“அரசியல்வாதிகள் அபிவிருத்திக்குப் பதிலாக விருப்பு வாக்குகளை எதிர்பார்த்துச் செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தி செயற்பாடுகளின்போது அரசு விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றிகொள்வதற்கு அரசியல்வாதிகள் சிலர் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்கு பின்னராவது மக்களுக்கு உண்மை நிலையைப் புரியவைத்து அரசின் …
Read More »ஜப்பான் பறந்தார் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்குச் சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 07.15 மணிக்கு இலங்கையிலிருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்தார் விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன. ஜப்பானிலுள்ள இலங்கையர்கள் விடுத்த அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள அவர், சமய நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்த விஜயத்தில் ரொஷான் ரணசிங்க, பியல் நிஷாந்த ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.
Read More »வடக்கில் வறட்சி! – நான்கரை இலட்சம் குடும்பங்கள் பரிதவிப்பு
இலங்கையின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் வறட்சி நீடிப்பதாக இடர் முகாமைத்துவ மைய நிலையம் அறிவித்துள்ளது. வடக்கில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 40 ஆயிரத்து 531 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 20 பேரும், யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 21 …
Read More »இயற்கை அனர்த்தம்: பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்வு! – 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 203ஆக அதிகரித்துள்ளது. ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 264 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 31 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 96 பேர் காணாமல்போயுள்ளனர். ஆயிரத்து 508 வீடுகள் முழுமையாகவும், 7 ஆயிரத்து 617 வீடகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்துள்ள 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 368 …
Read More »இரண்டு மாதங்களுக்குள் மயிலிட்டியை விடுவிப்பதாக தேசிய அரசு உறுதி! – மாவை எம்.பி. தெரிவிப்பு
“வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டிப் பிரதேசம் 2 மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படும் என்று தேசிய அரசு உறுதி வழங்கியுள்ளது.” – இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்இதார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மீள்குடியேற்றம் விடயம் குறித்துப் பேசப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “வலிகாமம் வடக்கு …
Read More »பிரபாகரனோ இல்லை; காணாமல்போனோரை யாரிடம் போய் கேட்பது? – கேள்வி எழுப்புகிறார் வடக்கு ஆளுநர்
“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்போது இல்லை. அப்படியானால் காணாமல்போனவர்களை யாரிடம் போய் கேட்பது?” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “தமிழீழ விடுதலைப்புலிகள், புளொட், ஈரோஸ், இந்திய அமைதிப் படை, இலங்கை இராணுவம் ஆகியன அந்தக் காலத்தில் இங்கே இருந்தன. இந்தப் பகுதியிலிருந்த …
Read More »நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்த பிரதமர் பணிப்பு!
யாழ்.நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருகின்றது எனவும், அதனை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் …
Read More »மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச செயலகங்கள் பராமரித்தல் அவசியம்! – சிறிதரன் எம்.பி. கோரிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் தியாகி திலீபனின் நினைவுத் தூபி போன்றவற்றை மீளப் புனரமைத்துப் பிரதேச செயலகங்கள் பராமரிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- “யாழ்ப்பாண மாவட்டத்தில் …
Read More »காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி பேரெழுச்சியுடன் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட அறவழிப் போராட்டம் நேற்றுடன் 100ஆவது நாளை எட்டியுள்ளது. எனினும், இதுவரையில் அரசிடமிருந்து அவர்களுக்கு உருப்படியான பதில் ஏதும் வழங்கப்படவில்லை. அரசின் பராமுகத்தை – புறக்கணிப்பைக் கண்டித்து கிளிநொச்சியில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் காணாமல் …
Read More »விநாயகமூர்த்திக்கு யாழில் பெருமளவிலானோர் அஞ்சலி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் இறுதிக்கிரியைகள் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், கல்விச் சமூகத்தினர், நீதித்துறையினர், அரசியல்வாதிகள் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். விநாயகமூர்த்தியின் உடலம் நேற்றுக் காலை சாவகச்சேரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது. சுனவீனமடைந்திருந்த விநாயகமூர்த்தி கொழும்பில் உள்ள தனியார் …
Read More »