம்பெற்றது உண்மையே : கோட்டா

போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும் நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன். நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால் அரசியலை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி எப்போதும் …

Read More »

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்டக் குழு சிறிலங்கா வருகிறது

உலகின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்டக் குழுவொன்று இந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தெற்காசியப் பிரிவுக்கான உதவித் தலைவர் அன்ட்ரூ மக் டோவல் தலைமையிலான உயர்மட்டக் குழுவே கொழும்பு வரவுள்ளது. இந்தக் குழுவினர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூத்த அமைச்சர்கள், வர்த்தக பிரமுகர்கள், இராஜதந்திர சமூகத்தினர், உள்நாட்டு, வெளிநாட்டு நிதி அமைப்புகள் ஆகியவற்றைச் சந்தித்து, இப்போதைய செயற்பாடுகள் மற்றும் …

Read More »

சிறிலங்கா- அமெரிக்க மரைன் கொமாண்டோக்கள் மீண்டும் கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘மரைன்’ பற்றாலியனுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கே அமெரிக்க கடற்படையின் ‘மரைன்’ படைப்பிரிவினருடன், ‘யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக்’ என்ற தரையிறக்க கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குச் சென்றுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படையின் ‘யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக்’ என்ற தரையிறக்க கப்பல் நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இதில் வந்துள்ள 11 ‘மரைன்’ விரைவுப் படைப்பிரிவைச் சேர்ந்த 375 ‘மரைன்’ படையினர் மற்றும் …

Read More »

போரின் போர்வையில் நடந்த பொதுமக்களின் கொலைகளை பொறுத்துக்கொள்ள முடியாது – சந்திரிகா

போரில் ஈடுபட்ட போர்வையில், அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த எவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் பொறிமுறை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். பலாலியில் உள்ள யாழ்ப்பாண படைகளின் தலைமையகத்தில் கடந்த மார்ச் 25ஆம் நாள், மாலையில் சிறிலங்கா படை அதிகாரிகள், மற்றும் படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய அமைதி மற்றும் …

Read More »

போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது : கோட்டா

நல்லிணக்கத்தை போர்க்குற்ற விசாரணைகள் ஒருபோதும் தோற்றுவிக்காது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வெளிநாட்டு நீதிபதிகளையும், விசாரணைகளையும் ஒரே நேரத்தில் கொண்ட வருவதன் மூலம் இலங்கை வாழ் சமூகங்களை இணைக்க முடிõது. அவ்வாறு செய்ய நினைத்தால், அனைவருக்குமான நல்லிணக்கமாக அது இருக்காது. போருக்குப் பின்னர், எம்மால் என்ன செய்ய முடியும்? பின்னால் …

Read More »