Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 229)

இலங்கை செய்திகள்

பீரங்கியை சுமந்தவர்களுக்கு கத்தியை சுமக்கவேண்டிய அவசியம் இல்லை: முன்னாள் போராளிகள்

பீரங்கிகளையும் செல்களையும் தோளில் சுமந்து சென்று தாக்குதல் நடத்தி ஜனநாயக பாதைக்கு வந்துள்ள முன்னாள் போராளிகளுக்கு, கத்திகளுடன் அலைய வேண்டிய தேவையில்லையென ஜனநாயக போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் எஸ்.துளசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆவா குழு என்ற பெயரில் முன்னாள் போராளிகளே செயற்படுகின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், …

Read More »

குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் 87 பேர் கைது

யாழ். குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல்களில் இதுவரை 87 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓகஸ்ட் 4ஆம் நாள் தொடக்கம், ஓகஸ்ட் 7ஆம் நாள் காலை 7 மணி வரை யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய், நெல்லியடி, மானிப்பாய், பருத்தித்துறை காவல் நிலையப் பகுதிகளில், இந்த தேடுதல்கள் நடத்தப்பட்டன. சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி …

Read More »

திலக் மாரப்பனவுக்கு பதில் வெளிவிவகார அமைச்சர் பதவி?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க நேற்று விலகியதை அடுத்து, பதில் வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் நிலவுகின்றன. ரவி கருணாநாயக்கவின் பதவி விலகலை அடுத்து வெளிவிவகார அமைச்சர் பதவி வெற்றிடமாக உள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் நியமிக்கப்படும் வரையில், இந்த அமைச்சை சிறிலங்கா அதிபரே கவனித்துக் கொள்வார். அதேவேளை, பதில் வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படுவதற்கு …

Read More »

யாழ். குடாநாட்டில் கடற்படை கொமாண்டோக்கள் களமிறக்கம்

யாழ். குடாநாட்டில் கடலோரக் காவல்படைக்கு உதவியாக, சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கமைய, கடந்த 7ஆம் நாள் பருத்தித்துறைக்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர், கடற்படை கொமாண்டோக்களின் உதவியுடன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மண் ஏற்றப்பட்ட நிலையில் இருந்த உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை …

Read More »

தீவக பகுதியில் அதிபர்கள் இன்றி பல பாடசாலைகள்: சிறிதரன்

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக தீவக வலயத்திலுள்ள பல பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றதென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். இன்றைய (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில், சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதிபர் இல்லாத பாடசாலைகளில் அதிபர்களின் கடமையை நிறைவேற்றும் ஆசிரியர்களுக்கு, மிகைநிரப்பு அதிபர்கள் என பெயரிட்டு அவர்களுக்கு எவ்வித சம்பள உயர்வோ பதவி …

Read More »

வித்தியா கொலை வழக்கு: விஜயகலாவிடம் விசாரணை

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) மாலை பல மணிநேரங்கள் விஜயகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விசாரணை அறிக்கை, எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த வழக்கு விசாரணையின் போது, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். மாணவி வித்தியா கொலையுண்ட …

Read More »

தமிழ்நாட்டு போராட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை: மஹிந்த அமரவீர

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் தமிழக மீனவர்களையும் தடுத்து வைக்கப்படும் படகுகளையும் விடுவிக்குமாறு தமிழ் நாட்டில் எவ்வித போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அரசாங்கம் தனது கொள்கையிலிருந்து மாறுபடாதென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாண்டு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால், கடல் வளம் பாதிக்கப்படுவதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட …

Read More »

அரசியல் சாசனத்தில் அடிப்படை கோரிக்கைகள் நிராகரிப்பு: சுரேஸ்

உத்தேச அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி கோரிக்கை என்பன நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் குரல்கொடுத்து வருகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார். யாழில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில், வடக்கு …

Read More »

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொருவரும் கைது

கொக்குவிலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த மற்றொருவரையும் நேற்று கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. தெல்லிப்பழையைச் சேர்ந்த சந்திரநாதன் ரஜிதரன் என்பவரே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே, இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவருடன் சேர்த்து, கொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புபட்டிருந்த 11 பேரை இதுவரை கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறையினர் …

Read More »

மட்டக்களப்பில் மணல் அகழ்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மணல் அகழ்வைக் கண்டித்தும், வனப் பகுதிகளில் மரம் வெட்டுவதை தடுக்குமாறு கோரியும் மட்டக்களப்பு – வேப்பவெட்டுவான் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலுப்பையடிச்சேனை, வேப்பவெட்டுவான் மற்றும் பாலர்சேனை கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்றன. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பிரதேசத்தில் 45 பேருக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை 9 மணல் வியாபாரிகள் நடத்துகின்றனர். நாங்கள் வறுமையில் வாடும் …

Read More »