சைட்டம் தனியார் மருத்துவமனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 5ஆம் திகதி பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அரசின் பிரதான ஐந்து தொழிற்சங்கங்கள் ஆதரவுத் தெரிவித்துள்ளன.
Read More »‘வடக்கு மக்களுக்கு என்னிடமே விமோசனம் உண்டு’ – மஹிந்த ராஜபக்ஷ
வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான விமோசனம் தன்னிடமே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், வடக்கு – கிழக்கு மக்கள் விமோசனம் பெற தன்னை நோக்கி வரவேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்திய …
Read More »சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்கின்றது: கஜேந்திரன்
கல்வித் துறையில் சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்வதாகவும் வடக்கு – கிழக்கு அரச நிர்வாகங்களிலே சிங்கள மேலாதிக்கம் வளர்ந்து செல்வதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சாவகச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் …
Read More »செட்டிகுளம் மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்
வவுனியா – செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நித்தியானந்தம் என்பவர், ஏற்கனவே பதவி வகித்த பாடசாலைகளில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் இதன் காரணமாக குறித்த நியமனத்தை இரத்து செய்யுமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த பாடசாலைக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்படவேண்டும் எனவும் அதற்கான தகுதி …
Read More »இடைநிறுத்தப்பட்ட ஏறாவூர் நகரசபை அலுவலர்களுக்கு மீள் நியமனம்
ஏறாவூர் நகர சபையில் பணியாற்றிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த 73 ஊழியர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் மேற்கொண்ட நேர்முகத் தேர்வின் பின்னர், குறித்த ஊழியர்களுக்கு ஒப்பந்தம் மற்றும் பதிலீட்டு அடிப்படையில் குறித்த மீள்நியமனங்கள் நேற்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனால், ஏறாவூர் நகரசபையில் உள்ள வெற்றிடங்கள் …
Read More »சர்வதேசத்திடமிருந்து இலங்கையை காப்பாற்றியது நல்லாட்சியே: ஜனாதிபதி
நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டமையால்தான் சர்வதேச குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை பெற்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் நாடாக இலங்கையை மாற்றினோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி-கெட்டம்பே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, எத்தகைய சூழ்ச்சிகள் மற்றும் சவால்கள் வந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும், சுதந்திரக் கட்சி வெளிப்படையான …
Read More »தமிழ் மக்களின் உரிமைகளை மையப்படுத்தி கிழக்கில் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு
‘தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாக ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்துள்ள நிலையில், அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்போது, வடக்கு- கிழக்கு இணைப்பை வலியுறுத்தியும், அப்பாவி விவசாயிகளின் காணி ஆக்கிரமிப்பை …
Read More »ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு திருப்புமுனையில் சென்றுகொண்டிருக்கின்றது: சுமந்திரன்
தற்போதைய ஆட்சியில் சாதகமான பல முன்னேற்றங்கள் நடைபெற்று, ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு ஒரு திருப்புமுனையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தந்தை செல்வாவின் 40ஆவது நினைவுதின நிகழ்வில், ‘ஜெனீவாத் தீர்மானமும் ஈழத் தமிழர் அரசியலும்’ எனும் தலைப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றியபோது- ”எல்லோரும் எங்களைக் …
Read More »மக்களின் இருப்பு கேள்விக்குறியானால் பதவி விலகுவேன்: கோடீஸ்வரன்
“அம்பாறை மாவட்ட மக்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படுமாயின், நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன்” என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அம்பாறை ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “நல்லாட்சியை உருவாக்கிய தமிழ் மக்களுக்கான உரிமை இன்றும் கிடைக்காது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு- …
Read More »தொழிலாளர் தினத்தை கொண்டாட அருகதையற்று தெருவில் நிற்கின்றோம்: கேப்பாப்பிலவு மக்கள்
“அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் தொழிலாளர் தினத்தை கொண்டாடி வருகின்ற நிலையில், தொழிலாளர்களாகிய நாம் இத்தினத்தை கொண்டாட முடியாது நடுத்தெருவில் நிற்கின்றோம்” என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு மக்கள், மே தினமான இன்று (திங்கட்கிழமை) தொழில் உபகரணங்களை வீதியில் வைத்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அதில் கலந்துகொண்டிருந்த ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு பூர்வீக கிராமங்களைச் …
Read More »