Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 261)

இலங்கை செய்திகள்

‘பூர்வீக நிலத்திற்குச் செல்ல அனுமதிக்கவும்’ – கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி

தங்களது பூர்வீக நிலத்தில் மீள்குடியேற அனுமதிக்கக்கோரி 29ஆவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரணைதீவு மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர். கிளிநொச்சி திரேசாம்பாள் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான குறித்த பேரணி, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபரிடமும் மகஜரும் கையளிக்கப்பட்டது. இரணைதீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான …

Read More »

வித்தியா படுகொலை வழக்கு தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும் இன்று நேரில் ஆராய்வர்!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் நடாத்த பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் பரிந்துரை வழங்கினார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற …

Read More »

விடுதலைப்புலிகள் உயிர்ப்பு! பளைச் சூடு நல்ல உதாரணம்!! – இப்படிக் கூறுகின்றார் விமல்

விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றார்கள் என்பதற்குக் கிளிநொச்சித் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “கிளிநொச்சி, பளையில் பொலிஸ் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைச் சாதாரண சம்பவமாக எடுத்துக்கொள்ள முடியாது. மே 18ஆம் திகதிக்கு அடுத்த நாள் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் அது …

Read More »

நாடு மீண்டும் ஓர் இரத்தக்களரியை சந்திக்க இடமளியாதீர்! – அரசுக்கு ஜே.வி.பி. எச்சரிக்கை

லசந்த, தாஜுதீன் கொலை வழக்கு

முப்பது வருட யுத்தத்தின் பின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டிருக்கும் இந்த நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக்களரியை உண்டாக்க அரசு இடமளிக்கக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “கடந்த சில வாரங்களாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதும் வியாபார நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் இனக்கலவரமொன்றுக்குத் தூபமிட்டு வருகின்றன. ஆரம்பத்திலேயே …

Read More »

ஒற்றையாட்சியா? சமஷ்டியா? சொல் தொடர்பில் முடிவில்லை! – உள்ளடக்கத்தை மட்டுமே இடைக்கால அறிக்கையில் உள்வாங்கத் திட்டம்

புதிய அரசமைப்புத் தொடர்பான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை இறுதிசெய்யும் நோக்கோடு கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடந்த அமர்விலும் அரசின் தன்மை குறித்து தெளிவான ஓர் இணக்கம் எட்டப்படவில்லை. புதிய அரசமைப்பிலும் அரசின் தன்மை ஒற்றையாட்சி என்பதாகவே இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த விடயத்தில் இணக்கம் எதுவும் எட்டப்படவில்லை. முன்னதாக அரசின் தன்மை ஒற்றையாட்சி என்றே குறிப்பிடப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல …

Read More »

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இறுதிசெய்யப்படவில்லை!

எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, தனது இடைக்கால அறிக்கையை இறுதி செய்யாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டம். இடைக்கால அறிக்கையை இறுதி செய்வதற்காக வழிநடத்தல் குழு இரண்டாவது தடவையாக நடத்திய இந்த நீண்ட அமர்விலும் முடிவு எட்டப்படவில்லை. புதிய அரசமைப்பை உருவாக்கி இலங்கையில் தீர்வு ஒன்றை எட்டும் முயற்சிக்குக் கிடைத்த  மேலுமொரு பின்னடைவு இது என்று அரசியல் அவதானிகள் தெரிவித்தனர். புதிய அரசமைப்புத் தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்காக அரசமைப்புச் …

Read More »

சுற்று நிருபங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குக! – ஜனாதிபதி பணிப்பு

திடீர் அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த வீடுகளை அரசால் நிர்மாணிப்பதற்கு உரிய நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். குறித்த நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் உரிய தகவல்களின் அடிப்படையில் அந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி தெரிவித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் இன்று சனிக்கிழமை முற்பகல் களுத்துறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கான நட்டஈடு வழங்குதல், …

Read More »

வங்குரோத்தான அரசியல்வாதிகளே இனக்கலவரத்தைத் தூண்டுகிறார்கள்! – எரான் விக்கிரமரட்ன சாடல்

நேர்மையான தேர்தலொன்றின் மூலம் ஆட்சியைப் பிடிக்கமுடியாத நிலையிலுள்ள ஒருசில வங்குரோத்து அரசியல்வாதிகளே இனமுறுகலைத் தூண்டிவிடுகின்றனர் எனவும், அவர்களின் விஷமத்தனத்துக்கு மக்கள் பலியாகிவிடக்கூடாது எனவும் பொது நிறுவனங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார். இனக்கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிக்க முயலும் இவர்கள் அதன்மூலம வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதைத் தடுப்பதற்கு கங்கணங்கட்டி செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். “நாடு துரிதமாக அபிவிருத்தி அடைந்துவருவதால் இத்தகைய விஷமிகளின் …

Read More »

இனவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்! – வல்வெட்டித்துறையில் கூறினார் அமைச்சர் மங்கள

“எமக்கிடையில் இன நல்லிணக்கம் முக்கியமானது. நாட்டில் இன்று பலர் இனவாதக் கருத்துகளைப் பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.” – இவ்வாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த ஆழிக்குமரன் குமார் ஆனந்தனின் நினைவாக, வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில், 75 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள நீச்சல் தடாகத்துக்கான அடிக்கல் …

Read More »

வேற்றுமை உணர்வை இல்லாதொழிக்க வேண்டும்! – விக்கி வலியுறுத்து

தீவிர சிகிச்சை பிரிவில் வடக்கு முதல்வர்

“எம்மிடையே வேற்றுமை இல்லை. மாறாக சிந்தனைத் தெளிவு உண்டு. இந்த நாட்டின் இனங்களுக்கிடையே காணப்படுகின்ற வேற்றுமை உணர்வுகளும் சச்சரவுகளும் அரசியல்வாதிகளாலும் பிற்போக்கு சிந்தனையாளர்களாலும் விதைக்கப்பட்ட ஒரு நச்சு விதையாகும்” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். “இதனை இல்லாதொழிப்பதற்கு அரசு முன்வர வேண்டும். இதற்காக நாம் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து முன்னெடுக்க வேண்டும். தவறான சிந்தனைகள் மாறினால் நாட்டின் அரசியல் …

Read More »