மஹிந்த அணியால் வட மத்திய மாகாண சபையின் ஆட்சியையோ அல்லது வேறு எந்த மாகாண சபைகளின் ஆட்சியையோ பிடிக்கவே முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாண சபையின் பெரும்பான்மை மஹிந்த அணியிடம் சென்றுள்ள நிலையிலயே சு.கவின் பொதுச் செயலர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மாகாண சபைகளில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெறாது. எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க …
Read More »மூன்று மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்ற மஹிந்த அணி தீவிர முயற்சி!
வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது எனத் தெரியவந்துள்ளது. பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மாகாண சபைகளின் அரச தரப்பு உறுப்பினர்களை நீக்குவதற்கு மைத்திரி அரசு எடுத்த அதிரடி முடிவுகளின் பிரதிபலனாக அம்மாகாண சபைகளில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது. அத்துடன் பெரும்பாலான உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர். வட மத்திய, மத்திய மற்றும் …
Read More »ரணிலின் கோரிக்கையின் பிரகாரமே மலையகத்துக்கு 10 ஆயிரம் வீடுகள்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளின் பிரகாரமே மலையக மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது என்று பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் புதுடில்லி சென்றிருந்தார். இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின்போதே ரணிலால் மலையக மக்களுக்காக மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 10 …
Read More »மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள்! – பிரதமர் மோடி உறுதி
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ஹட்டன் – நோர்வூட் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்துகையில், ஆயிரக்கணக்கான மலையக மக்களுக்கு முன்னிலையில் இந்திய பிரதமர் இவ் வாக்குறுதியை வழங்கியுள்ளார். இதன்போது பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்- ”மலையக மக்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. முதல் தடவையாக …
Read More »ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் இன்று!
ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் வடமராட்சி, பொலிகண்டி- ஊறணி பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. 1985ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு, குண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட 50இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவாக இன்றைய அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. மே 12ஆம் திகதிமுதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் …
Read More »டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் தமிழ் மக்களை அச்சுறுத்த இடமளியோம்: சிவாஜிலிங்கம்
தினமான மே 18ஆம் திகதி, டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் வீடு வீடாக சென்று பொலிஸாரும், இராணுவத்தினரும் எமது தமிழ் மக்களை அச்சுறுவதை அனுமதிக்க முடியாது என வட. மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மே மாதம் 18ஆம் திகதி மத்திய அரசினால் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “மே மாதம் …
Read More »ஐ.நா. வெசாக் பண்டிகை: இறுதிநாள் நிகழ்வில் பங்கேற்க இலங்கை வந்தார் நேபாள ஜனாதிபதி
ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் பண்டிகை தினத்தின் இறுதிநாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இலங்கையை வந்தடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இறுதிநாள் நிகழ்வில் நேபாள ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். நாளைய இறுதிநாள் நிகழ்வில், பல்வேறு உலக நாடுகள் சார்பில் பிரதிநிதிகள் …
Read More »வடமத்திய மாகாண அதிகாரத்தைக் கைப்பற்ற மைத்திரியுடன் மகிந்த அணி பலப்பரீட்சை
வடமத்திய மாகாணசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மைத்திரி- மகிந்த அணிகளுக்கிடையில் கடும் போட்டி எழுந்துள்ளது. மைத்திரி அணியின் வசமுள்ள வட மத்திய மாகாணசபையின் அதிகாரத்தை கைப்பற்றப் போவதாக மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணியின் மே நாள் பேரணியில் பங்கேற்ற வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் நந்தசேனவை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக, சிறிலங்கா அதிபரின் பரிந்துரையின் பேரில் ஹேரத் பண்டா என்ற உறுப்பினரை அமைச்சராக …
Read More »கூட்டமைப்பு அரசாங்கத்திடம் பேரம் பேசவில்லை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த அபிவிருத்தியையும் மையப்படுத்தி ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் பேரம் பேசவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். தமிழ் மக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வனையும், இறுதி தீர்வினையும் பெறுவதற்கே போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்முனை – பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் விளையாட்டு போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே …
Read More »மோடிக்கு பாதுகாப்பு வழங்க கறுப்புப் பூனைகள் கொழும்பு வந்தன
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்கும் கறுப்புப் பூனை கொமாண்டோக்கள் கொழும்பு வந்திருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று மாலை கொழும்பு வரவுள்ளார். நாளை பிற்பகல் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான பணிகளில் சிறிலங்கா அரசாங்கம் 6000 காவல்துறையினரைப் பணியில் அமர்த்தியுள்ளது. எனினும், இந்தியப் பிரதமருக்கான …
Read More »