வடக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்களினதும் கடந்த மூன்றரை வருடகால செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்தச் சிறப்பு அமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 98 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா …
Read More »அரசின் பாதகமான நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்பதற்குப் பின்வாங்கமாட்டோம்! – அமைச்சர் ரிஷாத்
“சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் இந்த அரசின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள், பாதிப்புக்களை மிகவும் பக்குவமாகவும் இறுக்கமாகவும் தட்டிக்கேட்டு அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் நேர்மையுடன் ஈடுபட்டு வருகின்றோம்.” – இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். முசலி தேசிய பாடசாலையின் மூன்று மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். …
Read More »மஹிந்தவின் ஆட்சிக்கு மீண்டும் இடம் இல்லை – மைத்திரி திட்டவட்டம்
“2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த நாட்டிலிருந்து ஏகாதிபத்திய ஆட்சிக்கு நான் முடிவுகட்டினேன். அத்தகைய ஆட்சிக்கு இந்த நாட்டில் மீண்டும் இடம் கிடையாது.” இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ”முகமூடியைப் போட்டுக்கொண்டு மக்களுக்கு அழகானதொரு உலகைக் காட்டி மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு சிலர் (மஹிந்த தரப்பினர்) மேற்கொண்டுவரும் சதித்திட்டங்கள் குறித்து இன்று நாட்டு மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார். கல்கமுவ பிரதேசத்தில் …
Read More »கஜேந்திரகுமாரின் சில்லறைக் கருத்துக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர் தமிழர்! – சம்பந்தன்
“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறிவருகின்ற சில்லறைத்தனமான கருத்துகளுக்கு தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அவருக்குப் புகட்டிய பாடங்களை மறக்காமல் இருந்தால் சரி.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தமிழீழ விடுதலைப்புலிகளிடம் நீங்கள் (இரா.சம்பந்தன்) புனர்வாழ்வு பெற்ற பின்னரே தேர்தலில் போட்டியிட்டு …
Read More »பௌத்த மதத்துக்கு உரிய இடம் வழங்கப்படாவிட்டால் அரசில் இருக்கமாட்டேன்! – அமைச்சர் அர்ஜுன ரணதுங்க திட்டவட்டம்
இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கு உரிய இடம் வழங்கப்படாவிட்டால் தான் அரசில் தொடர்ந்து இருக்கப்போவதில்லையென பெற்றோலிய அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பால் பௌத்த மதம் இந்நாட்டில் வகித்துவரும் இடத்துக்குப் பங்கம் எதுவும் ஏற்படுமா? என்று சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “புதிய அரசமைப்புத் திட்டத்தால் பௌத்த மதத்துக்குப் பாதிப்பு ஏற்படுமென நாங்கள் எந்த இடத்திலும் கூறவில்லை. அவ்வாறு கூறப்போவதும் …
Read More »சுகாதார அமைச்சின் தகவல்கள் பொய்! மூன்று இலட்சம் பேருக்கு டெங்கு!! – மஹிந்த அணி விளக்கம்
இலங்கையில் இப்போது சுமார் 71 ஆயிரம் டெங்கு நோயாளிகளே இருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் தகவல்கள் அப்பட்டமான பொய் எனவும், மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்த நோய் தொற்றியுள்ளது என்பதே உண்மை எனவும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளவில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த பிரசன்ன ரணதுங்க எம்.பி. மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “அரசின் மிகப் பலவீனமான நடவடிக்கைகளால் டெங்கு நோய் …
Read More »அரசியல் பழிவாங்கலை இலக்குவைத்தே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்டமூலம்! – மஹிந்த தெரிவிப்பு
பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டமூலத்தை அரசு கொண்டுவர முயற்சிசெய்வதற்கு முக்கிய காரணம் அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டமூலம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்திருக்கும் கருத்தை அரசு கவனத்தில்கொள்ளவேண்டும். மகாநாயக்க தேரர்களின் கருத்தை உதாசீனம் செய்யக்கூடாது. நாட்டின் நன்மை கருதியே அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர். …
Read More »வறட்சி காரணமாக இலட்சம் பேர் பாதிப்பு
வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இதேவேளை, வறட்சியான காலநிலையுடன் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழுள்ள 14,000 இற்கும் அதிகமான குளங்கள் வற்றியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்திள் நீர் முகாமைத்துவ பிரிவின் தலைவர் பிரபாத் விதாரண கூறினார். …
Read More »உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்தை இவ்வாரத்துக்குள் நிறைவேற்றுமாறு மஹிந்த அணி காலக்கெடு! –
உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்த திருத்தச் சட்டமூலத்தை இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி துரிதகதியில் தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மஹிந்த அணியான பொது எதிரணி வலியுறுத்தியது. நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர், நிலையியல் கட்டளையின் 23/2இன் கீழான கேள்விநேரத்தில், “உள்ளூராட்சி சபைத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளபோதிலும், அது தொடர்பான விவாதம் இவ்வாரம் நடத்தப்படுவதற்குரிய …
Read More »குப்பையுடன் மனித உடல் அவயங்களும் கொட்டப்படுவதால் நாடாளுமன்றில் சர்ச்சை
குப்பைகளுடன் மனித உடல் அவயங்களும் முத்துராஜவெலயில் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா நேற்று நிராகரித்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் நிலையியல் கட்டளையின் 23/2 இன்கீழ் குப்பைப் பிரச்சினை தொடர்பில் விசேட கூற்றொன்றை விடுத்த தினேஷ் குணவர்தன எம்.பி., “கழிவுகள் வீதிகளில் கொட்டப்பட்டுள்ளன. அவை அகற்றப்படவில்லை. இதனால் …
Read More »