Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 275)

இலங்கை செய்திகள்

கீதா குமாரசிங்க விவகாரம்: தீர்ப்பு கைக்கு கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை! – சபாநாயகர் தெரிவிப்பு

“கீதா குமாரசிங்க எம்.பி. தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சம்பந்தமாக எனக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக எழுத்துமூல அறிவிப்பு கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.” – இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுக் காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் என்பன நிறைவடைந்ததை அடுத்து, வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரம் ஆரம்பமானது. …

Read More »

அமைச்சர்கள் சிலருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை! – அது குறித்தும் நடவடிக்கை தேவை என்கிறது ஜே.வி.பி.

தேசிய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலருக்கும், ராஜபக்ஷவினருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இருக்கின்றது. எனவே, இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தில் கீதா குமாரசிங்கவுக்கு ஒருவிதத்திலும், மற்றையவர்களுக்கு ஏனைய விதத்திலும் அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்றதா என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் …

Read More »

தலதா மாளிகைக்கும் செல்கின்றார் மோடி!

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினக் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 11 ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி கொழும்பு வரவுள்ளார். இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹட்டன், கிளங்டன் வைத்தியசாலையை 12ஆம் திகதி மோடி திறந்துவைக்கவுள்ளார். மலையக பயணத்தின்போதே அவர் தலதா மாளிக்கைக்கும் செல்லவுள்ளார். …

Read More »

வடக்கு சுற்றுலா நியதிச்சட்டத்திற்கு நாடாளுமன்றத்திடம் அனுமதி!

வடக்கு மாகாணத்திற்குரிய சுற்றுலா நியதிச்சட்டம் தொடர்பான நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டை வடக்கு மாகாண சபை கோரியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் 46(அ)3(அ) பிரிவின் கீழ்தான் இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்திற்கு விடுப்பதாக குறிப்பிட்ட சபாநாயகர், இந்த அறிவித்தல் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார். அத்தோடு, நியதிச்சட்ட வரைபின் பிரதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் …

Read More »

முள்ளிக்குளம் மக்களின் காணி விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் நேரில் சென்று ஆராய்வு

மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் மக்களின் காணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் இன்று (வியாழக்கிழமை) முள்ளிக்குளம் கிராம மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது காணிகள் அடையாளம் காணப்படாதவர்களுக்கு அடையாளம் கண்டு வழங்கப்பட உள்ள நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு முள்ளிக்குளம் மக்கள் அனைவரையும் தங்களிடம் முள்ளிக்குளம் காணி தொடர்பாக உள்ள சகல விதமான ஆவணங்களின் பிரதிகளுடன் முள்ளிக்குளம் ஆலயத்திற்கு …

Read More »

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியிலிருந்து மோட்டார் செல்கள் மீட்பு

கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் குளத்தை அண்மித்த பகுதியிலிருந்து 17 மோட்டார் செல்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் நபரொருவர் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டார் செல்கள் காணப்படுவதை அவதானித்த அவர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோட்டார் செல்களை மீட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

அமைச்சரவையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் பொறுப்புடன் பேசுங்கள்: ஜனாதிபதி

அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் அவற்றைப் பொது இடங்களில் பேசும்போது பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சரத் பொன்சேகாவுக்கு கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. அவரை அத்தியாவசிய சேவையை முன்னெடுக்கும் செயலணிக்குப் பொறுப்பாக நியமிப்பது …

Read More »

அரசாங்கத்திற்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும்: சிவாஜிலிங்கம்

வடக்கு கிழக்கிற்கு வரும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவர் என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வலி. வடக்கு விடுவிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அந்த வாக்குறுதி வழங்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதத்துடன் …

Read More »

பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பேசவில்லை: பிரதமர்

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வகையிலான பாலமொன்றை அமைப்பது குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் நிலையில், அண்மைய இந்திய விஜயத்தின்போது இதுகுறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அண்மைய இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வது …

Read More »

நீதி கோரி வவுனியாவில் தொடர்கின்றது உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம்! – வலுக்கின்றது பேராதரவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 69ஆவது நாளாகவும் தொடர்ந்தது. இன்று மாலை 3 மணியளவில் போராட்டக் களத்துக்குச் சென்ற மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர், மன்னார் மாவட்ட பெண்கள் சமாசத்தினர், மன்னார் மாவட்ட மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தங்கள் ஆதரவுகளை வழங்கினர்.

Read More »