சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள் மற்றும் தனது அமைச்சில் பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமைச்சர் மனோ கணேசன் இந்த விடையங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். தனது அமைச்சுக்குள்ளோ அல்லது வேறு எங்கேயுமோ …
Read More »ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும், மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து இவர்கள் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளராக வடமேல் மாகாணசபை அமைச்சர் சரத் இலங்க சிங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளராக வடமேல் மாகாணசபை அமைச்சர் சுசில் …
Read More »முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத தாக்குதல்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்துமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. இவ்வாறான இனவாத தாக்குதல்களுக்கு எதிராக நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் பூரண கடையடைப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், அதன்போது அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் நிர்வாகங்கள் மற்றும் வர்த்தகர்கள் தமது கடமையில் இருந்து விலகி நடக்குமாறு அவ்வமைப்பு கோரியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக …
Read More »முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்
முஸ்லிம் மக்கள் பொருளாதார பலத்தை கொண்டிருப்பது சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இருப்பிற்கு ஆபத்தென்ற நோக்கிலேயே தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தொடர்ந்து தெரிவித்த அவர், ”முஸ்லிம் மக்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி …
Read More »அரசு இனவாதத்திற்குப் பணிகிறது : எம்.எஸ். சுபைர்
“சிறுபான்மையினருக்கு எதிரான அட்டகாசங்கள் தலை விரித்தாடுகின்றபோது சட்டத்தை அமுல்படுத்த முடியாத அரசாங்கம் இனவாதத்திற்குப் பணிந்து கைகட்டி நிற்கிறது” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார். மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்று (திங்கட்கிழமை) பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் …
Read More »மட்டு. மாவட்டத்தில் குடியரசு தின நிகழ்வுகள்
இலங்கையின் 45வது குடியரசுதின தின நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வைபவம், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட செயலக வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு அதன் பின்னர், உயிர்நீத்த படையினருக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கணக்காளர் எஸ்.நேசராஜா மற்றும் மாவட்ட …
Read More »சாதனைகளே இனத்திற்கு பெருமை: நீதிபதி இளஞ்செழியன்
பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள் சிறந்த சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அந்த சாதனைகளே இனத்திற்கும் மொழிக்கும் பெருமை தேடித் தரும் என்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். ஆதவனின் இணை அனுசரணையில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய நீதிபதி இளஞ்செழியன், …
Read More »நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு!
சயிட்டம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதிலும் 24 மணித்தியால வேலை நிறுத்தத்தினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்புடன் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண வைத்தியர்களும் இணைந்து கொண்டுள்ளதுடன், அவசர சிகிச்சைப் பிரிவுகள் வழமைபோன்று வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலை நிறுத்தம் காரணமாக …
Read More »பாதுகாப்புச் செயலாளருக்கு புதிய பதவி!
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, ஜேர்மனுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது குறித்த பதவியில் உள்ள கருணாதிலக அமுனுகம ஓய்வுபெறவுள்ள நிலையில், அந்த இடத்திற்கு கருணாசேன ஹெட்டியாராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமக்கான புதிய பதவி குறித்து ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், ஜேர்மன் அரசாங்கம் தமது நியமனத்தை ஏற்றுக்கொண்டதும் பதவியேற்பு இடம்பெறலாமெனக் கூறியுள்ளார்.
Read More »முகமாலை துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம்: முக்கிய தடயங்கள் கண்டெடுப்பு
முகமாலை பகுதியில் பொலிஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் மூலமாக தாக்குதல் நடத்திய நபர்களின் தடயப் பொருட்கள் சில கிடைத்துள்ளதுடன் குறித்த பகுதியில் தாக்குதலிற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றின் இலக்கமும் பொலிஸாருக்குக் …
Read More »