Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 236)

இலங்கை செய்திகள்

ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை ஐ.தே.க. தோற்கடிக்கும்

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின் அதனை ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடிக்கும் என்று அமைச்சரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஆஸீம் தெரிவித்தார். சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபணம் இல்லாதவையாகும். குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் வரை அல்லது நிராகரிக்கப்படும் வரை ஐ.தே.க. அவருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையுத் தோற்கடிக்க …

Read More »

எனது ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசமைப்பின் பிரகாரம் முடியாது

எனது ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசமைப்பின் பிரகாரம் முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஹிங்குராக்கொட இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாடாளுமன்றத்தை 113 ஆசனங்களை கைப்பற்றினால் ஆட்சியை பிடித்துவிடலாம். அதன்பின்னர் ஜனாதிபதியினதும், அரசினதும் ஆட்டம் முடிவடைந்துவிடும் என கூட்டு எதிரணி கூறிவருகிறது. அது வெறும் கனவு மாத்திரமே. நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை அகற்றி, தற்போதைய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. எனினும், …

Read More »

யாழில் இரு பொலிஸார் மீது துரத்தித் துரத்தி வாள்வெட்டு! – படுகாயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பு

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸார் மீது இனந்தெரியாத இளைஞர்கள் குழுவினரால் துரத்தித் துரத்தி வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் இருவரும் கொக்குவில், பொற்பதி வீதிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் மோட்டார் சைக்கிளில் கண்காணிப்புப் பணியில் சென்றுகொண்டிருந்தபோதே இந்தத் துணிகரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இரண்டு பொலிஸாரும் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 5 மோட்டார்சைக்கிள்களில் வந்த 10 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தித் துரத்தி இந்தத் …

Read More »

நீதிபதி இளஞ்செழியன் மீது திட்டமிட்டே துப்பாக்கிச்சூடு! – வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் தெரிவிப்பு 

“யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைக் கொலைசெய்யும் திட்டத்துடனேயே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது”  என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “நல்லூரில் கடந்த 22ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனே இலக்குவைக்கப்பட்டிருக்கின்றார். அவரது மெய்ப்பாதுகாவலரான சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரே தனது உயிரைக் கொடுத்து நீதிபதியைக் காப்பாற்றியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினரைக் கண்டதும் …

Read More »

தப்புமா ரவியின் பதவி? ஓகஸ்ட் 2இன் பின்பே முடிவு! – நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரச தரப்பிலும் ஆதரவு

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணி கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தேசிய அரசிலுள்ள உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் எதிர்வரும் 2ஆம் திகதி ஆஜராகி வெளிவிவகார அமைச்சர் வாக்குமூலமளிக்கவுள்ளார். அதன்போது அவர் வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே அடுத்தகட்ட நகர்வு அரசியல் களத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக, தேசிய அரசுக்குப் பெரும் …

Read More »

துமிந்தவின் பதவியை பறிக்கவே வேண்டாம்! – அவர் சிறந்த இளம் தலைவர் என்கிறார் அமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிலிருந்து அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை நீக்கவேண்டுமென அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்குரிய தேவைப்பாடு இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். துமிந்த திஸாநாயக்க சிறந்த இளம் தலைவராகச் செயற்பட்டுவருகின்றார் என்று சு.கவின் முக்கியஸ்தரான அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகாக்களுள் ஒருவராகக் கருதப்படும் அமைச்சர் மஹிந்த அமரவீர, …

Read More »

ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது! – துமிந்தவை நீக்குவது சு.கவுக்கு நல்லது என்கிறார் டிலான்

“ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்தும் துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்படவேண்டும்” என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ரவியை நீக்குவது நாட்டுக்கு நல்லது எனவும், துமிந்தவை நீக்குவது கட்சிக்கு நல்லது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “2020இல் தனித்து ஆட்சியமைக்கவேண்டும் என்ற இலக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயணித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், அந்த இலக்கை அடையமுடியாமல் சில தடைகள் …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  என்ன நடந்தது? – உண்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று பரணகம வலியுறுத்து 

“காணாமல்போயிருப்போர் எமது நாட்டின் பிரஜைகள். எனவே, காணாமல்போனோருக்கு என்ன நடந்தது?  அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? என்பது தொடர்பில் கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்.” – இவ்வாறு காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். “காலத்தை கடத்திக் கொண்டிருக்காமல் ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து காணாமல்போனோரின் உறவினர்களின் …

Read More »

மாகாண சபைத் தேர்தல்களின் ஒத்திவைப்புக்கு எதிராக மஹிந்த அணி நீதிமன்றம் செல்ல தீர்மானம்!

மூன்று மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக பொது எதிரணியான மஹிந்த அணி நீதிமன்றம் செல்லவிருப்பதாக தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுத்துமூல அறிவித்தலொன்றை அனுப்பியுள்ளது. பொது எதிரணியின் சார்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வாவின் மூலம் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்வருடத்தின் செப்டெம்பர் /ஒக்டோபர் மாதங்களில் பதவிக்காலம் நிறைவடையவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களும் …

Read More »

25 பக்கங்களாக குறைந்த இடைக்கால அறிக்கை! – அதுவே நாடாளுமன்றுக்கு வரும்

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு தனது இடைக்கால அறிக்கையை 35 பக்கத்திலிருந்து 25 பக்கமாகக் குறைத்து இறுதி செய்துள்ளது. 25 பக்கமாகக் குறைக்கப்பட்ட இடைக்கால அறிக்கையே அரசியல் நிர்ணய சபையில் (நாடாளுமன்றத்தில்) சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரம் வழிநடத்தல் குழுவின் கூட்டம் 3 தினங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் பக்க எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் அதனைக் குறைக்கவேண்டும் என்ற யோசனை இறுதிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. …

Read More »