Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 263)

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திச் சந்தை திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும், அவர்களது வியாபார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் மாபெரும் கண்காட்சியும், விற்பனையும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான வீ எபெக்ட் (We Effect) ) நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட இணைப்பாளர் ரீ. மயூரன் தெரிவித்தார். ஒன்பதாவது வருடமாக இத்தகைய பெண்களை ஊக்குவிக்கும் சந்தைக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறுவதாக அவர் மேலும் …

Read More »

ஜனாதிபதியின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்! – ஹக்கீம்

ஜனாதிபதியின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதெனவும், இது தொடர்பில் பொலிஸாரும் அசமந்தமாகவே செயற்பட்டனர் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்தோடு, அண்மைய காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுச் செல்கின்ற இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள …

Read More »

கடந்த ஆட்சிக்கால அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது: சம்பந்தன்

கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். அண்மைக்காலமாக தொடரும் சிறுபான்மையினங்களின் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும். கடந்த ஆட்சியில் இந்நிலைமைகள் மிகவும் மோசமாக காணப்பட்டன. …

Read More »

சிறுபான்மை மக்களை மிரட்டும் சிங்கள சுவரொட்டி!

பதுளை வாழ் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில், சிங்கள மொழியிலான சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘சிங்களயாகே இவசீம பரீக்ஷா நொகரனு’ (சிங்களவர்களின் பொறுமையைச் சோதிக்காதே) என்று அச்சிடப்பட்டு, பதுளை முதியங்கனை ரஜமஹா விஹாரையின் பின்னால் செல்லும் பிரதான வீதியின் மதிலில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் அண்மைய நாட்களாக சிறுபான்மை சமூகங்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த சுவரொட்டிகள் அப் பகுதி …

Read More »

மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் அதி உயர் வலுகொண்ட நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் பேரணி ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்வதற்கு முற்பட்ட போது, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நீடித்த சர்ச்சை காரணமாக, குறித்த கல்லூரியை அரசாங்கம் …

Read More »

பெலாரஸ் நாட்டில் இராணுவம் ஆயுதங்களை வாங்குவதற்கு எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை

பெலாரஸ் நாட்டில் இராணுவம் ஆயுதங்களை வாங்குவதற்கு எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். பெலாரஸ் நாட்டில் நடந்த  இராணுவ தளபாடக் கண்காட்சியில், பங்கேற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க, பெலாரஸ் நாட்டில் இருந்து ஆயுத தளபாடங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளதாக கூறியிருந்தார். நாங்கள் பிரதானமாக, எமது கவசவாகனங்களை திருத்தியமைத்து, ஆயுததளபாடங்களை நவீனமயப்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளோம். அத்துடன்ட் புதிய வகையான கருவிகள் …

Read More »

கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிளுக்கு ஆசிரியர் நியமனம்

கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கையில் முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏனைய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் கட்டம் கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனடிப்படையில் ஏனைய 3080 பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கான போட்டிப் பரீட்சைகள் அடுத்த மாதம் முதலாம் வாரமளவில் இடம்பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. பட்டதாரிகளை ஆசிரியர் நிமயனத்துக்குள் …

Read More »

மன்செஸ்டர் குண்டுத் தாக்குதல்: இலங்கை அரசாங்கம் கண்டனம்

பிரித்தானியாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. பிரித்தானியா மன்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகிஷினி கொலன்ன தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் மூலமே இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் …

Read More »

மண்மேடு சரிந்து ஒருவர் உயிரிழப்பு: மாவனெல்லயில் சம்பவம்

கேகாலை மாவட்டம், மாவனெல்ல நகரில் மண் மேடொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவந்த பகுதியொன்றிலேயே மேற்படி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸாருடன் இணைந்து பொதுமக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

வித்தியா படுகொலை வழக்கு: சிறப்பு அமர்விற்கான நீதிபதிகள் நியமனம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான விசேட நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டிப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோரினால் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வழக்கு …

Read More »