கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி ஆனையிறவு கடல் நீரேரி வற்றியுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவிலான மோட்டார் செல்கள் பரவலாக காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் ஆங்காங்கே வெடிபொருட்கள் காணப்படுகின்றமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் அவை அகற்றப்படவில்லையென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது குறித்த பகுதி நீரின்றி காணப்படும் நிலையில் பெருமளவில் மோட்டார் செல்கள் மண்ணில் புதையுண்ட நிலையிலும், துருப்பிடித்தும் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்நிலையில், …
Read More »தேசிய தமிழ் மொழி தின விழா யாழ்ப்பாணத்தில்!
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழி தினம் இந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வின் போது, தேசிய மட்டத்தில் நடைபெற்ற தமிழ் மொழி தின போட்டிகளில் …
Read More »கொட்டகலைக்கு அருகாமையில் ரயில் விபத்து
கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 110வது கட்டைப்பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரவு நேர தபால் ரயில் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தினால் கொட்டகலை 60 அடி புரதான பாலம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன், சுமார் 1 கிலோ மீற்றர் நீளமான ரயில் பாதை சேதத்திற்குள்ளானது. இதன்போது புகையிரத பெட்டிகள் நான்கு பலத்த சேதத்திற்குள்ளாகின. இந்த பாதையினையும் ரயில் சேவையினையும் துரித கதியில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய …
Read More »பயங்கரவாதத்தையும், கூட்டான குற்றச் செயல்களையும் தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் – பிரதமர்
பயங்கரவாதத்தையும், கூட்டான குற்றச் செயல்களையும் தடுக்க சார்க் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதத்தை வெற்றி கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கான அடிப்படை காரணங்களுக்கு தீர்வு வழங்குவதில் யுத்தத்தின் பின்னராக காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள சவாலான பணி பற்றி கொழும்பில் இன்று ஆரம்பமான செயலமர்வில் பிரதமர் உரையாற்றினார்;. பாகிஸ்தான், இந்தியா உட்பட பிராந்தியத்தின் சில இடங்களில ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் செயற்பாடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். …
Read More »மெல்லிய பொலித்தீன் பாவனைக்கு தடை
மெல்லிய பொலித்தீன் பாவனையை தடைசெய்வது தொடர்பில் சுற்றாடல் துறை அமைச்சின் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் மேற்கொள்ளக்கூடிய நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் அமைச்சரவை ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தேசிய , மத …
Read More »தமிழ் இளைஞர்கள் கடத்தல் சம்பவம்: கடற்படை அதிகாரியை கைதுசெய்ய உத்தரவு
கடந்த 2008 – 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு வெள்ளவத்தை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் செய்தமை தொடர்பாக, கடற்படையின் முக்கிய அதிகாரி ஒருவரை கைதுசெய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 கடற்படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான …
Read More »அரசாங்கத்துடன் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றோம்: சம்பந்தன்
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கத்துடன் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் ஆதங்கத்தை வெளியிட்ட உறவுகள், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அரசாங்கத்துடன் இவ்விடயம் தொடர்பாக …
Read More »யுத்தம் முடிந்தும் யுத்தகாலக் கஷ்டங்களுடனேயே வாழ்ந்துவரும் மக்கள்!
கிழக்கில் யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்ட போதும் ஏறாவூர்ப்பற்று பதுளை வீதியை அண்டி வாழும் மக்கள் முடிவின்றித் தொடரும் யுத்தகால அவலங்களுடனேயே வாழ்ந்து வருவது ஆய்வறிக்கைகளில் கண்டறியப்பட்டுள்ளது என ‘சொன்ட்’ அமைப்பு அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் வாழும் மக்களின் நிலை தொடர்பில், ‘சொன்ட்’ அமைப்பின் மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் தர்மரெட்னம் விஜயகுமார் இந்த ஆய்வறிக்கையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வறிக்கையில் குறித்து …
Read More »புதிய அரசமைப்பு மிகவும் அவசியம்! – சிங்கள மக்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்கிறது ஐ.தே.க.
புதிய அரசமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார். “பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படமாட்டாது. சிங்கள மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான் அரசமைப்பு தயாரிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “இன்னும் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படவில்லை. அதில் அடங்கப்போகின்ற விடயங்கள் பற்றி எதுவும் தெரியாமல் பொய்யான …
Read More »ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய நேரம் நெருங்கிவிட்டது!
“அரசியல், பொருளாதாரம் என அனைத்து வழிகளிலும் அரசு ஆட்டங்கண்டுள்ளதால் விரைவில் ஆட்சிமாற்றமொன்று ஏற்படுவதற்குரிய சாத்தியம் பிரகாசமாகவே தென்படுகின்றது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணியான பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாரிய நிதிமோசடி குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறுபிள்ளைபோல் செயற்படும் …
Read More »