Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 247)

இலங்கை செய்திகள்

மன்னாரில் நுளம்பை கட்டுப்படுத்தும் இரசாயனத்திற்கு எதிர்ப்பு!

மன்னாரில் மலேரியா நுளம்பை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ‘அபேற்’ எனப்படும் இரசாயனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். மன்னாரில் டெங்கு மற்றும் மலேரியா நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கிணறுகளினுள் போடப்படும் ‘அபேற்’ எனும் இரசாயன கலவையினால் நிலத்தடி நீர் மாசடையும் எனவும் குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு …

Read More »

இளைஞன் கொலை தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை அவசியம்: மனித உரிமைகள் ஆணைக்குழு

யாழ். பருத்தித்துறை துன்னாலை இளைஞனின் படுகொலை தொடர்பான பொலிஸ் விசாரணை பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என்பதில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனமான உள்ளதென ஆணைக்குழுவின் யாழ். அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். துன்னாலை பகுதிக்கு விஜயம் செய்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், கொலையுண்ட இளைஞனின் குடும்பத்தாரிடம் தகவல்களை கேட்டறிந்ததோடு, பொலிஸ் நிலையத்திற்கும் சென்று தகவல்களை திரட்டியுள்ளனர். …

Read More »

வடக்கு மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றவர் கைது

கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மாவா என்கின்ற ஒருவகையான போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெளிக்கண்ணவின் விசேட குழுவினரால், குறித்த சந்தேகநபர் நேற்று (திங்கட்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு போதைப் பொருளை விநியோகிப்பதாக குறித்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Read More »

சமூக நல்லிணக்கத்திற்கு மதப்பிரிவினை ஆரோக்கியமானதல்ல: பொது அமைப்புக்கள்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மதப்பிரிவினைச் செயற்பாடுகள் ஆரோக்கியமானவையல்ல என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், “மனிதரில் மனித நேயக் கோட்பாடுகளை மனிதாபிமான முறையுடன் இறை பகிர வேண்டியதே சமய நல்லொழுக்க சித்தாந்தம். மாறாக சமூக பிறழ்வுகளுக்கு வழி தேடுகின்ற மார்க்கமாக மத நிந்தனைகளை முன் நிறுத்துவது மனித மாண்பு கடந்த செயலாகும். …

Read More »

வவுனியாவில் உணவக உரிமையாளர்களுக்கான கருத்தரங்கு!

வவுனியா மாவட்டத்தில் உணவுப் பொருட்களைக் கையாளுதல், தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஓவியா விருந்தினர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. வட. மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நடத்தும் இக் கருத்தரங்கில் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதன்போது உணவுப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் அதனை கையாளும் விதிமுறைகள் தொடர்பாகவும், சுகாதாரம் தொடர்பிலும் கருத்துரைகள் இடம்பெற்றன. அடுத்து வரும் 13 ஆம் திகதி …

Read More »

ஐ.நா.வின் விசேட பிரதிநிதியுடன் வவுனியா நீதிபதிகள் நாளை சந்திப்பு !

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான விசேட பிரதிநிதி பென் அமர்சன் வவுனியாவில் நீதிபதிகளை நாளை (புதன்கிழமை) சந்திக்கவுள்ளார். இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர் பிரதம நீதியரசரின் பணிப்புரைக்கமைய நாளை (புதன்கிழமை) வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் மற்றும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட நீதிபதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இக் கலந்துரையாடல் …

Read More »

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தர்க்கம்: சி.வி. வெளிநடப்பு!

காணிப் பிரச்சினை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளிநடப்புச் செய்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வருகின்றது. இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் …

Read More »

பிரபாகரனின் தலைமைத்துவமே உண்மையானது: நடிகை கஸ்தூரி

தொலை இயக்கி (remote control) மூலம் இந்த உலகில் பலர் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, தானும் போராடி தன் பிள்ளைகளையும் போராட வைத்து, அனைவருக்கும் ஒரே நியாயம் என்ற கொள்கையுடன் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவமே உண்மையான தலைமைத்துவம் என்றும் இதனை யாரும் மறுக்க முடியாதென்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு ஊடகமொன்றிற்கு அவர் வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, ”தலைவர் பிரபாகரனை காட்டிக்கொடுத்த …

Read More »

காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கும் சட்டமூலம் அனைத்து பிரஜைளுக்குமான மனித உரிமை

காணாமல் போவதைத் தடுப்பது தொடர்பான சட்டமூலத்திற்கு அரசியல் ரீதியில் இரட்டைக் கொள்கையை கடைப்பிடிக்கும் தரப்பு எதிர்ப்புத் தெரிவிப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒரு சட்டமூலம் நியாயமான சுதந்திரமான ஒழுக்கமுள்ள சமூகத்தில் அனைத்து பிரஜைகளுக்கும் உரிய ஒரு மனித உரிமையாகும். இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் பிறந்து வாழும் அனைவரும் பலவந்தமான கடத்தலுக்கோ , காணாமல் ஆக்கப்படும் செயற்பாட்டிற்கோ, முறையற்ற சிறை வைப்பிற்கோ …

Read More »

புதிய அரசமைப்பைக் கொண்டுவரவே 62 இலட்சம் மக்கள் ஆணையை வழங்கினர்! – ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவிப்பு 

“புதிய அரசமைப்புத் தொடர்பில் எவருக்கும் கருத்துத் தெரிவிக்கமுடியும். அவ்வாறே மகாநாயக்க தேரர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். இது குறித்து பரிசீலிக்கவேண்டியது கட்டாயமானதாகும். ஆனால், 62 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் நல்லாட்சி அரசுக்கு ஆதரவளித்தது புதிய அரசமைப்பொன்றை கொண்டுவருவதற்காகவே. மக்களின் ஆணையின் அடிப்படையில் அரசு செயற்படும்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார். புதிய அரசமைப்பு தற்போதைய சூழலில் …

Read More »