யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது, சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டு, பல கோடி ரூபாய் கைமாற்றப்பட்டு இடம்பெற்ற ஒரு சதியென்றும், அதற்கு வித்தியா பலிக்கடா ஆகியுள்ளார் என்றும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் சாட்சியப்பதிவு யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வில் நடைபெற்று வருகின்றது. இதில் சாட்சியமளித்த …
Read More »அமைச்சு பதவியை நிராகரித்த சிவாஜிலிங்கம்
வடக்கு மாகாண அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாகவே முதலமைச்சர் என்னை அழைத்து அமைச்சு பொறுப்புக்களை ஏற்க முடியுமா என கேட்டிருந்தார். ஆனால் அந்த கோரிக்கைக்கு நான் நிராகரித்துள்ளேன். நான் …
Read More »வடக்கு மாகாண அமைச்சர்களாக அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் நியமனம்
வடக்கு மாகண புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 3 மாதத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். விவசாய அமைச்சு முதலமைச்சரின் கீழும், அதன் பிரிவில் இருந்த கூட்டுறவு மற்றும் சமூக சேவைகள் மகளிர் விவகார அமைச்சுக்கள் அனந்தி சசிதரனுக்கும், …
Read More »யாழ். மயிலிட்டி 50 ஏக்கர் காணி விடுவிப்பு
யாழ். மயிலிட்டி பிரதேசத்தில் 50 ஏக்கர் காணி எதிர்வரும் ஜுலை 3ஆம் திகதி படையினரால் விடுவிக்கப்படும் என்று இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் மயிலிட்டி பிரதேசத்தில் 50 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையை அரசு …
Read More »கூட்டமைப்பை கூறுபோட்டு அரசியல் தீர்வை மழுங்கடிக்க சதி: சித்தார்த்தன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கத்தில் தடைகளை ஏற்படுத்தலாம் என்று சிங்கள பேரினவாத சக்திகளும், அரசாங்கத்திற்குள்ளேயே இருக்கும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், கூட்டமைப்பை கூறுபோட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுண்டால் அது தமிழ் மக்களுக்கு ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனக் சுட்டிக்காட்டியுள்ள சித்தார்த்தன், தமிழ் தரப்பு மீது …
Read More »தொடர்கிறது போராட்டம்: 10 இலட்சம் அஞ்சல்கள் தேக்கம்
தபால் சேவை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியில் சுமார் 10 இலட்சம் அஞ்சல்கள் விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்கின்றது. நிர்வாக ரீதியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் இப் …
Read More »சரத் வீரசேகரவின் மனு குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் ஐ.நா.வுக்கான சிறப்புத் தூதுவர் மொனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கையின் முன்னாள் கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் சரத் வீரசேகர ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தலைவரிடம் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அதுகுறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கை அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கோரியமை மற்றும் கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியமை …
Read More »சம்பூருக்கு வருகிறது சூரிய மின்சக்தி திட்டம்
திருகோணமலை சம்பூரில் இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வெளியாகி வந்த நிலையில், அதற்கு பதிலாக 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையத்தை அங்கு அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சூழலின் பசுமைக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பதாலேயே இயற்கை எரிவாயு திட்டத்தை கைவிட்டு, மாற்று திட்டத்தை முன்னெடுப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். …
Read More »இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு
தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி இரணைதீவு மக்களுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உறுதியளித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், இரணைமாதா நகரில் கடந்த 69 நாட்களாக பேரராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, ஜனாதிபதியே நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள நிலையில், தம்மால் …
Read More »பல்கேரியாவிலிருந்து 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்
சட்டவிரோதமாக பல்கேரியாவில் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு அனுப்பிவைப்பதாக கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட குறித்த பிரஜைகள் துருக்கியில் நிர்க்கதியாக்கப்பட்டு, பின்னர் பல்கேரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளர். இந்நிலையில், குறித்த பிரஜைகளை அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்தி சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Read More »