தெற்கில் புரட்சியில் ஈடுபட்டவர்களை விடுதலைசெய்ததுபோல், அரசியல் கைதிகளையும் விடுவிக்கவேண்டும் எனத் தாம் அமைச்சரவை சந்திப்பில் தெரிவித்தார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்தை அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் கூறியவை வருமாறு:- “தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் மட்டுமல்ல, காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் விடயங்கள் என்பவற்றில் தீர்க்கமான முடிவெடுக்க முடியாது. நல்லாட்சி …
Read More »சு.கவின் மாநாட்டுக்கு மஹிந்த அணிக்கும் அழைப்பு!
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு மஹிந்த அணியான பொது எதிரணி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது” என்று அக்கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தைவிட சிறப்பாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் நாட்டுக்குத் தேவையான அதிமுக்கிய தீர்மானங்கள் பல பிரகடனப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்துகொள்வதற்கும், கட்சியின் பாரம்பரியத்தையும் கட்டுக்கோப்பையும் பாதுகாத்துக்கொள்வதற்கும் பொது எதிரணியினர் உட்பட …
Read More »சு.கவின் 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு! – அமைச்சர் அமரவீர அறிவிப்பு
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாட்டை மிகவும் பயனுள்ளதாக நடத்துவதற்கான ஏற்பாட்டை கட்சியின் மத்திய குழு முன்னெடுத்துவருகின்றது” என்று மீன்பிடி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருநாகலையில் கடந்த வருடம் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை 66ஆவது மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. செப்டெம்பர் மாதம் 2ஆம் …
Read More »ஐ.தே.கவின் 71ஆவது ஆண்டு விழாவிலும் மைத்திரி பிரதம அதிதி!
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது நிறைவுக் கொண்டாட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதம அதிதியாக அழைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் அக்கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் பொரளை கெம்பல் மைதானத்தில் நடந்தபோதும் ஜனாதிபதி மைத்திரிபால அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும், …
Read More »வித்தியா கொலை விவகாரம்: ஊர்காவற்றுறை நீதவானுக்கு அழைப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான சாட்சியப்பதிவிற்காக, ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ட்ரயல் அட் பார் விசாரணையின்போது, நீதிபதிகள் இவ் அறிவித்தலை விடுத்துள்ளனர். வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், நீதவான் ரியாழை எதிர்வரும் 24ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான நிசாந்த சில்வாவையும் அன்றைய தினம் மன்றில் …
Read More »சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் ஐ.நாவின் அரசியல் விவகாரச் செயலர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அலரி மாளிகையின் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியும், சிறிலங்காவின் சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் உடன் இருந்தனர். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா சென்றிருந்த போது …
Read More »அரசியலமைப்பு உருவாக்க விவகாரம் – இரண்டாக உடைந்தது கூட்டு எதிரணி
அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, கூட்டு எதிரணியின் முக்கிய பங்காளிக் கட்சியான விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகியுள்ளது. தமது கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் இருந்து வெளியேறுவதாக, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், விமல் வீரவன்ச நேற்று கடிதத்தைக் கையளித்தார். அதேவேளை,மகிந்த ராஜபக்ச தலைமையிலான …
Read More »தமிழ் அகதிகளுக்கு குடியேறும் வாய்ப்பை மறுக்கும் அமெரிக்காவின் தேசப்பற்று சட்டம்
நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள், அமெரிக்காவின் தீவிரவாத சட்டத்தினால் அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பு நிராகரிக்கப்படலாம் என்று அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு படகுகள் மூலம் அகதிகளாகச் சென்றவர்களில், அடைக்கலம் பெறுவதற்குத் தகுதி பெற்ற ஒரு தொகுதியினரை நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் உள்ள கடல் கடந்த முகாம்களில் அவுஸ்ரேலியா, தங்க வைத்துள்ளது, இவர்களை மூன்றாவது நாடு ஒன்றில் குடியேற்றுவதற்கான முயற்சிகளிலும் …
Read More »அயர்லாந்து நாட்டு பெண்னுக்கு இலங்கையில் நடந்த கதி
அயர்லாந்து நாட்டுப்பெண்ணைக் கடத்தி அவரை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயற்சித்தரை ஆட்டோசாரதியை எல்ல பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். ஆட்டோசாரதியுடன் போராடிதப்பியோடிவந்த அயர்லாந்து நாட்டுப்பெண் கடுங்காயங்களுடன் பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சேர்ந்த இப்பெண் தனது கணவருடன் சுற்றுலாவாசிகளாக எல்லப் பகுதிக்குவந்துள்ளனர். இவர்கள் சுற்றுலாவிடுதியொன்றிற்குச் செல்ல அப்பகுதி ஆட்டோவொன்றில் பயணித்தனர். அவ்வேளையில் ஆட்டோசாரதி தந்திரமாக அயர்லாந்துநாட்டுப் பெண்ணை கடத்திச் செல்லும் நோக்குடன் …
Read More »புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை ஜனவரியில் வெளியாகும்: பிரதமர்
புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் நடத்தப்பட்ட ‘இலங்கை மக்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, புதிய அரசியல் யாப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், ‘ நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புதிய …
Read More »