மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த பகுதியில் மீதேன் வாயுவின் அளவு அதிகமாக இருப்பதாக ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீதொட்டமுல்லைவில் கடந்த 14ஆம் நாள் குப்பை மேடு சரிந்த விபத்தில் 32 பேர் மரணமாகினர். மேலும் 30இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில், சிறிலங்கா பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, ஜப்பான் நிபுணர்கள் குழுவொன்றை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளது. நேற்று முன்தினம் கொழும்பு வந்த ஜப்பானிய நிபுணர்கள் நேற்று இரண்டாவது நாளாக …
Read More »ஜனாதிபதி கூறினால் அமைச்சில் இருந்து வெளியேறத் தயார்: அர்ஜுன
ஜனாதிபதி எனக்கு இந்த அமைச்சை விட்டுச் செல்லுமாறு கூறினால், செல்லத் தயார் என துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் இந்த அரசாங்கத்தை பெரும் எதிர்பார்ப்புடன் அமைத்தோம். குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பில் நானும் இன்னும் மனவேதனையுடன் தான் உள்ளேன். கடந்த …
Read More »எத்தனை துன்பங்கள் வந்தாலும் போராட்டம் தொடரும்: முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி மக்கள்
பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யப்படும் வரை நிலமீட்பு போராட்டம் தொடரும் என முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி மக்கள் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 30 ஆவது நாளாகவும், மறிச்சிக்கட்டி பகுதியில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 26 ஆவது நாளாகவும் தொடர்கின்றன. தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டமும், முசலிப்பிரதேச மக்களின் …
Read More »இறக்காமத்தில் தொடர்ந்தும் அத்துமீறல்: கிழக்கு சுகாதார அமைச்சர் நேரடி விஜயம்
இறக்காமம் பிரதேசத்தில் ஜந்து பேர் கொண்ட புத்தமதகுருமார் குழுவொன்று தனியார் காணியொன்றிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி பிரவேசித்ததுடன் கட்டிடமொன்றையும் நிர்மாணிக்க முற்பட்டிருந்தனர். சட்டவிரோத சிலை நிறுவல் தொடர்பான சர்ச்சையை மீண்டும் முன்னெடுக்கும் வகையில், சட்டத்தை மீறும் வகையில் காணியினை சுற்றி சுத்தம் செய்தமை தொடர்பாக நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அப்பகுதி மக்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் நிலைமைகளை …
Read More »கோப்பாயில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இருவர் கைது
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைப் பிராய் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த குற்றச்சாட்டில் கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மது உற்பத்தியை தடுக்க பொது மக்கள் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இதேவேளை குறித்த நபர்களின் வீட்டினை நேற்று (வியாழக்கிழமை) சுற்றிவளைத்த பொலிஸார், 1 இலட்சத்து 61 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு …
Read More »அரசாங்கத்தினது எந்த உதவித்திட்டங்களும் எமக்குத் தேவையில்லை: பன்னங்கண்டி மக்கள் தெரிவிப்பு
ஒரு மாத காலத்திற்கு மேலாகப் போராடிவரும் எமக்கு, இந்த அரசாங்கம் வழங்கும் வீட்டுத்திட்டம் போன்ற உதவித்திட்டங்கள் தேவையில்லை, நாம் உழைத்து முன்னேறுவோம். என பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர். தமக்கான காணி உறுதியினை மட்டும் தற்போதைக்கு பெற்றுத்தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 31ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கையில், …
Read More »வவுனியாவில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் திறந்து வைப்பு
வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த காரியாலயம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளன மன்றத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், தர்மபால செனவிரத்தின ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் நகர சபை உபபிதா …
Read More »மீளக்குடியேற்றம், காணாமல்போனோர் விவகாரத்துக்குத் தீர்வு! – ஜனாதிபதி வாக்குறுதி
வடக்கில் மீள்குடியேற்றம் குறித்து நடைபெறும் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்திவரும் போராட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் பிரஸ்தாபித்தார். வடக்கில் அறுபது சதவீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர். அடுத்த மூன்று மாத காலத்தில் மிகுதியானோரும் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள். காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையைக் கவனத்தில் கொண்டு காணாமற்போனோர் தொடர்பான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார். கால அவகாசம் …
Read More »கேப்பாப்பிலவில் 111 ஏக்கரை மட்டும் விடுவிப்பதற்குப் படையினர் இணக்கம்! – கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தகவல்
“முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் 67 குடும்பங்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணியையும், வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு முதன்மை வீதியையும் விடுவிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதியில் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விடுவிப்புத் தொடர்பில் அடுத்த மட்டத்தில் ஜனாதிபதி – பிரதமர் மட்டத்தில் பேசவேண்டியுள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். …
Read More »மஹிந்தவின் சகாக்கள் திருடிய பணத்தை மீட்க சர்வதேச உதவி! – ஐ.தே.க. தெரிவிப்பு
மஹிந்த ஆட்சியில் அமைச்சர்கள் திருடிய பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச உதவிகள் கோரப்பட்டிருக்கின்றன என்று ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஊழல், மோசடியால் இந்த நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாலேயே மக்கள் மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து எம்மிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைத்தனர். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதும், ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் …
Read More »