மனைவியுடன் கள்ளக் காதலை சேர்த்துவைத்த கணவனின் செயற்பாடு மஹியங்கனை பகுதியில் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காலியில் இருந்து கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் மஹியங்கனைக்கு தொழில் தேடிச் சென்ற இளைஞன், மஹியங்கனையைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் 3 மற்றும் 5 வயதுகளில் குழந்தைகள் உள்ளன. குடும்ப கஷ்டம் காரணமாக குறித்த இளைஞன் மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்றுள்ளார். இக்காலப்பகுதியில் தனது குழந்தைகளுடன் …
Read More »வடக்கு- கிழக்கு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கடும் வறட்சி: 3 இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நிலவிவரும் கடுமையான வறட்சியினால் சுமார் 3 இலட்சம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், வடக்கில் சுமார் 4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 33 ஆயிரத்து 359 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு …
Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகும்வரை பதவியை பறிக்க முடியாது: கீதா
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள கீதா குமாரசிங்க, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் அடிப்படையில் இரட்டை குடியுரிமை உள்ள ஒருவர் இலங்கையின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது எனத் தெரிவித்த …
Read More »சுமந்திரன் கொலை முயற்சி : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 தினங்களுக்கு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் …
Read More »அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வட. மாகாணசபை தவறவிட்டுள்ளது: தவராசா
வடக்கு மாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததைவிட புதிதாக என்ன அபிவிருத்தியை கண்டிருக்கிறது என கேள்வி எழுப்பிய வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, அபிவிருத்திக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபை தவறவிட்டிருக்கின்றது என குற்றஞ்சாட்டியுள்ளார். வட. மாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், …
Read More »பொன்சேகா தலைமையில் அத்தியாவசியச் செயலணி! – முடிவில் மாற்றமே இல்லை என மைத்திரி திட்டவட்டம்
அமைச்சரவையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் பொறுப்புடன் பேசுங்கள் என்று அமைச்சர்களைக் கடிந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் செயலணி நிறுவப்படும் முடிவில் மாற்றமில்லை என்றும் கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்ட சரத் பொன்சேகா விவகாரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. “அரசியல் நோக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்போது மக்களுக்கான அத்தியாவசிய சேவையை …
Read More »உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தி போராட்டம் மேற்கொள்ள மஹிந்த அணி முடிவு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்துவதற்கு மஹிந்த ஆதரவு அணி தீர்மானித்துள்ளது. “பொது எதிரணி எம்.பிக்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது திகதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான ரஞ்சித் டி சொய்சா தெரிவித்தார். உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளபோதிலும் அவற்றுக்கான …
Read More »ஒருபோதும் திரும்பப் பெறமுடியாத பகிரப்பட்ட அதிகாரங்களே தேவை! – சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு
மத்திய அரசால் ஒருபோதும் திரும்பப் பெறப்பட முடியாத அளவுக்குப் பகிரப்பட்ட அதிகாரத்தைத்தான் நாம் தீர்வாகக் கேட்கின்றோம் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம். ‘சுடர் ஒளி’யின் சகோதரப் பத்திரிகையான ‘உதயன்’ பத்திரிகைப் பணியாளர்கள் படுகொலை மற்றும் ஊடக நிறுவனம் மீதான தாக்குல் நடத்தப்பட்டதன் 11ஆவது ஆண்டு நினைவாக நேற்று நடத்தப்பட்ட ‘வேட்கை’ எனும் ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ‘புதிய …
Read More »ஈழத்தின் மாபெரும் ஊடகப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!
ஈழத்தின் மாபெரும் ஊடகப் படுகொலை நிகழ்ந்த 11ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்றாகும். ‘சுடர் ஒளி’யின் சகோதரப் பத்திரிகையான ‘உதயன்’ நிறுவனத்துக்குள் புகுந்த ஆயுததாரிகளினால், ஊழியர்கள் இருவர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நாளான நேற்று ஊடக சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது. ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. 2006ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள …
Read More »ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸாருக்கு கூட்டு எதிரணி நன்றி
கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்திற்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸாருக்கு அந்த கட்சி நன்றி தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மே தின கூட்டம் தொடர்பில் இன்று கூட்டு எதிரணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு குறிப்பிட்டார். கூட்டு எதிரணியால் முன்னெடுக்கப்பட்ட இந்த கூட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கி இருந்ததாகவும் குறிப்பாக பொலிஸார் எந்த தயக்கமும் …
Read More »