Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 237)

இலங்கை செய்திகள்

அமைச்சர் பதவியை உடன் துறக்கவேண்டும் ரவி! – பத்தரமுல்ல மகாநாயக்கர் வலியுறுத்து 

உலகின் தலைசிறந்த நிதி அமைச்சர் என்ற விருதைப்பெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பிணைமுறி மோசடி நடவடிக்கைகளால் நாட்டுக்குப் பெரும் அவமானத்தையும், தலைக்குனிவையும் ஏற்படுத்தியிருக்கிறார் எனவும், அதனால் அவர் தனது பதவியை உடனடியாகத் துறக்கவேண்டும் எனவும் ஜனசெத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “ரவி கருணாநாயக்கவின் லீலைகள் இந்த அரசு நியமித்த ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே அம்பலமாகியுள்ளன. …

Read More »

வட மாகாண சுழற்சிமுறை ஆசனம்: புளொட்டின் கோரிக்கை நிராகரிப்பு; ஜெயசேகரத்தின் பெயர் பரிந்துரை! – தடுத்து நிறுத்துமாறு சம்பந்தனுக்கு சித்தார்த்தன் கடிதம்

வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுழற்சிமுறை நியமன ஆசன விடயத்தில், புளொட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவரான ஆர்.ஜெயசேகரத்தின் பெயர் தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் சுழற்சி முறை ஆசனத்தின் அடிப்படையில் பதவி வகித்த வவுனியா மாவட்ட உறுப்பினர் மயூரன், மாகாண சபையின் நூறாவது அமர்வுடன் விடை பெற்றார். மாகாண சபையில் நன்றியுரையும் நிகழ்த்தினார். வடக்கு …

Read More »

புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீடிக்கும் : ஐரோப்பிய ஒன்றியம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்துச் செய்துள்ள போதிலும், தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு, விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பாக பட்டியலிடுவதற்கு, பயன்படுத்தப்பட்ட நடைமுறைகளின் சட்டபூர்வ தன்மை தொடர்பானதே என்றும் ஐரோப்பிய …

Read More »

வித்தியா கொலை விவகாரம்: முக்கிய அரசியல்வாதியிடம் விசாரணை

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வித்தியா கொலை வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள், அண்மையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்திருந்த தகவல்களின் பிரகாரம், இவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவி வித்தியா படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபரை மக்கள் பிடித்து கட்டிவைத்திருந்த நிலையில், …

Read More »

நல்லூர் சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டும்

யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று 158 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்த காணாமல் …

Read More »

முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைக்க பிரேரணை நிறைவேற்றம்

மாவட்ட மீனவர்களுக்கான வெளிச்ச வீட்டை உடன் அமைக்குமாறு கோரும் பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 100ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மேற்படி வெளிச்ச வீட்டை அமைக்குமாறு கோரி கடந்த 8 வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எவையும் எடுக்கப்படாத நிலையில் இன்றைய தினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனால் முன்வைக்கப்பட்ட குறித்த …

Read More »

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி!

யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோகர் ஜீ.எம்.சரத் ஹேமச்சந்திரவின் மனைவிக்கு பொலிஸ் உப பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்தப் பதவி உயர்வுடன் கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சரத் ஹேமச்சந்திரவின் மனைவி, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பொலிஸ் சேவையிலிருந்து விலகியிருந்தார். தற்போது அவரது கணவன் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு பதவி உயர்வுடன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதற்கு …

Read More »

யாழ். நீதிபதி இளஞ்செழியன் தமிழ்தேசத்தின் சொத்து

உலகத்திற்கு மனிதாபிமானத்தை கற்றுக் கொடுத்த நீதிபதி இளஞ்செழியன் தமிழ்தேசத்தின் சொத்து என த.தே.மக்கள் முன்னணியின் மட்டுமாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை கண்டித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார். மேலும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலானது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒர் விடயம் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

Read More »

வவுனியாவில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது – 27) என்பவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய சத்தியசீலன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த …

Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,296 மாற்றுத்திறனாளிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,296 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாக மாவட்ட செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களில் பல்வேறு தேவையுடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில், கரைத்துரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 444 மாற்றுத்திறனாளிகளும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 707 மாற்றுத்திறனாளிகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 311 மாற்றுத்திறனாளிகளும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 443 மாற்றுத்திறனாளிகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 316 …

Read More »