தமது பூர்வீக பூமியான இரணைதீவை ஆக்கிரமித்து தங்கள் வீடுகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அங்கிருந்து வெளியேறி அரச காணிகளுக்கு செல்லவேண்டுமென இரணைதீவு மக்கள் குறிப்பிடுகின்றனர். அருகிலுள்ள அரச காணிகளில் கடற்படையினர் குடியிருப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றும், தம்மை தமது சொந்த நிலத்தில் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இரணைதீவைச் சேர்ந்த அமிர்தநாதன் அந்தோனி என்ற மீனவர் குறிப்பிட்டுள்ளர். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நடத்தப்பட்ட செய்தியாளர் …
Read More »அரசாங்கத்தின் செயற்பாடுகள் போதுமானதல்ல: சம்பந்தன்
காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்கள் போதுமானதல்லவென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக, பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, எதிர்க்கட்சித் தலைவரை இன்று (புதன்கிழமை) சந்தித்தது. இதன்போதே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, காணிகளை விடுவித்தல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகளும் மந்த கதியிலேயே செல்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் …
Read More »வடக்கு மாகாண தமிழரசுக் கட்சியினரை அவசர கூட்டத்துக்கு இன்று கொழும்புக்கு சம்பந்தன் அழைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் அமைச்சரவை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அந்த மாகாண சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரையும் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெறும் அவசர கூட்டமொன்றில் பங்குபற்றுவதற்கு வருமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைத்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா சார்பில் அவரது செயலாளர் இந்தக் கூட்டம் தொடர்பான …
Read More »வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் பலி; மூவர் படுகாயம்
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடைந்தனர். வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக பிற்பகல் 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு விமானநிலையத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த ஹையேஸ் வாகனமும், கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனமும் விபத்துக்குள்ளாகின. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காந்தன் (வயது – 56) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் ஹையேஸ் வாகனத்தைச் செலுத்தி வந்தார் என்று கூறப்பட்டது. …
Read More »அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படுமா? இல்லையா? – சபாநாயகர் தீர்மானம் நாளை அறிவிப்பு
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது முடிவை நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளார். இது விடயம் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட்டே தீர்மானம் அறிவிக்கப்படும் என்று அவர் நேற்றுத் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல …
Read More »ரவி குறித்து ஜனாதிபதியின் முடிவு இரண்டு வாரத்தில் வெளியாகும் என்கிறது சு.க.
“சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் மற்றும் சொகுசு வீடு தொடர்பில் விசாரணைகளில் சிக்கியுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் இரண்டு வாரங்களில் தனது தீர்மானத்தை ஜனாதிபதி அறிவிப்பார்” என்று விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரச விவசாய அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “பிணைமுறி மோசடி தொடர்பில் …
Read More »பிணைமுறி மோசடிக்கான முழுப்பொறுப்பையும் ரணிலே ஏற்கவேண்டும்! – ஜே.வி.பியின் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டு
இலங்கை மத்திய வங்கியின் பாரிய பிணைமுறி மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உடனடியாகப் பதவி விலகுவதுடன் இந்த மோசடிக்கான முழுப்பொறுப்பையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஏற்கவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மத்திய வஙகியின் ஆளுநர் பதவியை ரணில் விக்கிரமசிங்க தனது உயிர்த் தோழனான அர்ஜுன் மகேந்திரனுக்கு பெற்றுக்கொடுத்தார். அதன் …
Read More »வித்தியா கொலை விவகாரம்: இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம்!
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியமை தொடர்பாக, இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்த் தெரிவித்துள்ளார். யாழில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார், கொழும்பிற்கு தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கு, யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகிய அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்த், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் …
Read More »செஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
செஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (14-08-2016) இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேற்படி நிகழ்வுகள் வள்ளிபுனம், முல்லைத்தீவில் (தாக்குதலுக்கு உள்ளான செஞ்சோலை வளாக வீதி) இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் செஞ்சோலை சிறுமிகள் காப்பகம் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா வான் படையினர் நடாத்திய குண்டுத் …
Read More »வவுனியா வளாகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு
வவுனியா வளாகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு நாளை (09.08.2017) நடைபெற உள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா வளாகத்தில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே குறித்த ஆய்வு மாநாடு நாளை காலை 9.00 மணிக்கு பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபற்றி குறிப்பிடுகையில், நாளை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி க.கோப்பெரும்தேவியின் ஏற்பாட்டில் சர்வதேச ஆய்வு …
Read More »