மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வரை நட்டஈடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த விபத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கு அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபா வரை நட்டஈடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – மீதொட்டமுல்ல குப்பை மேடு கடந்த 14ஆம் திகதி மாலை …
Read More »நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழப்பு
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதனால் பதுளை, மாத்தறை, மதுகம, அதுருகிரிய, பலிஅத்த, உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார். இயந்திரம் செயலிழந்தமைக்கான காணம் கண்டறியப்படாத நிலையில், செயலிழந்துள்ள இயந்திரத்தை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையம் …
Read More »சிவன் அறக்கட்டளை நிலைத்தின் கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்பணம்
சிவன் அறக்கட்டளை நிலைத்தின் கல்வி மேம்பாட்டு பேரவை இன்றைய தினம் யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இதன்போது கல்வி, விளையாட்டு, கலை ஆகிய துறைகளில் சாதித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான ஊக்குவிப்பு நிதியும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு மேற்படி கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கல்வி மேம்பாட்டு பேரவையின் தலைவர் வடமாகாண ஓய்வுநிலை மாகாண கல்வி பணிப்பாளர் வ.செல்வராசா …
Read More »மீதொட்டமுல்ல அனர்த்தம்; பகிரங்க மன்னிப்பு கோரியது அரசு
கொழும்பு – மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பை மேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசாங்கம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. அனர்த்தத்தின் போது இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். மாத்தறை – தெவிநுவர ரஜமகா விகாரையில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற சமய நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். …
Read More »டெங்கு வைரஸில் மாற்றம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புச் செயலணி எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு வைரஸில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புச் செயலணி குறிப்பிட்டுள்ளது. திடீர் சுகயீனம், காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திடீர் காய்ச்சல் உட்பட சுகயீனம் ஏற்படின் உடனடியாக அருகிலுள்ள …
Read More »வட.கிழக்கில் காணிவிடுவிப்பு தொடர்பாக கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை
வட.கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் காணப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெறவுள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையே நாளையதினம் (திங்கட்கிழமை) இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சந்திப்பில் முப்படையினைச் சேர்ந்த அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதுடன் இவற்றுக்கான தீர்வுகளும் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை: ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி மைத்திரி
படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பதற்கும், விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னரே உத்தரவிட்டிருந்த போதிலும் இதுவரையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை மனவருத்தத்துடன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியை …
Read More »மீதொட்டமுல்ல அனர்த்தம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இரா. சம்பந்தன் இரங்கல்
மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஏப்ரல் 14 ஆம் திகதி இடம்பெற்ற துரதிஷ்ட சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இன்று அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவமானது நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைகளை பாதித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் …
Read More »வடக்கு, கிழக்கு காணி பிரச்சினைகள் : இம்மாதம் இரண்டு முக்கிய பேச்சுக்கள்
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இம்மாதம் இரண்டு முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில் நாளை திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். இதேவேளை, எதிர்வரும் 24 திகதி திங்கட்கிழமை மீள்குடியேற்ற …
Read More »கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்கின்றது
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததும் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொது மக்கள் அடிப்படை வசதிகளற்ற மாதிரிக்கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்டு பல்வேறு பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் இதுவரை அவற்றிற்கு எந்தவொரு தீட்வும் கிடைக்காத நிலையில் தொடர் கவனயீர்ப்பு …
Read More »