Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 253)

இலங்கை செய்திகள்

இலங்கையில் கண்ணிவெடிகள் அற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்

கடந்த 30 வருட உள்நாட்டுப் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவான மக்(MAC) நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் , 2002ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றல் பணிகளில் மக் நிறுவனம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. 2025 இல் கண்ணிவெடிகள் …

Read More »

காணாமல் போனோர் விடயத்தில் ஈ.பி.டி.பி.க்கு நேரடி தொடர்பு: சரவணபவன்

”கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் காணாமல் போனோர் குறித்த சம்பவத்திற்கும் நேரடி தொடர்புள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் 450 பேர் வரை காணாமல் போயுள்ளனர்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்தோடு, மெக்ஸ்வல் …

Read More »

பிரதமர் தலைமையில் ஜெனீவா பிரேரணை அமுலாக்கக் குழு

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்தும் அமுலாக்கக் குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இதற்கான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இறுதிக்கப்பட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் …

Read More »

உலக தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை

உலக தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை.சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய 2017ஆம் வருடத்திற்கான தரப்படுத்தலிலேயே ஸ்ரீலங்கன் விமான சேவை 81 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் முதலாவது இடத்தையும்,சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும்,மூன்றாவது இடத்தை ஜப்பான் ஓல் நிபொன் விமான சேவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தரப்படுத்தலில் கடந்த வருடம் இலங்கை 67 ஆவது …

Read More »

ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரர் போட்டியிட முயற்சி: வாசுதேவ

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரரை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு ஞானசார தேரர் தொடர்பாக கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இனவாத கலவரங்களை நாட்டில் ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் இன்று இனவாத கலவரங்களோ முரண்பாடுகளோ …

Read More »

அமைச்சர் இராதாகிருஷ்ணன் பயணித்த வாகனம் விபத்து!

கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனங்கள் ஏறாவூரில் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர், மைலம்பாவெளியிலுள்ள கோயிலொன்றுக்குச் சென்று வழிபட்டுவிட்டு கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாக மீண்டும் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட போது அவர் பயணம் செய்த வாகனமும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனமும் ஒன்றுடன் …

Read More »

திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல விதித்திருந்த தடையை தற்காலிமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைய எதிர்வரும் 23 ஆம் திகதியில் இருந்து அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்று வரும் தனது புதல்வியை பார்க்க செல்ல அனுமதி வழங்குமாறு …

Read More »

வடக்கு மாகாணசபையின் ஒற்றுமை கூட்டமைப்பை பலப்படுத்தும்: யோகேஸ்வரன்

வடக்கு மாகாணசபையில் நியாயம் நீதி நிலைக்கவேண்டும், அங்கு ஏற்படும் ஒற்றுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,”கிழக்கு மாகாணத்தில் பல நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன. அவை இதுவரையில் வெளிக்கொண்டுவரப்படவில்லை. விசாரணைகள் நடத்தப்படவில்லை. முதலமைச்சர் மாநாடு நடத்தியதில் …

Read More »

கொழும்பில் தீவிர தேடுதல்: ஞானசார தேரர் சிக்கவில்லை!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 650 இற்கும் அதிகமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோதும், பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளைத் தேடி நவீன தொழிநுட்ப வசதிகளைக் கொண்டு சுமார் நான்கு மணிநேரம் மேற்படி தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகத்தீவிரமாகத் தேடப்பட்டுவரும் நபர்களின் பட்டியலில் ஞானசார தேரரின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் மேற்படி …

Read More »

வடக்கு மாகாண அவைத் தலைவருக்கு சோழர் கால அரசர்களைப் போன்ற சிம்மாசனம்

வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருக்காக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய சிம்மாசனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் நாள் நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில், புதிய சிம்மாசனத்தில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அமர்ந்திருந்தார். இதுகுறித்து கொசுறுத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று, சோழர் கால அரசர்கள் பயன்படுத்தியதைப் போன்ற ஆசனத்தை மாகாணசபையின் உயர் அதிகாரி ஒருவர் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Read More »