Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 231)

இலங்கை செய்திகள்

சிறிலங்காவின் அடுத்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன விரைவில் நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பதவி விலகுவார் என்றும், அதையடுத்து, திலக் மாரப்பன அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மத்திய வங்கி பிணை முறி விற்பனை முறைகேடு தொடர்பாக ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரை பதவி விலகுமாறு பல்வேறு தரப்புகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. …

Read More »

யாழ்.குடாநாட்டில் தொடரும் கைதுவேட்டையை உடன் நிறுத்துங்கள்! – ஜனாதிபதி, பிரதமரிடம் கூட்டமைப்பு வலியுறுத்து 

“யாழ்.குடாநாட்டில் இளைஞர்களைக் குறிவைத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் கைதுவேட்டை சில தினங்களாகத் தொடர்கின்றது. இதனை உடன் நிறுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். “யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இவ்வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தும். அதன்போதும் இந்தக் கோரிக்கையை நாம் நேரில் விடுக்கவுள்ளோம்” எனவும் …

Read More »

பரபரப்பான சுழ்நிலையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்! – நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆளும், எதிர்க்கட்சிகள் ஆலோசனை

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற அமர்விலும் அது குறித்து சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. அதற்கு முன்னர் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமும் இடம்பெறவுள்ளது. இது முக்கியத்துவமிக்க சந்திப்பாகக் கருதப்படுகின்றது. வழமையாக நாடாளுமன்றம் ஆரம்பமாவதற்கு …

Read More »

வடக்கு அமைச்சரவை மாற்றத்தின்போது புளொட்டுக்குரிய பதவி யாருக்கு?

மாற்றியமைக்கப்படும் வடக்கு மாகாண அமைச்சரவையில் புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால், அந்தக் கட்சி சார்பில் யாருக்கு அதனை வழங்குவது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளது. வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்றும், இதன்போது, புளொட்டுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி கிடைக்கப் பெற்றால் அந்தக் கட்சி சார்பில் யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளது …

Read More »

வடக்கு அமைச்சரவையில் அனந்தி, சர்வேஸ்வரனின் பதவிகள் நிரந்தரமாகும்!

வடக்கு மாகாண புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், கூட்டுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட திருமதி அனந்தி சசிதரன் மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட க.சர்வேஸ்வரன் இருவருக்கும் பதவிகள் நிரந்தரமாக்கப்படும் என்று தெரிகின்றது. மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாகவே அவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். எனினும், மாகாண சபையின் எஞ்சிய காலப் பகுதிக்கும் அவர்கள் அமைச்சர்களாகத் தொடர்வார்கள் என்று கூறப்படுகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் …

Read More »

விக்கிக்குக் கீழ் அமைச்சராக இருப்பதற்கு விரும்பவில்லை! – பதவி விலகிய சத்தியலிங்கம் தெரிவிப்பு 

வடக்கு மாகாண சுகாதா அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவி விலகியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடனேயே அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார் என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதால் அவருக்குக் கீழ் ஓர் அமைச்சராக இருக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். “கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு நான் எனது பதவியிலிருந்து விலகுகின்றேன்” என்று தெரிவித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அவர் …

Read More »

யாழில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு!

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேசிய மாநாடு நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் தலைமையில் மேற்படி மாநாடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட.மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் சிறீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Read More »

இலங்கையை ஒருபோதும் பாதுகாப்புத்தளமாக சீனா பயன்படுத்தாது: சீன தூதுவர்

இலங்கையை தாம் ஒருபோதும் பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப் போவதில்லை என இலங்கைக்கான சீன தூதுவர் Yi Xianliang தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்காக சீனா தனது உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் சீனா இலங்கையில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பதை அவதானித்தால் இதனை அறிய முடியும் என்றும் கூறினார். இலங்கையில் சீன …

Read More »

கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி வடக்கில் 6000 பொருத்து வீடுகள்!

வடக்கு மாகாணத்தில் 6000 பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. வட.மாகாணத்திற்கு பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சா் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை எடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட.பகுதிக்கு பொருத்தமில்லை எனத் தெரிவித்து அதனை எதிர்த்திருந்தது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் வழக்குதாக்கல் செய்துள்ளதுடன், வடக்கு மாகாண சபையும் பொருத்து வீட்டினை எதிர்த்து வருகின்றது. இந்நிலையில், வடக்கில் …

Read More »

வடக்கு மாகாண அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்தது தமிழரசுக் கட்சி! – முதலமைச்சரின் பழிவாங்கும் செயலை அடுத்து சீற்றம் 

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பழிவாங்கும் வகையில் செயற்படுகின்றார் என்பதனால் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படும்போது அதில் எந்தப் பதவியையும் பெறுவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றது தமிழரசுக் கட்சி. அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் நேற்று யாழ். நகரில் கூடி இந்த முடிவை எடுத்தனர். சுமார் ஒன்றரை மணி நேர விவாதத்துக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டது. தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் …

Read More »