Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 251)

இலங்கை செய்திகள்

கிழக்கு மண்ணில் தமிழர் ஆட்சி உதயமாக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயார்! – கருணா அம்மான் அறிவிப்பு

“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ள தமது கட்சி, தமிழ் முதலமைச்சர் ஒருவரை வென்றெடுப்பதற்காக எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயாராகவே இருக்கின்றது” என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா அம்மான் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஒக்டோபர் முதல் வாரத்தில் விடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், ஆட்சிமாற்றத்தின் …

Read More »

முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க அதாவுல்லா, ஹசனலி, பசீர் பேச்சு! – தலைமைத்துவ சபையின் கீழ் ஒன்றுபட இணக்கம்

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பின் நகர்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதுடன், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது. முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நம்பிக்கைக்குரியவருமான எம்.ரி.ஹசனலி மற்றும் அக்கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் …

Read More »

மைத்திரி – ரணில் அரசுக்கு வெகுவிரைவில் அதிர்ச்சி வைத்தியம் என்கிறது மஹிந்த அணி! – திருமலையில் இன்று ஆர்ப்பாட்டம்

சீனன்குடாவிலுள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் திட்டத்தை எதிர்த்தும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்தும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் இன்று திங்கட்கிழமை திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர். “இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்வதற்கு அதிகளவான தமிழ், முஸ்லிம் மக்களும் ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே, மேற்படி எதிர்ப்புப் பேரணியின் பின்னர் மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசுக்கு பல வழிகளிலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்படும்” …

Read More »

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுமா? – நீதியமைச்சர் கருத்து

நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அரசாங்கத்தினதும் நாட்டினதும் பாதுகாப்பிற்கு பாதகமான சட்டம் ஒருபோதும் அமுல்படுத்தப்பட மாட்டாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதி அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த அமைச்சர், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவதற்கான முன்னெடுப்புக்கள் உத்தேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், …

Read More »

நாளை முதல் புதிய பேருந்து கட்டணம் அறிமுகம்!

இலங்கை போக்குவரத்து துறையில் புதிய பேருந்து கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துசபை தலைமை அதிகாரி பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார். புதிய பேருந்துக்கட்டண மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனியார் பேருந்துகளில் புதிய பேருந்து கட்டணங்கள் காட்சிப்படுத்தப்படவேண்டும் என கூறப்பட்டிருக்கம் அதேவேளை பேருந்து கட்டணம் உரியவகையில் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்டறிவதற்கு நாடுதழுவிய ரீதியில் பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டண அறவீடு மற்றும் பருவகால அனுமதி அட்டை …

Read More »

தமிழ் பாடசாலைகளின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும்: இராதாகிருஷ்ணன்

தமிழ் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், மலையகத்தின் தமிழ் கல்வி முன்னெடுப்புக்களில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்கின்றது. எனவே, ஆசிரியர்களை தமிழ் …

Read More »

வித்தியா கொலையின் சூத்திரதாரி சுவிஸ் குமார் :6 வது சாட்சி சாட்சியம்

அரச தரப்பு சாட்சியாக தன்னை மாற்ற குற்றபுலனாய்வு துறை அதிகாரி உதவினால் அவருக்கு தான் 2 கோடி ரூபாய் பணம் வழங்க தயார் என தன்னிடம் சுவிஸ் குமார் தெரிவித்ததாக ஆறாவது சாட்சியான முஹமட் இப்ரான் என்பவர் ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் மூன்றாம் நாள் சாட்சி பதிவுகள், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் …

Read More »

நிறைவுக்கு வந்தது தபால் ஊழியர்களின் போராட்டம்

கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதியையடுத்து கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வந்த தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழுவுடன் நேற்று மாலை நடந்த கலந்துரையாடலின் போது தமக்கு நியாயமான பதில் கிட்டியதை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தபால் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார். தபால் சேவை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் …

Read More »

பிரபாகரனை போல சவால் விடும் தமிழ் தலைமைகள் இல்லை: சுமனரத்ன தேரர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போல, அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் தமிழ் தலைமைகள் தற்போது இல்லையென மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க தமிழ் தலைமைகள் முன்வருவதில்லையென தெரிவித்து, அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தமிழ் மக்களை அடக்கியாள சில …

Read More »

அதிகார பகிர்வு தொடர்பாக மக்களே தீர்மானிக்க வேண்டும்: பிரதமர்

அதிகாரப் பகிர்வு தொடர்பான இறைமையதிகாரம் மக்களையே சாருமென குறிப்பிட்டுள்ள பிரதமரும் அரசியல் யாப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, இதுகுறித்து மக்களே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை நீக்கப்படாதென மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அதே சந்தர்ப்பத்தில் ஏனைய …

Read More »