Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 243)

இலங்கை செய்திகள்

சர்வகட்சிப் பேரவையை அமைக்கிறார் மைத்திரி!

புதிய அரசமைப்புத் தொடர்பில் பெளத்த மகா நாயக்க தேரர்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து சர்வகட்சிப் பேரவை ஒன்றைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அரசமைப்புப் பேரவையாக மாறியுள்ள நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படும் புதிய அரசமைப்பு வரைவுத் திட்டத்திற்குச் சர்வகட்சிப் பேரவையின் ஊடாக அனுமதி பெற்றுக் கொள்ள ஜனாதிபதி  திட்டமிட்டுள்ளார் என்றும் – அரசமைப்பு யோசனைகள் தயாரிக்கப்பட்டதும் சர்வ கட்சிப் பேரவை கூட்டப்படும் என்றும் கூறப்பட்டது. நாடாளுமன்றைப் பிரதிநிதித்துவம் …

Read More »

இலங்கை வருகிறார் ஆஸி. வெளிவிவகார அமைச்சர் ஜூலி!

ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இந்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கை வரும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளார். இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அவர் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். டெங்குக் காய்ச்சலைத் தடுக்க ஆஸ்திரேலியா வழங்கும் உதவி குறித்தும் ஜனாதிபதியுடன் …

Read More »

அரசியல் தீர்வு, பொருளாதார நிலைமை தொடர்பில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் பேசவுள்ளேன்! – சம்பந்தன் தெரிவிப்பு

போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன்

இலங்கைக்கு நேற்றிரவு பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் விவியன் பாலகிருஷ்ணன் கொழும்பில் இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக கொழும்புவந்த அவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேற்றிரவு வரவேற்பளிக்கப்பட்டது. இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவர் சந்திக்கவுள்ளார். இந்தச்  சந்திப்பையடுத்து இவ்விரு அமைச்சர்களும் இணைந்து கூட்டு ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளனர். அதன்பின்னர் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …

Read More »

அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தகர்த்தெறிய மஹிந்த இராஜதந்திர வியூகம்!

புதிய அரசமைப்பை தேசிய அரசு கொண்டுவருவதைத் தடுக்கும்வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் இராஜதந்திர வியூகங்களை வகுத்து நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றில் தேசிய அரசின் மூன்றிலிரண்டு  பெரும்பான்மையை உடைத்தெறிவதே இவர்களின் தற்போதைய பிரதான இலக்காகவுள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டபோது புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதும், தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதுமே …

Read More »

எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைக்காதீர்கள்: ரவிகரன்

எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைத்து, இளைஞர்களின் மனநிலையினை மீண்டும் வேறு திசைகளுக்கு மாற்றாதீர்கள் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். முள்ளியவளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இளைஞர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எமது இளைஞர்களின் பலத்தினை தெரிந்தவர்கள் இன்று அரசாங்கத்தில் இனவாதிகளாக இருக்கின்றார்கள். முல்லைத்தீவில் சாதித்த எமது …

Read More »

ஜனாதிபதி- பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், போலி ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றன. இந்த வழக்கில் முதலாம் மற்றும் இரண்டாவது சாட்சியாளர்களாக ஜனாதிபதியும், பிரதமரும் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் …

Read More »

துரோகிகள் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை நாமே காப்பாற்றினோம்: கோவிந்தன் கருணாகரம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் துரோகிகள் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை நாமே காப்பாற்றினோம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 வது வீர மக்கள் தினம் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்றையதினம் (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “புலிகளின் துரோகிகள் பட்டியலில் …

Read More »

நீதித்துறையின் கரங்களை கட்டிவைத்துள்ள சட்டமா அதிபர் – ஐ.நா நிபுணர் குற்றச்சாட்டு

சிறிலங்கா நீதித்துறையின் கரங்களை சட்டமா அதிபர் கட்டி வைத்திருப்பதாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதர்ப்புக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார். தனது சிறிலங்கா பயணத்தின் முடிவில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். சிறிலங்கா நீதித்துறையின் கரங்கள் சட்டமா அதிபர் மூலமாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக நீதித்துறையின் அடிப்படைத் தத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் முரணானது. எந்தவொரு …

Read More »

தெருவில் காத்திருந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மைத்திரி

தெருவில் காத்திருந்த சிறுமிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ள சம்மாவாம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. நிகழ்விற்கு நேற்று சென்று கொண்டிருக்கும் போது அஸ்கிரிய மைதானத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமி ஒருவர் வீதி அருகே வந்து ஜனாதிபதி செல்லும் வாகனங்களை நோக்கி பார்வையிட்டுள்ளார். ஜனாதிபதி தனது …

Read More »

போர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசு ஒருபோதும் தப்பவே முடியாது! – ஐ.நா. அறிக்கையாளரின் அறிக்கையை மனதார வரவேற்று சம்பந்தன் கருத்து  

பாதுகாப்புத் தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக சர்வதேச  சமூகத்துக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது என்ற ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அத்துடன், போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் …

Read More »