சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற இந்து பக்தர்களுக்கு, நந்திக் கொடியை ஏந்த வேண்டாம் என்றும், சிவனுக்குரிய கோஷங்களை எழுப்ப வேண்டாம் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இலங்கை மலையக இந்துகுருமார் ஒன்றியம் ஜனாதிபதி, பிரதமர், இந்துசமய விவகார அமைச்சர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பவுள்ளது. தமது ஒன்றியத்தின் சட்டஆலோசகர் ஊடாக இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகிறது என்றும், இது விடயத்தில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டது கவலையளிக்கின்றது …
Read More »13 வயது சிறுமி கூட்டு வல்லுறவு! – தாய், தாத்தா, மாமா பொலிஸாரிடம் சிக்கினர்
பதின்மூன்று வயது நிரம்பிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுமியின் தாத்தாவும், இராணுவ சிப்பாயாக இருந்துவரும் மாமாவும் தனமல்வில பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இப்பாலியல் வல்லுறவுக்கு உடந்தையாக இருந்தவர் என்று கருதப்படும் சிறுமியின் தாயாரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும், தாயின் இரண்டாவது கணவனும் இந்தச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். தனமல்வில பகுதியின் உஸ்ஸகல என்ற கிராமத்தில், மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட சிறுமியை, சிறுமியின் தாத்தா தொடர்ச்சியாகப் …
Read More »வாட்டி வதைக்கிறது வறட்சி! 9 இலட்சம் பேர் பரிதவிப்பு!! – வடக்கிலேயே அதிக பாதிப்பு
நாட்டில் தொடரும் வறட்சி காரணமாக 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குரிய நீரைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குளங்களும், நீர்நிலையங்களும் வற்றிப்போயுள்ளன. இதனால் பலமைல் தூரம் நடத்து சென்றே நீரைப் பெறவேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், சிறுதானியச் செய்கை உட்பட விவசாய நடவடிக்கைகளுக்கும் …
Read More »எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்ததாகவும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் …
Read More »சிறுவர்கள் – பெண்கள் மீதான வன்முறைகள் குறைவடைந்துள்ளன: மட்டு. பிரதி பொலிஸ்மா அதிபர்
மட்டக்களப்பில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் ஜாகொட ஆராச்சி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் நிலையத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்துக்கான தனியான அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ”சிறுவர்கள் மற்றும் பெண்களின் சமூக நிலைமையை மேம்படுத்துவதற்காக நாம் …
Read More »சொந்த நிலத்துக்கே உரிமை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது
சொந்த நிலத்துக்கே உரிமை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேச தமிழ்மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வேறு பிரதேச சிங்கள மீனவர்கள் தமது நிலங்களுக்கு தற்போது உரிமை கொண்டாடிவருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். கொக்கிளாய் கடலில் தமது மீன்பிடிக்கான கரைவலைப்பாடுகளை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளமை தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இன்றைய வழக்கு விசாரணைகளில் கொக்கிளாய் மீனவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகாத நிலையில், வழக்கை அடுத்த மாதம் …
Read More »காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், தேங்காய் உடைத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னால் ஏ9 வீதியின் அருகில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டம் இன்று 60 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், …
Read More »நாட்டில் அதிக வெப்பம்: மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் கொண்ட காலநிலைக்கு ஈடுகொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அதிகளவில் நீர் பருகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சமிந்தி சமரகோன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிக உஷ்ணத்தின் காரணமாக உடம்பின் செயற்பாடுகள் பாரிய தாக்கத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சளியுடன் கூடிய நோய்கள் …
Read More »கிளிநொச்சியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் 1500 ஏக்கா் காணி
கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் இராணுவத்தினர் இதுவரை 1515.7 ஏக்கர் நிலப்பகுதியை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில், அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் தனியார் அனுமதிப்பத்திர காணிகள் 374 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 168. 2 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான 973.5 ஏக்கர் …
Read More »27ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு
தமிழ் மக்கள் பேரவையினரால் வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேரவையின் இணைத் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்தியர் லக்ஸ்மன் தலைமையில் திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் மற்றும் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்டுத்தருமாறும் வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களை வலுப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு நீதி கோரும் வகையில் …
Read More »