அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகம் ஜெஃப்ரி டேவிட் ஃபெல்ட்மென் (Jeffrey David Feltman) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போபொல்லாகமவுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து கிழக்கு முதல்வர் நஸீர் அஹமட்டைச் சந்தித்து, கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்தோடு, கிழக்கின் சிவில் சமூக அமைப்பினரையும் சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது.
Read More »உறவுகளுக்காய் மாதக்கணக்கில் வீதியில் போராடும் மக்கள்!
யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் தமிழர் தாயக பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென தெரிவித்து, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று (புதன்கிழமை) 150 நாட்களை எட்டியுள்ளது. கடந்த 150 நாட்களாக இரவு பகலாக வெயிலிலும் குளிரிலும் தமது உறவுகளுக்காய் ஏங்கித் தவிக்கும் தமது நிலை குறித்து, அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை, தமது வேதனையை …
Read More »உமாஓயா திட்டத்துக்கு விரைவில் தீர்வு : அரசு திட்டவட்டம்
உமாஓயா திட்டத்தை நிறுத்த முடியாது. 75வீதமான பணிகள் முடிவடைந்துள்ளதால் மக்களுக்கு பாதுகாதுகாப்பான முறையில் திட்டத்தை முன்னெடுத்து செல்வதே சிறந்ததாக அமையும் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இத்திட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவுகளாவது, • உரிய ஆய்வுகளினை மேற்கொண்டு …
Read More »ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான தடையை உடைத்தெறிந்துள்ளோம்
ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான தடையை உடைத்தெறிந்துள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐரோப்பிய வர்த்தக மண்டலம் நேற்று கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்வாறு கூறினார். அவர் மேலும் வலியுறுத்தியதாவது, ஆடை உற்பத்தியை மட்டும் மட்டுப்படுத்தி பயணித்த கைத்தொழில் உற்பத்தில் இன்று பல்வேறு உற்பத்திகளை நோக்கி விரிவடைந்துள்ளது. கண்டிமுதல் அப்பாதோட்டை வரை கைத்தொழில் வலயத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சிலர் இரண்டு …
Read More »மறுபடியும் ஜனாதிபதியாக களமிறங்குவார் மைத்திரி! – 2020இல் தனியாட்சியே குறிக்கோள் என்கிறது சு.க.
2020இல் தனியாட்சி அமைப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குறிக்கோளாக இருக்கின்றது என்றும், ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே களமிறங்குவார் என்றும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய இரண்டுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷ …
Read More »மீண்டும் ரணில் தலைமையில் நாளை கூடுகின்றது அரசமைப்பு வழிகாட்டல் குழு!
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்ட அரசமைப்புப் பேரவையின் வழிகாட்டல் குழுவின் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கையை எப்படியாயினும் இந்த மாத முடிவுக்கு முன்னர் இறுதிசெய்து பூர்த்தியாக்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதன் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் சமயம் என்று பார்க்காமல் வழிகாட்டல் குழுவின் …
Read More »தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டரசமைப்பது நாட்டுக்கு ஆபத்து! – இப்படிக் கூறுகின்றது சு.க.
“ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கூட்டரசமைப்பது நாட்டுக்குப் பெரும் ஆபத்தாக அமையும். அத்துடன், அது ஸ்திரமற்ற அரசியல் நிலைமையையே தோற்றுவிக்கும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது. இவ்விடயம் உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டே தேசிய அரசமைக்கும் முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்தது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு …
Read More »நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் மைத்திரியின் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பாராட்டு!
“நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை” என்று சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் கூறினார். இன்று புதன்கிழமை யாழ். பொது நூலகத்துக்கு விஜயம்செய்து நூல்களை அன்பளிப்புச் செய்யவுள்ளதாகவும், நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் எலும்பு இயல் …
Read More »போர்க்களமானது வடமத்திய மாகாண சபை! – ஆளும் கட்சி – எதிர்க்கட்சி கைகலப்பு; பலர் காயம்
வடமத்திய மாகாண சபையின் தவிசாளருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபையின் ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததால் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையில் நேற்றுக் கைகலப்பு ஏற்பட்டு சபை வன்முறைக் களமாக மாறியிருந்தது. வடமத்திய மாகாண சபையின் தவிசாளருக்கு எதிராக சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் 11 உறுப்பினர்களால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பல எதிர்ப்புகளையடுத்து நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உள்ளூராட்சி சபை செயலாளரின் பரிந்துரைக்கமைய நேற்று சபை நடவடிக்கைகளுக்கான ஒழுங்குப்பத்திரத்தில் நம்பிக்கையில்லாப் …
Read More »சம்பந்தன் – விக்கி இவ்வார இறுதியில் கொழும்பில் சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு இந்த வார இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் கொழும்பில் இருவரும் சந்தித்துப் பேசுவர் என அறியமுடிகின்றது முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பில் நிற்பார் எனக் கூறப்படுகின்றது. அந்தவேளையில், பெரும்பாலும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பு இசுப்பத்தான வீதியிலுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரனின் இல்லத்தில் இந்தச் …
Read More »