மாகாண சபைகளுக்குரிய தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்றும், அனைத்து மாகாணங்களிலும் ஒரே தினத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “உள்ளூராட்சி சபைத் தேர்தலானது கலப்புமுறையிலேயே நடத்தப்படும். 70 வீதம் தொகுதிவாரியாகவும், 30 வீதம் விகிதாசார முறைமையாகவும் இருக்கும். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு உள்ளூராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. அதன்பின்னர் தேர்தல் நடத்தப்படும். …
Read More »கொழும்புக்கு இன்று வருகிறது சைட்டம் எதிர்ப்புப் பேரணி! – கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம்
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் நாடளாவிய ரீதியில் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுத்துவரும் பேரணி இன்று கொழும்பை நோக்கி வரவுள்ளது. கண்டியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும் இன்று கொழும்பை வந்தடையும் வகையில் பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் கொழும்பில் சைட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்துக்கு 100இற்கும் அதிகமான …
Read More »ரவியின் கருத்துகள் குழந்தைத்தனமானவை! – சாடுகிறார் விமல் வீரவன்ஸ
“பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துகள் குழந்தைத்தனமானவை” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ எம்.பி. விமர்சித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- “2015 ஜனவரி 8ஆம் திகதி நல்லாட்சி மலர்ந்துவிட்டதாக மார்தட்டியவர்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லையென நாம் சுட்டிக்காட்டினோம். எமது கருத்தை நம்பாது மக்களையும் அவர்கள் தவறாக வழிநடத்தினர். எனினும், இன்று உண்மை அம்பலமாகியுள்ளது. இதனால், …
Read More »ரவிக்குப் பலப்பரீட்சை! – நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு; சு.க. அமைச்சர்களும் கைவிரிக்கும் நிலை
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணி உறுப்பினர்கள் நேற்று நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகத்திடம் குறித்த பிரேரணையைக் கையளித்த மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள், அது விரைவில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி விநியோக மோசடி மற்றும் சொகுசு வீட்டு விவகாரம் உட்பட மேலும் சில விடயங்களை …
Read More »தமிழரசுக் கட்சியை புறந்தள்ளி இடம்பெற்ற ரகசிய சந்திப்பு!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியை தவிர்த்து, ஏனைய பங்காளிக் கட்சிகள் ரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளன. வவுனியா புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில், நேற்று (புதன்கிழமை) இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறையிலான ஆசனம், இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட நிலையில் ஏனைய கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இவ்வாறான …
Read More »மஹிந்த ஆட்சியில் 87 ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டனா்: மங்கள சமரவீர
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் 87 ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டனா் என்றும், 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஊடக ஒடுக்குமுறை கடந்த ஆட்சியில் அதிகமாக காணப்பட்டதென சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள, சில ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லையென மேலும் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கை பத்திரிகை பேரவையின் ஊடகக் கல்வி …
Read More »வடக்கில் திட்டமிட்ட குழப்பநிலையை ஏற்படுத்த சதி?
வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸார் அவசர அவசரமாக முன்னாள் போராளிகள் மீது குற்றஞ்சுமத்துவது, வடக்கில் திட்டமிட்ட குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சட்டத்தரணி சுகாஸ் கனகரட்னம் குறிப்பிட்டுள்ளார். அல்லது முன்னாள் போராளிகளை இலக்குவைத்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்கேதத்தையும் ஏற்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், முன்னாள் போராளிகள் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர …
Read More »அரசியல் கைதிகள் விவகாரம்: சட்டமா அதிபருடன் முதல்வா் சந்திப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சட்டமா அதிபருடன் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துரையாடவுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தாரிடம் வடக்கு முதல்வர் இதனை தெரிவித்துள்ளதோடு, அவர்களை விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் பலர், எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. …
Read More »கோப்பாய் வாள்வெட்டுச் சம்பவம்: மேலும் இருவர் கைது
யாழ். கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகத்தின் பேரில், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்.பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (வியாழக்கிழமை) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நல்லூர் அரசடி வீதியைச் சேர்ந்த முத்து எனப்படும் யோகராசா சதீஸ் மற்றும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த அருள்சீலன் பிரட்றிக் தினேஸ் ஆகிய இருவமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அதனைத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பாதுகாப்புப் …
Read More »யாழில் முப்படைகள் களமிறக்கப்படுவதை ஏற்கவே முடியாது! – கூட்டமைப்பு திட்டவட்டம்
“யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களைக் காரணங்காட்டி முப்படைகளைப் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறியிருந்தார். அது தொடர்பில் கருத்துத் …
Read More »