வவுனியா, பாவற்குளம் பகுதியில் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. பாவற்குளம் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25, 26ஆம் திகதிகளில் ஆறுமுகம் இலங்கராசா என்பவருக்கு மின்சாரம் பாய்ச்சி கிணற்றுக்குள் போட்டுக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்காக 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தில்லையம்பலன் …
Read More »யாழ். பல்கலை நிர்வாகத்தின் அடக்குமுறையைக் கண்டித்து கலைப்பீட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் மீள இணைத்துக்கொள்ளுமாறு கோரியும், யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் கலைப்பீட மாணவர்கள் இன்று வியாழக்கிழமையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீள இணைக்காவிடின், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுடன் அனைத்துப் பீடங்களையும் முடக்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கலைப்பீட மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 11ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் …
Read More »வவுனியா வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
வேலைவாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஊர்வலமொன்றை மேற்கொண்டுள்ளனர். வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக எதுவித பதிலும் வழங்கப்படாத நிலையில், இன்றைய தினம் கவனயீர்ப்பு ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் ஒன்றுதிரண்ட பட்டாரிகள், வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். பேருந்து நிலையத்தின் …
Read More »புதிய வர்த்தமானியில் முஸ்லிம்களின் காணிகள் உள்வாங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி விளக்கம்
முஸ்லிம்களுக்கு சட்டரீதியாக உரிமையுள்ள எந்த முஸ்லிம் மத ஸ்தலங்களோ, கிராமங்களோ அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் அரசுக்கு பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஜனாதிபதி செயலாளர் கையொப்பமிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி …
Read More »முள்ளிக்குளம் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு பெருகும் ஆதரவுகள்
மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை ஸ்ரீலங்கா கடற்படையினரிடமிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தி கிராம மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று எட்டாவது நாளாக தொடர்கின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மன்னார் – விடத்தல்தீவு கிராம மக்கள் நேரடியாக விஜயம் செய்து ஆதரவு வழங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 23 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த போராட்டம் முள்ளிக்குளம் கிராம …
Read More »புலிகளை வேவுபார்த்த விமானம்; முதன்முறையாக ஏற்றுக்கொண்டது இந்தியா
வன்னிப் போரின்போது ஸ்ரீலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா இதனைத் தெரிவித்துள்ளார். அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படையின் ராஜாளி தளத்தில் இருந்தே இந்த விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. ஐ.என்.எஸ் ராஜாளி தளத்தின் வெள்ளி விழா மற்றும் இந்திய கடற்படையினால் 29 …
Read More »வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு
இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்க்கும் விடயமானது இலங்கை அரசியலமைப்பிற்கு முரணானதாக அமையும் என்று இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முதல் முறையாக வெளிநாட்டு நீதிபதிகளை போர்க்குற்ற …
Read More »வடமாகாணத்தில் 256 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தி
வட மாகாணத்தில் இருந்து கடந்த ஆண்டு க.பொ.த சாதரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ …
Read More »எமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்வையுங்கள்
காணமல்போனோர் விடயத்தை உதாசீனம் செய்யாது, தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர முன்வரவேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் இருபத்து மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் …
Read More »ஐ.நாவில் அரசின் செயற்பாடு குறித்து விசேட விவாதம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவின் செயற்பாடு என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் விசேட விவாதத்தை நடத்துதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய ஒப்புதல் வழங்கியுள்ளார். கூட்டு எதிர்கட்சி விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த விவாதத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் …
Read More »