Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 248)

இலங்கை செய்திகள்

கிழக்கின் முதல்வராக தமிழர் வரவேண்டும்! – கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீநேசன் ஆதங்கம்

“தமிழர் ஒருவரே கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக வரவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். “நடப்பு மாகாண சபையில் தமிழ்பேசும் இனத்தவர்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம் இனத்துக்கு முதலமைச்சர் பதவியை கிழக்குத் தமிழ் மக்கள் விட்டுக்கொடுத்திருந்தனர். எனவே, விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சருக்கு வழிவிடவேண்டிய தேவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் எமது சகோதர முஸ்லிம் …

Read More »

விரைவில் விக்கியுடன் பேசிச் சுமுகமான தீர்வு! – வடக்கு மாகாண சபை விவகாரத்தை ஊதிப் பெருப்பிக்கக்கூடாது என்கிறார் சம்பந்தன்

“வடக்கு மாகாண சபை விவகாரம் ஊதிப் பெருப்பிக்கப்படக்கூடாது. இதற்கு விரைவில் முடிவு கட்டப்படவேண்டும்; சுமுகமான தீர்வு காணப்படவேண்டும். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரை எப்போது சந்தித்துப் பேசுவது என்று இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் சந்திப்பு நடக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை விவகாரம் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம்  எப்போது நேரடிச் சந்திப்பு நடைபெறும் …

Read More »

மலையகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கொட்டகலை நகரத்திலும், அதனை அண்மித்த பகுதியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்படி சிரமதானப்பணிகள் நடைபெற்றன. பொது மக்கள் ஏற்பாடு செய்த இந்த சிரமதானப் பணியின் போது, கொட்டகலை நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டதுடன், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டன. இதன்போது, டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்படும் பல …

Read More »

மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு!

அஸ்கிரிய உள்ளிட்ட பௌத்த உயர் பீடங்களில் மகாநாயக்கர்களை, விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைக்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென மகாநாயக்கர்கள் அண்மையில் அரசாங்கத்திடம் கோரியிருந்தனர். புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்துள்ள நிலையில், மகாநாயக்கர்களின் இந்த அறிவிப்பு தமிழ் மக்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மகாநாயக்கர்களை சந்தித்து தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் புதிய அரசியல் யாப்பின் அவசியம் உள்ளிட்ட விடயங்களை …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காய் பொங்கல் பொங்கி வழிபாடு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை வேண்டி விசேட பொங்கல் வழிபாடு கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இன்று மேற்படி வழிபாட்டு நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் …

Read More »

முல்லைத்தீவை வாட்டியெடுக்கும் வறட்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரவித்துள்ளார். மாவட்டத்தின் 136 கிராம சேவகர் பிரிவுகளில், 135 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வறட்சி காரணமாக முல்லைத்தீவு மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, விவசாய நடவடிக்கைகள் குன்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக 34,000 ஏக்கர் காணி, பயிர்செய்கைக்கு ஒவ்வாத வகையில் வறண்டு போயுள்ளதாக மாவட்ட …

Read More »

வைத்தியர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு நாளை கூடுகிறது

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் முகமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு இன்று கூடுகிறது. கடந்தவாரம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவிருந்த வைத்தியர் சங்கம் போராட்டத்தை கைவிட்ட நிலையில் மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராய இன்று அச்சங்கம் கூடுகிறது.

Read More »

பத்து வருடங்களாகத் தடுப்பிலிருந்த அரசியல் கைதி ஒருவர் விடுவிப்பு!

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயஇராம் இராமநாதன் 2007ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரகசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா செல்லும் ரயில் பாதையை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம் தீட்டியமை, இராணுவத்தின் உயர் அதிகாரியின் நடவடிக்கைகளை வேவு பார்த்து விடுதலைப்புலிகள் …

Read More »

வாக்காளர் இடாப்பில் பெயரைப் பதிவது ஒவ்வொரு தமிழரினதும் பிறப்புரிமை! – சண். குகவரதன் தெரிவிப்பு

“வாக்குப் பலத்தால் இனவாதத்தை தூக்கியெறியலாம் என்பதைக் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துக்காட்டினார்கள். எனவே, இம்முறை வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு தமிழனும் தனது பெயரைப் பதிய வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண். குகவரதன். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “வாக்குப்பலம் என்பது தமிழ் மக்களின் ஜனநாயகப் பலம். ஜனநாயக உரிமை. …

Read More »

பெருந்திரளான பக்தர்களுக்குத் தேரேறி அருட்காட்சியளித்தார் நயினை அம்மன்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத்  தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது. அதிகாலை மூன்று மணிக்கு ஆரம்பமான அபிஷேகம் மற்றும்  சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து காலை ஏழு மணிக்கு வசந்த மண்டபப்பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அம்மன்  வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

Read More »