ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பதவி வெற்றிடமாகியுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க அறிவித்துள்ளார். மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அமைய கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளதால், கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று கடந்த மே 3ஆம் நாள் மேல்முறையீட்டு …
Read More »2020 தேர்தலின் பின்பும் தேசிய அரசே அமையும்! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு
2020 இல் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்தும் தேசிய அரசே அமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய அரசை நிராகரிக்கும் அளவுக்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “நாம் வெற்றிகரமான மே தினக் கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளோம். எமது அரசியல் பலம் அதிகரித்துள்ளதை நாம் உணர்கின்றோம். எமது அடுத்த நகர்வுக்கு அது …
Read More »குளவிகளின் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை!
குளவிகளின் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை! குளவிகள் தாக்கும் அச்சுறுத்தலால் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு -13, கொட்டாஞ்சேனை, சென் லூசியஸ் கல்லூரியிலேயே மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் வளாகத்திலுள்ள மரமொன்றில் குளவிகள் கூடு கட்டியுள்ளன. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று கல் தாக்குதல் காரணமாக குளவிக் கூடொன்று கலைந்துள்ளது. இதையடுத்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் குளவிகள் கொட்டியுள்ளன. மறுநாள் சனிக்கிழமையன்று கொழும்பு மாநகர …
Read More »மஹிந்த கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தால் கூட்டரசு அதிர்ச்சி!
மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்துக்குக் கிடைத்த வெற்றியால் மைத்திரி – ரணில் விக்கிரமசிங்க அரசு அதிர்ச்சியடைந்துள்ளது என்று ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மே தினத்தின் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது பிரதிபலித்துள்ளது. இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் கூட்டத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் மஹிந்த அணியினரின் மே தினப் …
Read More »மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பிலான ஜனாதிபதியின் சந்திப்பில் திருப்பம்
மறிச்சுக்கட்டி, மாவில்லு குறித்து புதிய வர்த்தமானியில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த மாநாடு கூட்டப்படவுள்ளது என முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், முசலியில் முஸ்லிம்களுக்குரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. …
Read More »முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: இன்பராசா
முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை பிரதானமாகக் கொண்டே புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ஆரம்பிக்கப்பட்டதென, அக் கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்துள்ளார். அத்தோடு, மக்களது பிரச்சினைகளையும் வெளிக்கொணர்ந்து தாமாகவே அரசியல் நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு, புதுக்குடியிருப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போதே …
Read More »முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்
இறுதி யுத்த அழிவுகளை பறைசாற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூரும் துக்க தினத்தன்று, விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி அதனை கேளிக்கை நிகழ்வாக மாற்ற வேண்டாமென கோரப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவியான எஸ்.புஸ்பாம்பாள் கூறுகையில், பல இழப்புகளை சந்தித்த அந்த நாளில் மக்களின் உணர்வுகளுக்கு …
Read More »பலாலி படைத்தளத்தில் போர் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு
யுத்தத்தில் உயிர்நீத்த படை வீரர்களின் நினைவுதினம், யாழ். பலாலி படைத் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, பலாலி படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். அத்தோடு, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், கடற்படை தளபதி, வடக்கு மாகாண பிரதேச செயலாளர்கள், மதகுருமார்கள், ஆளுநரின் செயலாளர், …
Read More »திருநெல்வேலியில் ரயர் ஒட்டும் கடை தீக்கிரை
யாழ். திருநெல்வேலி சந்தியில் ரயர் ஒட்டும் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கடையின் பெரும்பகுதி தீக்கிரையாகியுள்ளதோடு பெறுமதி வாய்ந்த பொருட்களும் எரிந்துள்ளன. நேற்றிரவு கடை உரிமையாளர் கடையை பூட்டிவிட்டுச் சென்ற பின்னர் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சென்று பார்த்தபோது கடையின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்தோடு, சுமார் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் எரிந்து சாம்பாலாகியுள்ளன. மின் …
Read More »குறைக்கப்பட்ட மஹிந்தவின் பாதுகாப்பு மீண்டும் அதிகரிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரிவிலிருந்து 50 பேர் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் 42 பாதுகாப்பு அதிகாரிகளை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 பேரை குறைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த 50 பேரை மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவிலிருந்து நீக்கும் நடவடிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, அதற்கான …
Read More »