நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான தலையாய கடமை அரச ஊழியர்களுக்கு காணப்படுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
Read More »வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த கட்டட பகுதியில் தொடர்ந்தும் தேடுதல்
வெள்ளவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த திருமண மண்டபம் ஒன்று இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தொடர்ந்தும் அங்கு தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன. இந்த தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் முப்படையினர் ஈடுபட்டுள்ளதுடன், பொது மக்களின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் கூறினார். எனினும் இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் புதையுண்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சம்பவத்தில் படுகாயமடைந்த 19 …
Read More »யாழ். மாவட்ட அபிவிருத்தி குறித்து பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்
யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் வகையிலான விசேட சந்திப்பொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்று வருகிறது. பிரதமரினால் அறிமுகம் செய்யப்பட்ட பலம் மிக்கதோர் இலங்கை, திட்டமிட்டதோர் பயணம் எனும் தொனிப்பொருளிலான பொருளாதார திட்டத்தின் கீழ் மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அபிவிருத்தி கூட்டத்தில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாநகர சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலக …
Read More »மன்னார் மாவட்ட செயலக கட்டடத் தொகுதி பிரதமரினால் திறந்துவைப்பு
மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்ட செயலக கட்டடத் தொகுதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைத்து, உத்தியோகப்பூர்வமாக பணிகளையும் ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து மாவட்டச் செயலக மைதானத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரதமர் அரச காணிகளுக்கு விண்ணப்பித்திருந்த மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கிவைத்தார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், அமைச்சர்களான வஜீர …
Read More »யோஷிதவின் கோரிக்கை மனு ஒத்திவைப்பு
வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சிகிச்சை பெறுவதற்காக இரண்டு மாத காலத்திற்கு அவுஸ்திரேலியா செல்ல வேண்டி இருப்பதால் வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரியுள்ளார். குறித்த கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்று விளக்கமளிப்பதற்கு காலம் …
Read More »முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கிளிநொச்சியில் தனி சிங்கள கொடி!
கிளிநொச்சி நகரில் சிறுபான்மை இனங்களை சித்தரிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட தனி சிங்கள கொடி சில விஷமிகளால் பறக்கவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பகுதிக்கு பேருந்தில் வந்த சிலரால் இந்த கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலானது, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறிவரும் தமிழ் சமூகத்தை கொந்தளிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த …
Read More »இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இவ்வருடம்!
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இவ்வருடத்தினுள் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக சீனப் பிரதமர் லீ கெகியான் தெரிவித்துள்ளார். ‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ திட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றிருந்த பிரதமர் ரணிலை பீஜிங் நகரில் சந்தித்து கலந்துரையாடியபோதே சீன பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து, நிதி, வணிகம் போன்ற துறைகளை அடிப்படையாகக்கொண்டு, இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை முன்னேற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவியை இலங்கைக்கு …
Read More »தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது: சரத் பொன்சேகா
இறந்தவர்களை நினைவு கூரவும் அஞ்சலி செலுத்தவும் தீபம் ஏற்றவும் எவருக்கும் முடியும் என முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு குறித்து கேட்டபோதே சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கம் பிரபாகரனின் இரத்த உறவினர் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் யுத்த காலத்தில் அவ்வாறு இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்த சரத்பொன்சேகா யுத்தத்தின் …
Read More »யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் பொதுச் சுடரினை ஏற்றி வைத்து, அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் மலர் தூவியும் ஈகைச் சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தியதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினர். …
Read More »இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது : ஜனாதிபதி திட்டவட்டம்
இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் அமைச்சர்கள், சட்டமா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். குறித்த சந்திப்பில் காணாமல் போனோர் தொடர்பாகவும், இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாகவும், …
Read More »